கல்வி

அரசு மேல் நிலைப் பள்ளியா!? ஆடுகளை அடைக்கும் கூடாரமா!?எந்தவித  உட் கட்டமைப்பு இல்லாமல் படிக்கும் 1500 மாணவர்களின்  எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ள அவலம்! கோமாவில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகள்!

1500 மாணவ மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளியில் சமையல் செய்து வழங்க சுகாதாரமான இடம் மற்றும் விளையாட்டு மைதானமே இல்லாத அவலம்!
கோமாவில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகள்!


பொது மக்களுக்கு அடிப்படை வசதியான சுகாதாரம் குடிநீர் ,சாலை,
பாமர மக்களின் குழந்தைகளுக்கான குழந்தைகள் மையம் கல்வி நிலையங்கள்
இவை அனைத்தும் ஒரு ஊராட்சி மற்றும் பேரூராட்சி நகராட்சிகளில் கண்டிப்பாக அமைந்திருக்க வேண்டும்.
இதில் மக்கள் தொகை ஏற்ப சுகாதார மையம் மருத்து வமனையாகவும் இருக்க வேண்டும்.
தொடக்க ஆரம்பப் பள்ளி ,நடுநிலைப்பள்ளி ,உயர்நிலைப்பள்ளி ,மேல்நிலைப்பள்ளி ,என கல்வித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இதில் குழந்தைகள் மையம் மட்டும் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
தமிழக பட்ஜெட் 2023-2024: அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதி – உயர்கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி நிதியை
ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக பட்ஜெட் 2023-2024: அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதி – உயர்கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு
By செய்திப்பிரிவுModified: 21 Mar, 23 07:30 am

அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் 5 ஆண்டுகளில் மேம்படுத்தப்பட உள்ளன.
நடப்பு ஆண்டில் 25 பாலிடெக்னிக் கல்லூரிகள், 55 கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுதல், ஆய்வகங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் நிதி ஆண்டிலும் ரூ.200 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். மொத்தமாக, பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
திமுக ஆட்சி வந்த உடன் முதல்வர் பட்ஜெட்டில் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதலிடம் வகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் . அதுமட்டுமில்லாமல் தற்போதுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டில் ஆர்வத்தைக் கொண்டு வரவும் விளையாட்டு துறையை மேம்படுத்த பல விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்தவும் உலக அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக விளையாட்டு வீரர் வீராங்கனைகளை கலந்து கொள்ள ஊக்குவிக்கும் வகையில் 25 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. என்பது நிதர்சனமான உண்மை.ஆனால் கல்வித் துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகள் என்று அழைக்கப்படும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளால் திமுக அரசுக்கும் ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் அரசு மேல்நிலை உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டை ஊக்குவிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதற்கு உதாரணமாக கடலூர் மாவட்டம் வடலூர் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால் இந்த அரசு பள்ளி யில் வகுப்பு அறைகள் மட்டுமே இருப்பதாகவும் வேற எந்தவித உள்கட்டமைப்பு இல்லை என்றும் 1500 பள்ளி மாணவ மாணவிகள் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில்
(1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 25 வகுப்புகள் இருக்க வேண்டும்.
(2) ஆய்வகம் 4
(இயற்பியல் ,வேதியியல், உயிரியல் ,கணினியல்)
(3).நூலகம் .1
(4).விளையாட்டு மைதானம்.1
(5).கழிவறை.
(6).ஆசிரியர் ஓய்வு அறை
(7).சமையல் கூடம்
8.) சைக்கிள் மற்றும் இரு சக்கரம் வாகனங்கள் நிறுத்தும் இடம்
9) பொருட்கள் வைக்கும் பாதுகாப்பு அறை
10) ஆபீஸ் அலுவலக கட்டிடம்.
இவை அனைத்தும் இல்லாமல் தற்போது 17 கோடி ரூபாய்க்கு வகுப்பறைகள் கட்ட உள்ளதாகவும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்டிடம் கட்டுவதற்கு அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் சத்துணவு மையம் சுகாதார மையம் மேல்நிலை தண்ணீர் தொட்டி டிவி ரூம் போன்ற ஐந்து கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் வகுப்பறைகளை கட்ட இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அந்தக் கட்டிடங்கள் அமைந்திருக்கும் இடம் சுமார் 20 சென்ட்க்கு மேல் இருக்காது என்றும் வெறும் வகுப்பை மட்டும் கட்டி மாணவர்கள் சேர்க்கைகளை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் மாணவர்களின் கல்வித்தரம் உயர அடிப்படை தேவையான எந்த வித அம்சங்களும் இந்த பள்ளியில் இல்லாமல் வெறும் பள்ளி வகுப்பறைகள் மட்டுமே கட்டி அரசு பணத்தை வீணடிக்க நினைக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் இந்த செயலைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறும்போது ஆண்டுதோறும் புதிய மாணவர்கள் சேர்க்கை இல்லை என்றும் அதற்கு காரணம் வகுப்பறைகள் இல்லாததால் புதிய மாணவர்களை சேர்க்க முடியவில்லை என்றும் ஆகையால் வகுப்பறைகளை கட்டி புதிய மாணவர்களை சேர்க்க இந்த 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கட்டிடங்களை கட்ட இருப்பதாகவும் அதற்கான பணிகள் நடந்து இருப்பதாகவும் அதற்காக வருவாய்த்துறையிடம் பள்ளி வளாகம் சுற்றியுள்ள 20 வருடத்திற்கு மேல் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றி கொடுத்தால் பொது வகுப்பறைகள் கட்டிடம் கட்ட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 17 கோடியில் கட்டிடம் கட்ட ஒப்பந்ததாரர் ஒப்பந்தம் எடுத்துள்ளதாகவும் அந்த ஒப்பந்ததாரருக்கும் தலைமை ஆசிரியருக்கும் (கமிஷன்)உடன்பாடு வைத்துக்கொண்டு இந்த சட்டவிரோத செயலை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடலூரில்

வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆபத்தான புரம் கிராமம் (சர்வே ன்0.62)இல்
4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் இருக்கும் இடத்தில் இந்த பள்ளி விரிவாக்க கட்டிடங்கள் மற்றும் மைதானங்களை ஏற்படுத்தலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எதற்கு இந்த குறைந்த இடத்தில் கட்டிடங்களை கட்டி மாணவர்களை ஆட்டு மந்தையில் அடைத்தது போல் அடைத்து வைத்து கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் போதுமான காற்று வசதி இல்லாமல் ஆங்காங்கே மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் அவநிலையும் தற்போது இருந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் 1500 மாணவ மாணவிகள் படிக்கும் பள்ளியில் காலையில் பிரேயர் நடத்த இடமில்லாமல் குறைந்த மாணவ மாணவிகளை நிக்க வைத்து பிரேயர் நடத்தி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மனநிலையை மாற்ற விளையாட்டு மிகவும் முக்கியமானது ஒன்று அந்த விளையாட்டு என்பதை இந்த பள்ளியில் இல்லை என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் ஏனென்றால் இந்த பள்ளிக்கு விளையாட்டு மைதானமே இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் வெறும் வகுப்பறையைக் கட்டி இவர்கள் எதை சாதிக்க நினைக்கிறார்கள் என்பதை கல்வித் துறை உயர் அதிகாரிகள் தான் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் 358 மாணவர்கள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
4 வகுப்பு அறை
ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது.
குறைந்தது 15 வகுப்பறைகள் இருக்கவேண்டும். குறைந்தது 15 கழிப்பறை இருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஏக்கரில் விளையாட்டு மைதானம்
இருக்க வேண்டும். அதேபோல் மேல்நிலைப் பள்ளி குறைந்தது நான்கு ஏக்கரில் அமைந்திருக்க வேண்டும் அனைத்து வசதிகளுடைய உட் கட்டமைப்புடன் மேல்நிலைப்பள்ளி அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக விளையாட்டு மைதானம் கண்டிப்பாக அமைந்திருக்க வேண்டும். என்பது குறிப்படதக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button