அந்தரத்தில் தொங்கியபடி செய்தி சேகரித்த செய்தியாளர்களின்அவல நிலை! செய்தியாளர்களை அலட்சியப்படுத்தும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தித் துறை!?

செய்தி சேகரிக்க முடியாமல் செய்தியாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய அவல நிலை!

தேனி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவரின் அலட்சியம். செய்தியாளர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா?
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பல்லவராயன்பட்டியில், (15.02.2023) காலை 07.00 மணி அளவில் நடை பெறும் ஜல்லிகட்டு நிகழ்ச்சிகளை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலையில், தொடங்கி வைக்க இருந்தது
இந்நிகழ்வில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் வரவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தேனி தெற்கு மாவட்டச் செயளாலரும் கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டனர்.


ஆனால், ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படும் காளைகளுக்கு, டோக்கள் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும்,
அமைச்சர் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியில், முறைகேடு நடந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் பல்லவராயன்பட்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் தேனி மாவட்ட செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அமைக்கப்பட்ட மேடையில்,செய்தியாளர்கள் தங்களுடைய கேமராக்கள் வைக்க மற்றும் செய்தி சேகரிக்க எந்த ஒரு பாதுகாப்பு வசதியும் செய்து தரப்படவில்லை. அது மட்டும் இல்லாமல் குடிப்பதற்கு குடிநீர் தரப்படவில்லை. மேலும் செய்தியாளர்களை வழிநடத்தும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக அலுவலர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதற்கு எதற்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் என்ற ஒருவர் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேனி ஆட்சியாளர் அலுவலகத்தில் இவர்களுக்காக ஒரு அலுவலகம் என்ற கேள்வி செய்தியாளர்களின் மத்தியில் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ புதிய மாவட்ட ஆட்சியாளர் பொறுப்பு ஏற்ற முதல் நாளில் இருந்து செய்தியாளர்களை புறக்கணிப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நிரூபணம் ஆகியுள்ளது என்று தான் கூற வேண்டும். பத்திரிகையாளர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய பொதுமக்களிடம் தேனி மாவட்ட ஆட்சியாளர் எப்படி நடந்து கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் குறைதீர்க்கும் நாள் அன்று கூட்டரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் கால தாமதமாக வந்ததால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் பெண்கள் அனைவரும் காத்திருந்ததையும் மறந்து விட முடியாது. இதற்கு பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்பதை விரைவில் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியவரும். அதன் பின்பு அனைத்து பத்திரிகையாளர்களும் சேர்ந்து மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து விளக்கம் கேட்கப்படும் என்று மூத்த பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.