மாவட்டச் செய்திகள்

அரசு வாகனத்தை தேடும் தேனி மாவட்ட நிர்வாகம்!
மதுரை மாவட்டத்தில் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி ஆடியோ! நடந்தது என்ன,!?

தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நின்றிருந்த வாகனம் காணவில்லை  !


தேடும்  தேனி மாவட்ட நிர்வாகம்!
மதுரை மாவட்டத்தில் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி ஆடியோவால் பரபரப்பு!

தேனி மாவட்ட காணாமல் போன அரசு வாகனம்

கிணற்றை காணோம் என்ற திரைப்படத்தில் வரும் நகைச்சுவை போல தற்போது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக பேசப்படுவது என்னவென்றால் சில தினங்களுக்கு முன்பு தேனி மதுரை இடையே தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பயன்படுத்தும் ஜீப் ஒன்று விபத்தில் சிக்கியதாக தகவல் வந்தது!

இது சம்பந்தமாக விசாரித்தபோது அந்த வாகனம் தேனி மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அவர் பயன்படுத்தும் அரசு வாகனத்தை எடுக்காமல் மற்றொரு அரசு வாகனத்தில் மதுரை திருமங்கலம் கப்பலூரில் உள்ள உறவினரை பார்க்க சென்றதாகவும் அவருடன் அலுவலக உதவியாளர் பாலகிருஷ்ணனை அழைத்து சென்றதாகவும் அப்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்கானம் இடையே கார் விபத்துக்குள்ளானதாகவும் அந்த விபத்தில் தேனி பேரூராட்சி உதவி இயக்குனருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் உடன் அழைத்துச் சென்ற அலுவலக உதவியாளர் பாலகிருஷ்ணனுக்கு காயம் அதிகமாக ஏற்பட்டதால் உசிலம்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். அதன்பின்பு அந்த வாகனத்தை தனியார் ஒர்க் ஷாப்பில் சேதமடைந்ததை சரி செய்ய விட்டிருப்பதாகவும் ஆனால் அந்த வாகனம் அதிகாரி வீட்டில் விபத்தில் காயம் அடைந்த பாலகிருஷ்ணன் அலுவலகத்திற்கு வருவதாக பதிவேட்டில் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். எதற்கு விபத்தில் சிக்கிய வாகனத்தையும் விபத்தில் காயம் அடைந்த பாலகிருஷ்ணனையும் மறைக்க காரணம் என்ன!? என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏனென்றால் ஒரு மாவட்டத்தில் உள்ள அரசு வாகனத்தை அந்த மாவட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அரசு விதிமுறை இருக்கும் போது தேனி மாவட்ட அரசு வாகனத்தை மதுரை மாவட்டத்திற்குள் எடுத்துச் சென்றால் அது சட்டத்துக்கு புறம்பானதாகவும் விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறுகின்றனர். அதனால் மதுரை மாவட்டத்தில் விபத்தில் சிக்கியதாக வாகனம் தெரிந்தால் வாகனத்தை எடுத்துச் சென்ற அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுவார்கள் என்று தெரிந்து அந்த வாகனத்தை மறைத்து வருவதாகவும் வாகனத்தில் சென்ற அலுவலக உதவியாளரை அரசு மருத்துவமனையில் சேர்க்காமல் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தற்போது தகவல்கள் வந்துள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியாளர் மௌனம் காப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் மற்றும் அவர் பயன்படுத்தும் வாகனம்!

ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் இந்த செய்தி வெளியானதால் உடனே மாவட்ட நிர்வாகம் வாகன ஓட்டுநரை அழைத்து வாகனம் விபத்தில் சிக்கவில்லை என்றும் 15 நாட்களுக்கு முன்பபே வாகனத்தை சரி செய்ய ஒர்க்ஷாப்பில் விட்டிருப்பதாகவும் இன்று 04/12/2023 எழுதி வாங்கி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வலி வந்துள்ளது.

அதில் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரியாமல், ஏதோ ஒரு  இடத்தில் வாகனத்தை விபத்தில் சேதம் அடைந்ததை மறைத்து சரி செய்வதற்காக  வேலைக்காக விட்டு கடந்த ஒரு வார காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த ஜீப் வாகனத்தின் நிரந்தர ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு தெரியாமலும், போதிய தகவல் தெரிவிக்காமலும், உண்மைநிலை மறைக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையான ஓட்டுநர், அலுவலகப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படாமல், தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு, அலுவலகத்திலேயே எவ்வித வேலையுமின்றி, உட்காரவைக்கப்ட்டுள்ளதாகவும், தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தின் குப்பை வண்டியின் டிராக்டர் டிரைவர் ஒருவரும்,, சிலநேரங்களில் தேனி-அல்லிநகரம்  நகராட்சி அலுவலகத்தில் அரசுப் பணியிலிருந்து  ஓய்வுபெற்ற, பழைய வாடிக்கையான ஓட்டுநர் ஒருவரையும், அரசுமுறை பயணித்திற்கும், சொந்தப்பயன்பாட்டிற்கும் விதி மீறலில்  பயன்படுத்தப்பட்டும் வருவதாகவும், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



பணிபுரிந்தவரும், கடந்த வாரத்தில் நடைபெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் எந்த ஊரில்(உசிலம்பட்டியில்?) இருந்து வருகிறார்?, எப்படி இருகிறார்?? தற்போது பணியில் உள்ளாரா??? அல்லது விடுமுறையில் உள்ளாரா???? அவரது வருகைப் பதிவேட்டின் நிலை என்ன????? மேலும் தேனி மாவட்டத்திற்குள்ளேயே செயற்பொறியாளரின் ஜீப் வாகனப் பயன்பாடு இருந்திட வேண்டும் என்ற அரசின் அனுமதியும், அறிவுறுத்தலும், சட்டவிதிமுறைகளும் இருந்தும், அவற்றை காற்றில் பறக்கவிட்டு, சட்டவிதிமுறைகளையும், அரசின் நிலையாணைகளையும் கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக தானே அரசு ஜீப் வாகனத்தை, தேனி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டத்திற்கு, (திருமங்கலத்திற்கு) அரசின் அனுமதியின்றி, தனது சொந்தப் பயன்பாட்டிற்கு, இயக்கிய போது, விபத்து ஏற்பட்டதாகவும், போதிய தகவல் தெரிவிக்காமலும், உண்மைநிலை மறைக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பரவியாதல் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது என்று தகவல் வந்துள்ளது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button