அரசு பள்ளி மாணவர்கள் எழுத இருக்கும் பொதுத் தேர்வு வினாத்தாளுக்கு 75 ரூபாய் வசூல் !? ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்குமா!?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 11 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளிடம் எழுதவிருக்கும் பொதுத் தேர்வுக்கான வினாத்தாளுக்கு 75 ரூபாய் வீதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட CEO அ. பாலமுத்து, முதன்மை கல்வி அலுவலர், பல லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது!
இது சம்பந்தமாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளதாக தகவல்.
இது சம்பந்தமாக பல லட்ச ரூபாய் வசூல் செய்த ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ பாலமுத்து மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா !?? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!
தமிழக அரசின் கல்வித் துறை 3 வெவ்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.
அவற்றில் நிர்வாக நோக்கங்களுக்காக 38 வருவாய் மாவட்டங்களும்,
120 கல்வி மாவட்டங்களும் அடக்கம்.
இதன்படி, மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த பிரிவுகளின் தலைவராக செயல்படுவார்கள்.
தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, நிர்வாக நலன் கருதி பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அக்டோபர் 2022 இடமாற்றம் செய்யப்ட்டனர்.
அப்போது நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ பாலமுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி
அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!