அரசு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அவசரக் கோளத்தில் போடப்பட்ட தார் சாலையில் பல லட்சம் ஊழல் முறைகேடு! வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா!?

அரசு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அவசரக் கோளத்தில் போடப்பட்ட தார் சாலையில் பல லட்சம் ஊழல் முறைகேடு! வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா!?

புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? சாலைகள் அமைக்கும் போது பழைய சாலைகளை தோண்டி எடுத்த பிறகே அமைக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அளித்த உத்தரவாதத்தை பின்பற்றி சாலைகளை அமைக்கப்படுவதில்லை எனவும்
இதற்கு சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரை கண்காணிக்கும் அதிகரிகளை பொறுப்பு ஏற்க செய்ய வேண்டும்.நீதிபதிகள் தெரிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு தமிழக அரசின் தலைமை செயலாளர் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அல்லது குறிப்பிடத்தக்கது அந்த கடிதத்தில்.
சாலையில் உயரம் அதிகரிப்பதால் மழை நீர் அருகில் உள்ள கட்டடங்களுக்குள் புகுந்துவிடுகிறது. மேலும், சில இடங்களில் தண்ணீர் உடன் சேர்த்து புதியதாக போடப்பட்ட சாலையும் கூடவே அடித்து செல்வதையும் பார்த்திருக்கிறோம்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டே, பழுதான சாலைக்கு மாற்று சாலை போடும்போது, பழைய சாலையை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு புதியதாக சாலை போட வேண்டுமென தமிழக அரசின் தலைமை செயலாளர் நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் மிக முக்கியமாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளும் போது சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டு(milling) அதே அளவுக்கு மேல் தளம் அமைக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் ஏற்கனவே போதுமான கனத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளதால் பிபிடி சோதனை மேற்கொள்ளப்படத் தேவையில்லை.
எந்த சூழலிலும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை சாலைகளின் மட்டும் அதிகரிக்க படக்கூடாது. மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சாலைகளில் தார் மேல் தளத்திற்கு( பிசி )மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
பாடசாலை மேல் தல கனமானது (thickness of BC) இந்திய சாலை காங்கிரஸ் விதி37-2018 இன் படி போக்குவரத்து செறிவுக்கேற்ப மாற்றப்படும் என அந்தக் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தலைமைச் செயலாளர் வழிகாட்டு நெறிமுறைகளை எல்லாம் வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காற்றில் பறக்க விட்டு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் குலசேகரன் பட்டி கிராமத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலை


வாடிப்பட்டி பழனியாண்டவர் கோவில் பிரிவிலிருந்து

தொடர்ச்சியாக பழனியாண்டவர் கோவில் வரை பழனியாண்டவர் கோவில் பிரிவிலிருந்து பழனி ஆண்டவர் கோவில் அலங்கார வளைவு வரை வாடிப்பட்டி செல்லும் நெடுஞ்சாலை வரை உள்ள பழைய தார் சாலைக்கு மேல் புதிதாக கடந்த 30 /3 /2024 ஆம் அவசர அவசரமாக

சாலை போடப்பட்டுள்ளது.

இப்படி போடப்பட்ட பழைய தார் தார் சாலை இருக்கு அதற்கு மேல் புதிதாக தார் சாலை போடப்பட்டு அதுமட்டுமில்லாமல்

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் புதிதாக சாலை போடாமலே சாலையின் இருபுறமும் மண்ணை மட்டும் கொட்டி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் புதிதாக தார்சாலை போட்டதில் அகலமும் கணமும் ஒரே மாதிரியாக இல்லாமல் புதிதாக தார் சாலை போடப்பட்டு உள்ளது என்றும். அதுமட்டுமில்லாமல் அவசர அவசரமாக போடப்பட்ட புது தார் சாலையில் கனரக வாகனங்கள் சென்று சாலை முழுவதும் சேதம் அடைந்து காணப்படுவதாகவும் இந்த தார் சாலை போடப்பட்டதால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்
எனவும்

ஆகவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் அது மட்டும் இல்லாமல் அவசர அவசரமாக தரம் மட்டும் நிலையில் தார் சாலை போட்ட ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் தரமற்ற சாலையை போட்டுள்ள ஒப்பந்தத்திற்கு இந்த சாலை போட அரசு ஒதுக்கிய நிதியை உடனே வழங்கக் கூடாது என்றும் அது மட்டுமல்லாமல் வருங்காலங்களில் இந்த ஒப்பந்ததாரருக்கு புதிதாக சாலை போட ஒப்பந்தம் வழங்கக் கூடாது என்றும்
இந்த சாலை போட எப்போது ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டது எத்தனை கிலோமீட்டருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு கணம் தார் சாலை அமைக்க வேண்டும் எவ்வளவு அகலம் இருக்க வேண்டும் தார் சாலையின் மதிப்பு எவ்வளவு. என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ளதாகவும்
மதுரை கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுத்துள்ளனர்.
எது எப்படியோ பொதுமக்களுக்கு தேவையான சாலையை போடுவதில் தொடர்ந்து ஊழல் முறைகேடு நடந்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தரமற்ற சாலைகளை போட்டு விட்டு அதற்கான தொகையை பெறுவதற்கு யார் யாருக்கு கப்பம் கட்ட வேண்டுமா அவர்களுக்கெல்லாம் ஒப்பந்ததாரர்கள் கப்பம் கட்டி விட்டு தங்களது சுயலாபத்திற்காக மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.. ஆகவே அவசர அவசரமாக புதிதாக போடப்பட்ட தார் சாலையில் ஊழல் முறைகேடு நடந்துள்ளதா !?அப்படியே நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா இல்லை எப்போதும் போல் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு மக்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டு கண்டும் காணாமல் இருக்கப் போகிறார்களா என்பதை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.