அரசு மருத்துவமனை செல்லும் வழியில் திறந்தவெளி பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவும் அபாயம்!வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நாட்வடிக்கை எடுக்குமா!?
வாடிப்பட்டி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பேருந்து நிலையத்தில் வாடைக்கு விடப்பட்டுள்ள கடைகளுக்கு பின்புறம் திறந்தவெளி பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துவதால்
அந்தப் பகுதி முழுவதும் குருநாற்றம் வீசுவதாகவும் சுகாதாரமற்ற நிலையில் அரசு மருத்துவமனைக்கு செல்லும்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்றுநோய் வரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் சென்று வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல் புதூர் போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ள கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே கால்வாய்களில் நிற்கும் கழிவு நீர்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.அதேபோல் வாடிப்பட்டி பேருந்து நிலையத்தின் உள்ளே அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில்
கருவேல முள் செடிகளை வெட்டி போட்டு இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் அந்த முள் செடிகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை செல்லும் பாதையில் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வாளர்களின் கோரிக்கையாகும்.