Uncategorizedகாவல் செய்திகள்

அமராவதி பகுதியில் மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக பாறைகளை உடைத்து கனிம வளம் வெட்டி கடத்தல். அமராவதி காவல் நிலையத்தில் கோட்டாட்சியர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்!

அமராவதி

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா வருவாய் கோட்டாட்சியர் அஸ்வின் கண்ணன் தலைமையில்  அமராவதி பகுதியில் அம்மலு என்பவருக்கு சொந்தமான சர்வே எண்.653/B2 -ல் பூமியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மலை அடிவாரத்தில் பாறைகளை உடைத்து கனிம வளங்களை  ஜேசிபி எந்திரம் மற்றும் இரண்டு டிராக்டர் வாகனங்கள் மூலம் கடத்துவதாக உடுமலை வருவாய் கோட்டாட்சியருக்கு வந்த புகாரின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் சம்பவ இடத்திற்கு ஆய்வு மேற்கொண்டதில் ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் பாறைகளை உடைத்து கனிம வளத்தை கடத்தி வந்த மூன்று வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்து அமராவதி காவல் நிலையத்தில் வாகன ஓட்டுநர் வாகனம் மற்றும் ஜேசிபி இயந்திரம் அனைத்தையும் அதன் பின்பு சட்ட விரோதமாக அனுமதி இல்லாமல் கனிம வளம் வெட்டி எடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.


கனிம வளம் வெட்டி எடுக்கும் இடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வாகனங்களை பரிமளம் செய்து காவல் துறையில் ஒப்படைத்ததற்கு  அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
அமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வாகன எண் மற்றும் வாகன ஓட்டுனர் பெயர் முகவரி.
தம்புரான் கோவில் பிரிவு ஆண்டிய கவுண்டனூர் கிராமம்.
ஜேசிபி டிரைவர் திருநாவுக்கரசு வயது 42 த /பெ சிவலிங்கம் அலங்கியம் தாராபுரம்.
டிராக்டர் டிரைவர் கணேசன் வயது 40 த/பெ மணி மட்டை மில் 9/6 சாவடி உடுமலைப்பேட்டை
டிராக்டர் டிரைவர் ரகுமான் வயது 22 த/பெ ஜெமிஷா அமராவதி நகர் உடுமலைப்பேட்டை
ஜேசிபி வண்டி எண். ( TN 78 S 3195).
அமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இரண்டு டிராக்டர்கள் ஜேசிபி வாகனங்களை மட்டும் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்து சட்டவிரோதமாக அனுமதி இன்றி பாறைகளை உடைத்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தின் சொந்த ஜாமினில் வெளியிட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. தொடர்ந்து திருப்பூர் மாவட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி கனிம வளம் கடத்திக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் வருவாய் கோட்டாட்சியர் கடத்தலில் ஈடுபட்டவர் மற்றும் கனி போல கருத்துக்கு பயன்படுத்த வாகனங்களை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒப்படைத்து வழக்கு பதிவு செய்ய சொல்லியும் காவல் நிலையத்தில் கனிம வளம் கடத்திய நபர்களை வழக்கு பதிவு செய்து கைது செய்யாமல் பெயருக்கு வழக்கு பதிவு செய்து அவர்களை ஜாமினில் வெளியில் விடுவதற்கு காரணம் காவல் நிலையத்தில் கனிம வளம் கடத்தல் செய்யும் கும்பலிடம் பெரும் தொகையை கையொட்டாக பெற்றுக் கொண்டு இது போன்று அவர்களை வெளியே விடுவது தொடர் கதையாக இருப்பதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் ஆகவே வட்டாட்சியர் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யாமல் இருக்கும்போது வேறு யார் புகார் கொடுத்து இவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது ஆகவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அனைத்து காவல் நிலையங்களிலும் கனிம வளம் கடத்தும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button