காவல் செய்திகள்

அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு  காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நபரின்  மனைவி மற்றும் மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தால் அருப்புக் கோட்டையில் பரபரப்பு!

திருட்டு வழக்கில் கைது செய்து அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு  காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நபரின்  மனைவி மற்றும் மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தால் அருப்புக்கோட்டையில் பரபரப்பு!


அருப்புக்கோட்டை குற்றப் பிரிவு  காவல் நிலையத்தில்


அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் காலனியைச் சேர்ந்தவர் துரை பிரித்திவிராஜ் (35). விஏஓவாக பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றவர். தற்போது, பாஜக சுற்றுப்புற சூழல் அணி விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 23ம் தேதி குடும்பத்தினருடன் பந்தல்குடியில் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த ரூ.2.60 லட்சம் திருட்டுப் போனது தெரியவந்தது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கீதாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், கைவரிசை காட்டிய திருடனை தேடிவந்தனர்.

விசாரணையில், வீடு புகுந்து திருடியது அருப்புக்கோட்டை அருகே உள்ள குறிஞ்சாங்குளத்தைச் சேர்ந்த மாணிக்கம் (61) என்பது தெரியவந்தது. அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில் குறிஞ்சாங்குளத்தை சேர்ந்த மலர் மன்னன் என்ற மாணிக்கம் (வயது 65) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர், பிரிதிவிராஜ் வீட்டிற்குள் கதவை உடைத்து புகுந்து பணத்தை திருடியதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

அதையடுத்து, போலீஸார் அவரை நேற்று கைது செய்து அவரிடம் இருந்த ரூ.70 ஆயிரத்தை பறிமுதல் செய்ததாகவும் இவர் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் உள்ளன. காவல் நிலையத்தில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதோடு, பட்டதாரியான அவரது மகன்

கர்ணன் (25) என்பவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, கர்ணன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைக் கூறி குடும்பத்தினிடம் கர்ணன் மனவேதனை அடைந்துள்ளார். சற்று நேரத்தில் மாணிக்கத்திற்கு ரத்தக் கொதிப்பு மாத்திரை எடுத்து வருமாறு கர்ணனை போலீஸார் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. சந்தேகமடைந்த மாணிக்கத்தின் குடும்பத்தினர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் கர்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவலறிந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் மாணிக்கம் வீட்டுக்குச் சென்று கர்ணனின் உடலை கைப்பற்றி செய்து பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், தனது மகன்
தற்கொலைக்கு உரிய நடவடிக்கை
எடுக்கக்கோரி அவரது தாய் தேவி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனிடம் இன்று காலை மனுக்கொடுத்தார். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்வதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
அதன்படி அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கைது செய்யப்பட்ட நபரின் மனைவியை அழைத்து விசாரணை செய்துள்ளார் ஆனால் காவல்துறை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதேபோல் உடலை பெற்றுக் கொள்ளாவிட்டால் நாங்களே உடலை அடக்கம் செய்வோம் என்றும் காவல்துறையினர் கூறியதாகவும்
அப்போது அறையிலிருந்து வெளியே வந்த தேவி, திடீரென மயங்கி விழுந்தார்.

அங்கிருந்த போலீஸார் உள்ளிட்டோர் அவரை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் ஆனால் தேவி தற்போது இறந்துவிட்டார் என்று அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர். தற்போது அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் உயிரிழந்த தேவியின் உடலை விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தற்போது உயிரிழந்த தேவி மாவட்ட ஆட்சியரிடம் 26/02/2023  கொடுத்த புகாரில்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் குறிஞ்சாகுளம் தங்கம் நகரில் வசிக்கும் மாணிக்கம் வயது 48 அவரது மனைவி தேவி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு கொடுத்துள்ளார் அந்த மனுவில் என் பெயர் தேவி கணவர் பெயர் மாணிக்கம் நாங்கள் ஆடு மாடு வளர்த்து வருகிறோம். கடந்த 25ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திலிருந்து காவல் ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர் காவலர்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரை விசாரணை செய்ய வேண்டும் என்று அழைத்துச் சென்றனர் அதன் பின்னர் மாலை 4 மணிக்கு எனது மகன் கர்ணன் அவரையும் அழைத்துச் சென்றனர் அதன் பின்பு நகை அடமானம் வைத்த சீட் வேண்டும் என்று அதை வாங்கிக் கொண்டனர் அதன் பின்பு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு செய்யும் ஹார்ட் டிஸ்க் இரண்டு சக்கர வாகனம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட எனது மகன் மற்றும் என்னுடைய மூத்த மகன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் அடித்து  மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் தான் உங்களை விடுவோம் என்று மிரட்டி விட்டு காவல் நிலையத்திற்கு வரச் சொல்லிவிட்டு சென்றனர்.  காவல் நிலையத்திற்கு நான் சென்று பார்த்த போது காவல் நிலையத்தில் என் கணவர் என் மகனை 10 பேர் கொண்ட அடியாட்கள் கடுமையாக ஆனால் அவர்களை தடுக்காமல் காவல்துறையினர் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு வெளியே நான் கதறி அழுதவுடன் அதன் பின்பு காவலர்கள் அந்த 10 பேரை வெளியே அனுப்பி விட்டனர். அதன் பின்பு  என் கணவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவருக்கு மருந்து எடுத்து வரச் சொல்லி காவல்துறையினர் என் மகனை வெளியே அனுப்பினார் அப்போது என் மகன் உடம்பு முழுவதும் ரத்த காயங்களுடன் வந்து அழுது கொண்டு வீட்டில் மருந்து எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று வெகு நேரம் ஆகி திரும்ப வரவில்லை அதன் பின்பு என்னுடைய மகள் மருமகன் வீட்டில் போய் பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அதன் பின்பு அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அதன் பின்பு மகன் மருமகன் தன்னுடைய செல்போனில் காவல் நிலையத்தில்  அடித்து துன்புறுத்திய  வீடியோ காட்சிகளின் பதிவை அழித்துவிட்டு மூன்று லட்ச ரூபாய் பணம் திருடியதாக ஒப்புக் கொண்டால் மட்டுமே உங்களை விடுவோம் என்றும் எழுதி வாங்கி கொண்டு அடித்து துன்பத்தியாகவும் காவலர்கள் அடித்ததால் தான் என் மகன் தற்கொலை செய்து கொண்டான் என்றும் ஆகவே அடித்து துன்புறுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு கொடுத்த மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்ந்து அருப்புக்கோட்டை ஆர்டிஓ விசாரணை  நடத்தியுள்ளார். அதன் பின்பு உடலை பெற்றுக் கொள்ளுமாறு தேவியுடன் எழுதி கேட்டுள்ளனர் ஆனால் தேவி உடலை வாங்க மறுத்துள்ளார். அதற்கு காவல்துறையினர் உடலை வாங்க மறுத்தால் நாங்களே உடலை அடக்கம் செய்வோம் என்றும் தேவியை மிரட்டி உள்ளனர்.ஆனால் தேவி தற்போது இறந்துவிட்டார் என்று அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர். தற்போது அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் உயிரிழந்த தேவியின் உடலை விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button