அடிப்படை வசதி கேட்டு 25 வருடங்களாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றாத அதிசய கிராமம்! கைவிட்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள்!? சுதந்திர தின விழாவில் கொடியேற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
நீலகிரி (ஆங்கிலம்: Blue Mountains ) என்பது தமிழ்நாடு , கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் எல்லைகளில் பரந்து விரிந்து கிடக்கும் மலைத் தொடருக்குப் பெயர் . நீலகிரி மலைகள் மேற்கு தொடர்ச்சி மலைகள் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மலைச் சங்கிலியின் ஒரு பகுதியாகும் . அவற்றின் உயரமான இடம் தொட்டபெட்டா மலை , உயரம் 2,637 மீ. இம்மாவட்டம் முக்கியமாக நீலகிரி மலைத் தொடரில் அமைந்துள்ளது. நிர்வாகத் தலைமையகம் ஊட்டியில் (ஊடகமுண்ட் அல்லது உதகமண்டலம்) அமைந்துள்ளது . இம்மாவட்டத்தின் எல்லைகள் தெற்கே கோயம்புத்தூர் , கிழக்கே ஈரோடு மற்றும் கர்நாடகாவின் சாமராஜ் நகர் மாவட்டம் மற்றும் வடக்கே கேரளாவின் வயநாடு மாவட்டங்கள் . தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் சந்திப்பில் அமைந்துள்ளதால், கணிசமான மலையாளி மற்றும் கன்னடிகர் மக்கள் இந்த மாவட்டத்தில் வசிக்கின்றனர். [2] நீலகிரி மாவட்டம் தங்கத்தின் இயற்கை சுரங்கங்களுக்கு பெயர் பெற்றது , இது அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவிலும் நீட்டிக்கப்பட்டுள்ள நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் மற்ற பகுதிகளிலும் காணப்படுகிறது .
இந்த இடம் அதன் அடிவாரத்தில் வறண்ட இலையுதிர் காடுகள், சரிவுகளில் அடர்ந்த பசுமையான காடுகள் மற்றும் மேலே குன்றிய காடுகள் மற்றும் புல்வெளிகளின் மொசைக் ஆகியவற்றின் அடுக்கு வீடு. 1800 மீட்டர் வரை அரணாக உயர்ந்து, ஒரு காலத்தில் ஊடுருவ முடியாத மாவட்டம். இப்போது, நிலப்பரப்பு முற்றிலும் வேறுபட்ட கதையை நெசவு செய்கிறது. தற்போது, பிரித்தானிய செல்வாக்கு தேயிலை தோட்டம் மற்றும் வெப்பத்தை தணிக்கும் ரிசார்ட்டுகள் போன்ற உயர்தர சிகரங்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டுள்ளது. ஆனால் நவீன வளர்ச்சிகள் இருந்தபோதிலும், நீலகிரி பழங்குடியினர் பாக்கெட்டுகளில் பிரகாசிக்கிறார்கள் மற்றும் இயற்கையின் பரவசத்தை பாதுகாக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் தொகை கணிசமாகக் காணப்படுகிறது. பாரம்பரியமாக இருந்து வரும் ஆதிவாசிகள் அதிகம் உள்ளதாக கூறுகின்றனர். தோடாக்கள், இருளர்கள், கோட்டாக்கள், குரும்பாக்கள், பணியர்கள் மற்றும் காட்டுநாயக்கன். தொதவர் எனப்படும் தோடர், கோத்தர், நாயக்கர் போன்ற பழங்குடியினர் உள்ளனர். .2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில் சுமார் 7.5 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இதில், பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம். உதகை நகராட்சியில் 394 பேர், குன்னூர் நகராட்சியில் 122 பேர், உதகை வட்டத்தில் 4 ஆயிரத்து 329 பேர், குன்னூர் வட்டத்தில் 2 ஆயிரத்து 397 பேர், கோத்தகிரி வட்டத்தில் 6 ஆயிரத்து 197 பேர், கூடலூர் வட்டத்தில் 15 ஆயிரத்து 450 பேர் என மொத்தம் 28 ஆயிரத்து 889 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.தோடர் – 29.52 சதவீதம், கோத்தர் – 32.71 சதவீதம், குரும்பர் -18.13 சதவீதம், முள்ளுக்குரும்பர் – 38.15 சதவீதம், இருளர் – 21.78 சதவீதம், பனியர் – 11.27சதவீத, காட்டுநாயக்கர் – 9.03 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா கேத்தி கிராமம் ஹாலன் நகர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட சமுதாய சார்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் கட்டி கொடுக்கப்பட்ட வீட்டுக்கு 3 முறை பட்டா வழங்கப் பட்டது.
ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக இந்த கிராம பொதுமக்கள் சாலை வசதி கேட்டு போராடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அங்கு வசிக்கும் மக்களுக்கு அடிப்படை தேவையான எந்த வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். முக்கியமாக கர்ப்பினி பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் தாங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் தொட்டில் கட்டி இரண்டு கிலோமீட்டர் வரை தூக்கிச் செல்லும் அவலம் தொடர்ந்து உள்ளது.அது மட்டும் இல்லாமல் இவர்களின் குழந்தைகள் பெரும் சிரமத்துக்கிடையே கல்வி பெறுகின்றனர். வனப்பகுதியை ஒட்டி வாழ்விடங்கள் அமைந்துள்ளதால், மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர சாலை வசதி இல்லாமல் வன விலங்குகளுக்கு மத்தியில் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று திரும்ப வேண்டியுள்ளது.அச்சுறுத்தும் காட்டு மாடுகள் கரடி மற்றும் சிறுத்தைகளால் வழி செல்லும் மாணவர்களை அவ்வப்போது அச்சுறுத்தி வருவதால் மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், போதுமான வாகன வசதி இல்லாததால், பெரும்பாலானோர் நடந்தே பள்ளிக்கு சென்றுவரும் நிலை உள்ளது.பழங்குடியின கிராமம். வனத்தை ஒட்டிய பகுதி என்பதால், இந்த கிராமத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மாலை வேளைகளில் கூட மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையில், குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.
“பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்பும் வரை அச்சத்துடன் காத்திருப்போம். பல நேரங்களில் தேர்வெழுதக் கூட போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆகையால் இந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து 70 ஆண்டுகளாக தங்களது அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி கோரிக்கை மனு கொடுத்தும்
எந்த அரசு அதிகாரிகளும் செவிசாய்க்கவில்லை என்றும் இதனால் கிராமம் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சாலைமறியல் உன்ணனாவிரதம் காத்திருப்பு போராட்டம் செய்தும் எந்த நடவடிக்கையும் அரசு அதிகரிகளோ அரசியல்வாதிகளோ எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன? இவர்களை தடுப்பது யார்!?தாழ்த்தப்பட்ட பிரிவிணை சார்ந்த மக்கள் என்பதனாலா? என அப்பகுதியில் புலனாய்வு செய்ததில் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர் அப்பகுதி மக்கள். அது என்னவென்றால் கேத்தி கிராமத்தில் ஆங்கிலேயர் காலத்தில் 100 வருடத்திற்கு முன்பு இருந்தே பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை (board committee) தனியார் வாரிய குழு நிர்வகித்து வருகின்றது.ஆங்கிலே இந்தப் பள்ளியின் மொத்த நிலப்பரப்பு சுமார் 300 ஏக்கர் இருக்கும் .இதில் சுமார் 30 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் இருக்கும். இந்த 30 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து செய்து வைத்து சுற்றுச் சுவர் கட்டி கம்பி வேலி அமைத்து பொது மக்கள் யாரையும் அந்த வழியில் அனுமதிக்காமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தனியார் வசம் உள்ள அந்த அகிரமிப்புசெய்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினர் நிலத்தை எடுத்து அந்த நிலத்தின் வழியாக சாலை அமைக்க முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள் .ஆனால் நீலகிரி மாவவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் பல லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மெத்தனம் போக்கை கடைபிடித்து வருகிறார்கள் .எது எப்படியோ அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. தங்களது அடிப்படை வசதி கேட்டு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்று விடை தெரியாத அந்த கிராமத்தில் வசிக்கும் அப்பாவி மக்களின் கண்ணீரைத் துடைக்க இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது போல் இந்த கிராமத்திற்கு எப்போது சுதந்திரம் கிடைக்குமோ .அப்போது தான் அந்த கிராமத்தில் சுதந்திர தின விழாவில் கொடியேற்றுவார்கள் என அப்பகுதுமக்களின் அதங்கமாக உள்ளது.