10 வருட அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைக்கு தற்போது விடிவுகாலம்!
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
இற்கு ரூ1,816 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
தடுத்த ஜெ. அரசு
இதனிடயே 2011- ம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டன. சுமார், 19 கிமீ தூரமுள்ள இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தபோதும் 30 சதவீத பணிகள் முடிந்த நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் கூவம் ஆற்றின் போக்கை கெடுப்பதாக கூறி, ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை அத்திட்டத்திற்கு அனுமதி மறுத்து வந்தார்.
ஆரம்பித்த ஓபிஎஸ்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க உடன்பட்டார். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக திட்டம் தொடங்கவில்லை. இதையடுத்து பொறுப்புக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து விரைவாக செயல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியது.
எடப்பாடி அரசு துரிதம்
இந்நிலையில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு கடந்த 2017ஆண்டு மே மாதம், தடையில்லா சான்று வழங்கியது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து, தமிழக அரசிடம் இதுதொடர்பாக பேசி வந்தனர்.
துறைமுக பகுதிகளில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்தப்போவதாக சட்டசபையில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி 2018 மார்ச் மாதம் அறிவித்தார்.
பின்பு அத்திட்டம் அதிமுக 10 வருட ஆட்சியில் அப்படியே கைவிடப்பட்டது.
நல்ல திட்டம் என்று பலராலும் பாராட்டப்பட்டாலும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தடுத்து வைக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் கையில் எடுக்கிறது திமுக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு அடுக்காக அமையும் மதுரவாயில் சாலை .
மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை .
முதல் முறையாக இரண்டு அடுக்காக அமைய உள்ளது.
விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதங்களில் நிறைவடையும் .
எந்த இடத்தில் இணைப்பு சாலைகள் அமைக்க வேண்டும் என்று குறித்து ஆய்வு .
முதல் தளத்தில் வாகனங்கள் இரண்டாம் தளத்தில் கண்டெய்னர் செல்லும் சாலை அமைக்கப்படும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர்.