ஆன்மீகத் தளம்

அச்சாணியே இல்லாமல் இரண்டு வருடம் நின்றிருந்த தேரின் தரச் சான்றிதழ் பெறாமல்  தேரோட்டம் நடத்தியதால் பெரும் விபத்து நடந்ததாக அதிர்ச்சி வீடியோ! அலட்சியப் போக்காக இருந்த அதிகாரிகள்  ஊழியர்கள் மீது குற்றச் சாட்டு!!   புதுக்கோட்டை அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!on YouTube

புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் அருள்மிகு ஸ்ரீ கோர்கனேஸ்வரர் பிரகதாம்பாள் ஆலயத்தில் ஆடி மாத ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர் திருவிழாவில் தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக தேர் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது! இந்த விபத்தில் தேருக்கடியில் சிக்கிய எட்டுக்கும் மேற்ப்பட்டவர்களுக்கு படுகாயம் அடைந்தனர்.அவர்கள் அனைவரையும் உடனே  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது! 65 வயது பெண் ராஜகுமாரி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் தேர் விபத்துக்குள்ளானது பற்றி பல அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது!

புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் அருள்மிகு ஸ்ரீ கோர்கனேஸ்வரர் பிரகதாம்பாள் ஆலய தேரோட்ட விபத்து!
உயிரிழந்த பெண் ராஜகுமாரி வயது 65

இந்த ஆடி மாத தேர் திருவிழாவின் தேரோட்டம் நிகழ்ச்சியை நடத்துவதற்காக புதுக்கோட்டை அறநிலையத்துறையின். மேற்பார்வையாளரராக இருக்கும்  மாரிமுத்து  நியமிக்கப்பட்டு இருந்தார்

இரண்டு வருடங்களாக பராமரிப்பு இன்றி ஒரே இடத்தில் நின்று இருந்த தேரின் உறுதித் தன்மை எவ்வாறு உள்ளது மற்றும் தேரில் உள்ள குறைகள் மற்றும் தேரில் உள்ள சக்கரங்களுக்கு கிரீஸ் பேக்கிங் மற்றும் சக்கரத்தில் உள்ள பிரதான அச்சாணி இவைகளை எல்லாம் சரிபார்த்து அதன் பின் தேரை வெள்ளோட்டம் செய்த பிறகு பொதுப்பணித்துறையினரிடம் தேரின் தரச் சான்றிதழ் பெற்ற பின்பு தேரோட்டம் நடத்தி இருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார் சமூக ஆர்வலர்,!

சமூக ஆர்வலர் புதுக்கோட்டை

ஆனால் இதையெல்லாம் எதுவுமே செய்யாமல்  அரசை ஏமாற்றும் வகையில் அறநிலையத்துறையின் ‘அதிகாரிகள் அவசரம் அவசரமாக தேர்த்திருவிழாவை நான்கே நாட்களில் ஏற்பாடுகள் செய்து தேரோட்டம் நடத்தியதால்  இரண்டு வருடம் ஒரே இடத்தில் நின்ற தேரின் இடது சக்கரம் சுற்றாமல் மற்றும் தேர் இழுப்பதற்காக நைலான் கயிறுகள் பயன்படுத்தியதால் பிடிமானம் இல்லாமல் தேர் நிலை தடுமாறி கீழே கவிழ்ந்து சுமார் 8 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .இதில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றார். இதை அறிந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனே சம்பவ நடந்த இடத்திற்கு வந்து விபத்து நடந்திருக்கா என்ன காரணத்தை கேட்டறிந்தார் மற்றும் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அமைச்சரிடம் கேட்டதற்கு விபத்து குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீண்டும் தேரோட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அதிகாரிகள் தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் மீது பழி போடும் நோக்கத்தில் தேரின் சக்கரத்தில் வேகத்தை குறைப்பதற்காக  கட்டை போட்டதால் தான் தேர் கீழே கவிழ்ந்து விழுந்ததாக விசாரணையில் தெரிவித்தனர். அதிகாரிகள் தெரிவித்ததன் பெயரில் ஊழியர்கள் மேல் திருக்கோகரணம் காவல்துறையினர் FIR வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

அறநிலை துறை அதிகாரிகள் செய்த தவறை மறைப்பதற்காக அப்பாவி ஊழியர்கள் மேல் வழக்கு போடுவதா என்று அப்பகுதி மக்கள் எல்லோரும் அறநிலையத்துறை அதிகாரிகள் மேல் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தின் மேல் அவநம்பிக்கை ஏற்படும் வகையில் தவறு செய்த அறநிலையத்துறை அதிகாரிகள் மீது  தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு  அவர்கள் நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் தேரோட்ட நிகழ்ச்சியின் மேற்பார்வையாளராக இருந்த மாரிமுத்து மற்றும் கோவில் செயலர் EO ராமமூர்த்தி இரண்டு பேரையும் பணியிட நீக்கம் செய்துள்ளது இந்து சமய அறநிலை துறை. ஆனால் தேர் நல்ல நிலையில் இருப்பதாக தரச் சான்றிதழ் கொடுத்த பொதுப்பணித்துறை அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தான் இந்த விபத்திற்கு முதல் குற்றவாளி என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button