தொலைபேசியில் மிரட்டிய அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் நாகராஜன் ஐஏஎஸ் மீது தேசிய பட்டியலின ஆணையத்தில் செந்தாமரை ஐஏஎஸ் புகார்!
30 வருடமாக சேப்பாக்கம் எழிலகத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை பழிவாங்கும் நோக்கத்தில்( Commissioner, Land Administration, Chepauk, )உடனே காலி செய்யுமாறு நாகராஜன் ஐஏஎஸ் மிரட்டியதால்
தேசிய பட்டியல் இனத்தவருக்கான ஆணையத்தில் புகார்!
தற்பொழுது அரசுபொதுத் துறை செயலாளர் ஜெகநாதன்.IAS மற்றும்
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் இரண்டு பேரின் பெயர்களை பயன்படுத்தி தற்போது அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறாரா தற்போது நில நிர்வாகத் துறை ஆணையராக இருக்கும்
(Additional Commissioner, Land Administration
நாகராஜன் ஐஏஎஸ் அவர்கள் மீது வந்துள்ள குற்றச்சாட்டுகள்!?
.2020 ஆம் ஆண்டு ADC (C&I)I/C cinima & irrigation திரைப்படம் மற்றும் பாசானாம் இணை ஆணையராக இருந்த கற்பகம் IAS அவர்களிடம் நிலம் தொடர்பான ஆவணங்களுக்கு கூடுதல் ஆணையர் மற்றும் ஆணையர் அவர்கள் கூறியபடி கோப்புகளில் கையெழுத்து போட்டு உத்தரவு பிறப்பிக்குமாறு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் நாகராஜன் ஐஏஎஸ் என்ற குற்றச்சாற்று எழுந்தது.
செந்தாமரை ஐஏஎஸ் இணை ஆணையர் அவர்களை நேர்மையாக தன்னிச்சையாக கோப்புகளை சரிபார்க்க விடாமல் ஆணையர் நாகராஜன் ஐஏஎஸ் அவர்கள் உத்தரவு பிறப்பித்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு!
District Collector, Kanniyakumari District
Jan 2012 – Sep 2012 years 9 months
Kanyakumari நாகராஜன் IAS இருந்தபோது
இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கன்னியாகுமரி சக்கரவர்த்தி திரையரங்கிற்கு உரிமம் வழங்கியது தவறு என்றும் அந்த உரிமத்தை ரத்து செய்ததும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த நாகராஜன் ஐஏஎஸ் தான்.
அதன்பின் சக்கரவர்த்தி திரையரங்க உரிமையாளர் நீதிமன்றம் சென்று வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆனால் தற்போது நில நிர்வாக துறையின் ஆணையராக நாகராஜன் இருப்பதால் கன்னியாகுமரி சக்கரவர்த்தி திரையரங்கு உரிமம் ( c form )
கோப்புகளை இணை ஆணையர் செந்தாமரை அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை செய்து திரையரங்கு உரிமம் ரத்து செய்தது சரிதான் என்று விசாரணை செய்த அறிக்கையை தயார் செய்த நிலையில் அந்த அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் 10/01/2022 அன்று (12.15 Pm ) செந்தாமரை ஐஏஎஸ் அவர்களை தரக்குறைவாக பேசியது இல்லாமல் ( get out office room) என்று மிரட்டியதாகவும் தகவல் வெளியானது. அதன் பின்னர்
செந்தாமரை ஐஏஎஸ் இணை ஆணையர் அவர்களை அலுவலகத்தில் நேர்மையாக தன்னிச்சையாக கோப்புகளை சரிபார்க்க விடாமல் ஆணையர் நாகராஜன் ஐஏஎஸ் அவர்கள் உத்தரவு பிறப்பித்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில்
வருவாய்த்துறை கட்டிடத்தில் 1988 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆண்டு வரை 30 வருடங்களாக திரைப்படம் மற்றும் பாசனம் துறை CLA (commissioner of land administration )கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்தத் துறையில் இணை ஆணையராக செந்தாமரை ஐஏஎஸ் அவர்கள் பணியாற்றி வந்தார் . இந்தத் துறையில் உதவி ஆணையர் மற்றும்( superintendend, steno , office assistant driver) உட்பட 10 பேர் இந்த துறையில் பணி செய்து வந்தார்கள். இந்த பத்து பேரையும் இடம் மாற்றம் செய்து
கடந்த 28 /11 /2022 ஆம் தேதி revenue disaster management department ) வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு மாற்றி நாகராஜன் ஐஏஎஸ் .
செந்தாமரை ஐஏஎஸ் அவர்களை பழி வாங்கும் நோக்கத்தில் தன்னிச்சையாக அதிகார துஷ்பிரயோகம் செய்து உத்தரவு போட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
30 வருடங்களாக CLA நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த துறையை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு மாற்றியதால் இணை ஆணையர் செந்தாமரை ஐஏஎஸ் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செந்தாமரை ஐஏஎஸ் அவர்கள் பட்டியல் சமூகத்தை
சேர்ந்தவராக இருப்பதால்( National Commission for Scheduled Castes) தேசிய பட்டியல் இனத்தவருக்கான ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது இந்த புகார் மீது தேசிய பட்டியல் இனத்தவருக்கான ஆணையம் கடந்த வாரத்திலிருந்து விசாரணை நடந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த நேரத்தில் சென்னை சேப்பாக்கம் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எழிலகத்தில் முப்பது வருடமாக இயங்கி வரும் (ADC (C&I)I/C cinima & irrigation)திரைப்படம் மற்றும் பாசானம் துறை சம்மந்தமான அலுவலகத்தை உடனே காலி செய்யுமாறு செந்தாமரை ஐ ஏ எஸ் இணை ஆணையர் அவர்களிடம் நாகராஜன் ஐ ஏ எஸ் தொலைபேசியில் மிரட்டும் தோணியில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் ஆடியோ பரவி வருகிறது.
இது சம்பந்தமாக எழிலகத்தில் விசாரித்த போது நாகராஜன் ஐ ஏ எஸ் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தபோது ஒரு திரையரங்கத்தின் உரிமம் ரத்து செய்துள்ளார். தற்போது அந்த உரிமத்தை மீண்டும் வழங்க நாகராஜன் ஐஏஎஸ் அவர்களே இணை ஆணையராக இருக்கும் செந்தாமரை ஐஏஎஸ் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கு செந்தாமரை ஐஏஎஸ் அவர்கள் மறுத்ததாகவும் இதனால் பழிவாங்கும் நோக்கத்தில் நாகராஜன் ஐ ஏ எஸ் தற்போது தன்னிச்சையான நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வருவாய்த் துறையில் பணி செய்யும் சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் ஐஏஎஸ் பதவியில் இருக்கும் ஒருவரை வேறு துறைக்கு மாற்றும் போது பொது அரசு ஆணை வழங்க வேண்டும் ஆனால். நாகராஜன் ஐ ஏ எஸ் போட்டோ உத்தரவு சட்டத்துக்கு விரோதமானது என்றும் இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செந்தாமரை ஐஏஎஸ் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
நாகராஜன் ஐ ஏ எஸ் மூன்று துறைகளில் சிறப்பு செயலாளராகவும் பணி செய்து வருகிறார். ஆனால் நாகராஜன் ஐ ஏ எஸ் இதற்கு முன்பு எந்த துறைகளிலும் 12 மாதம் முழுமையாக பணி செய்ததில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் இவர் மீது திமுக எதிர்க்கட்சியா இருக்கும் போது கோயம்பேட்டில் ஐந்து ஏக்கர் பாசியம் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு அரசு நிலமாற்றம் செய்து கொடுத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது விசாரணை நடந்து வருவதும் அதில் நாகராஜன் ஐ ஏ எஸ் விசாரணைக்கு சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ கடந்த ஆட்சியில் நாகராஜன் ஐ ஏ எஸ் மீது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அவர் அவர் இருக்கும் துறையில் முறைகேடு நடந்ததாக வழக்குத் தொடுத்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதே நாகராஜன் ஐ ஏ எஸ் க்கு பல துறைகளில் முக்கிய பொறுப்புகள் வழங்கி முக்கியத்துவம் காட்டுவதற்கு என்ன காரணம்!? யார் நாகராஜன் ஐ ஏ எஸ் க்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள்!? என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
ஆகவே நாகராஜன் ஐ ஏ எஸ் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
(அதிமுக ஆட்சியில் மறைக்கப்பட்ட ஊழல்!500 கோடிரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் எங்கே!!? சென்னை சிட்டியில் 4 ஏக்கர் நிலத்தை இடமாற்றம் என்ற உத்தரவின் பெயரில் தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்த நில நிர்வாகத் துறை ஆணையர் நாகராஜன் IAS??? நிலத்தை மீட்டு எடுப்பாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்!?
editorFebruary 9, 20220 575 6 minutes read
அரசுபொதுத் துறை செயலாளர் ஜெகநாதன்.IAS மற்றும்
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் இரண்டு பேரின் பெயர்களை பயன்படுத்தி தற்போது அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறாரா தற்போது நில நிர்வாகத் துறை ஆணையராக இருக்கும் நாகராஜன் ஐஏஎஸ்!??
Additional Commissioner, Land Administration
Jun 2020 – Mar 2021
10 monthsநில நிர்வாகத் துறை ஆணையராக இருந்த நாகராஜன் ஐஏஎஸ் அவர்கள் மீது வந்துள்ள குற்றச்சாட்டுகள்!?
நாகராஜன் ஐஏஎஸ்
நில நிர்வாக துறை ஆணையராகஇருந்த போது
கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஈபிஎஸ் முதல்வராக இருந்தபோது ஓபிஎஸ் வீட்டு வசதி வாரிய அமைச்சராகவும் ,ஆர் பி உதயகுமார் வருவாய் துறை அமைச்சராகவும், இருந்தபோது நடந்த ஊழல்களில் மெகா ஊழல் கோயம்பேடு கிராமத்தில் இடமாற்றம் செய்தது தான்.அப்போது இருந்த நில நிர்வாகத் துறை இன்சார்ஜ் ஆணையராக இருந்த பங்கஜ் பன்சால் ஐஏஎஸ்( மின்சார வாரிய சேர்மன்) .மற்றும் அடிஷனல் ஆணையராக இருந்த நாகராஜன் ஐஏஎஸ் இவர்கள் 5 பேர் சேர்ந்து சதி திட்டம் தீட்டி கோயம்பேடு கிராம நத்தத்தில் உள்ள 4 ஏக்கர் இடத்தை (மதிப்பு 500 கோடி)முறைகேடாக நிலைமாற்றம் உத்தரவு பிறப்பித்து ஊழல் நடந்துள்ளதாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கட்சி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது.(சென்னை கோயம்பேடு கிராமத்தில் கிராம நத்தம் இடம் 4 ஏக்கர் (72 கிரவுண்ட் )அந்த இடத்தின் மதிப்பு சுமார் ஒரு கிரவுண்ட் 6 கோடி ரூபாய் இருக்கும்.
அப்படியென்றால் 72 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு சுமார் 500 கோடியை ரூபாய் என்கிறார்கள் கோயம்பேடு பகுதியில் உள்ள மக்கள்.)
(1) சென்னை கோயம்பேடு கிராமத்தில் கிராம நத்தம் இடம் நான்கு ஏக்கர் நிலத்தை ( Koyambedu village,Aminjikarai taluk Chennai dist., R.S no.151 Town survey no.9,10,11,12,13,14,15,16,17,18&19 block no.35 extent 3.45 acres )தனியார் கட்டுமான நிறுவனமான பாஷ்யம் கட்டுமான நிறுவனத்திற்கு நிலம் மாற்றம் என்ற உத்தரவை பிறப்பித்தது போல அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக நில நிர்வாகத்துறை செயலாளர் நாகராஜன் ஐஏஎஸ் செயல்பட்டதால் அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு !! என்ற அதிர்ச்சித் தகவல்! இது சம்மந்தமாக நிலம் நிர்வாகத் துறை அலுவகத்தில் விசாரித்த போது இந்த நிலம் மாற்றம் உத்தரவு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நவம்பர் மாதம் (2021 ) இந்த நிலம் மாற்றம் முறைகேடு சம்பந்தமாக விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையில் ஆஜரான நாகராஜன் IAS ஏற்கனவே நிலம் மாற்ற உத்தரவை ரத்து செய்து மறு உத்தரவு பிறப்பித்து அனுப்பியதாக விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வந்துள்ளது.ஆனால் நடந்த உண்மை சம்பவம் குறித்து களத்தில் இறங்கி விசாரித்த போது கோயம்பேடு கிராம நத்தம் நான்கு ஏக்கர் நிலத்தை பாஷியம் கட்டுமான நிறுவனம் பெயரில் உத்தரவு போட்டு விட்டு அதன் பின் அந்த கட்டுமான நிறுவனத்தில் OPS & EPS இரண்டு பேரும் பங்குதாரர்களாக ஒப்பந்தம் போட்டுள்ளது தக்கது. இது சம்பந்தமாக அப்போது எதிர்க்கட்சியான திமுக போட்ட வழக்கு தற்போது விசாரணை நடந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.