அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் சுற்றுலா தளத்தை அழிக்கும் முயற்சியில் நுழைவு கட்டணம் வசூல் செய்யும் நபர்களுடன் இணைந்து செயல்படும் திருமூர்த்தி மலை பேரூராட்சி நிர்வாகம்!!?
சுற்றுலா பயணிகள் வேதனை!!
அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் சுற்றுலா தளத்தை அழிக்கும் முயற்சியில் வாகண நுழைவு கட்டணம் வசூல் செய்யும் நபர்களுடன் இணைந்து செயல்படும் திருமூர்த்தி மலை பேரூராட்சி நிர்வாகம்!!?
சுற்றுலா பயணிகள் வேதனை!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்தி மலை அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆர்த்தி மகரிஷி அவரது மனைவி அனுஷ்யா தேவி யுடன் வாழ்ந்தது சிறப்புக் குறியது.
ஶ்ரீ அமணலிங்கேஸ்வரர் ஆலயம் திருமூர்த்தி மலை என்று சொல்லபடுகிற திருமூர்த்தி அனையின் அடிவாரத்தில் அமையபெற்ற திருக்கோவில் .
இத்திருக்கோவிலில் தமிழரின் விழாவான பொங்கல் விழா, பௌர்ணமி அமாவாசை, கிர்த்திகை , தமிழ் புத்தாண்டு, போன்ற விழாவின் போது பல லட்சம் பேர் வந்து செல்வதால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவில் வளாகத்தில் ஏழு கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அனுமதி தரப்பட்டுள்ள கடைகளின் அளவு 10 அகலமும் 16 அடி நீளமும் கொண்ட நான்கு கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது அந்த நான்கு கடைகளிலும் தேங்காய் வாழைப்பழம் பூஜை சாமான் பிரசாதம் விற்கும் கடைகளாக அமைந்துள்ளது. 20 அடி அகலத்தில் 80 அடி நீளத்தில் மேல் தளம் மற்றும் 55 அடி நீலம் 16 அடி அகலம் கீழ்தளம் காப்பி டீ டிபன் கடை ஒன்றும் ,19 அடி நீளத்தில் 16 அகலத்தில் பஞ்சு மிட்டாய் சோன்பப்படி விற்க்கும் கடையும், அமைந்துள்ளது என்று இந்து சமய அறநிலை துறையின் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்ய ஏலம் விடப்பட்டுள்ளது. அப்படி ஏலம் எடுத்துள்ள நிறுவனத்தின் ஊழியர்கள் தற்போது எல்லை வரையறை இல்லாமல் வாகனங்களிடம் கட்டண வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருமூர்த்தி மலை அருவி கோவில் பரப்பளவு எவ்வளவு தூரம் வரை நுழைவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை ! இவ்வளவு தொகை தான் வசூல் செய்ய வேண்டும் என்று அரசு நிர்ணயித்த தொகை எவ்வளவு!?
என்ற கேள்வி எழுந்துள்ளது!
நுழைவுக் கட்டணம் என்ற பெயரில் கோவில் எல்லை தாண்டி திருமூர்த்தி மலை பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் நின்று கொண்டு நுழைவு கட்டணம் வசூல் செய்வதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக கோவிலுக்கு செல்லும் வாகனங்களை எங்கு நிறுத்தி கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று சம்பவ இடத்தில் சென்று பார்த்தல் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருமூர்த்தி மலை பேரூராட்சிக்குட்பட்ட இடத்தில் நெடுஞ்சாலையின் ஓரமாக ஒரு ரூம் அமைத்து வரும் வாகனங்களிடம் நுழைவு கட்டண வசூல் செய்து வருகின்றனர். கோவிலுக்கு முன்பு உள்ள திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தனியார் திருமண மண்டபத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு ஏன் கோவில் நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் அந்த திருமண மண்டபம் அமைந்துள்ள இடம் கோவில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் திருமூர்த்தி மலை பேரூராட்சி நிர்வாகமும் மௌனம் காப்பதால் பேரூராட்சி நிர்வாகம் கோவில் நிர்வாகத்தில் ஏலம் எடுத்த நபர்களுடன் துணை போகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே இந்த சந்தேகத்தை திருமூர்த்தி மலை பேரூராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நுழைவு கட்டணம் என்ற பெயரில் முறைகேடாக பொதுமக்களிடம் வசூல் செய்வதாக வந்துள்ள குற்றச்சாட்டை இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கோவிலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஏலம் எடுத்தவர்கள் வசூல் செய்கிறார்களா என்றும் தனியார் திருமண மண்டபத்திற்கு செல்லும் வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூல் அந்த வழியில் சொந்த வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அச்சமில்லாமல் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக அறிவியல் கோரிக்கையாகும்.
எது எப்படியோ தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் வாகன நுழைவுக் கட்டணம் என்ற பெயரில் பல முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பதாக பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் திருமூர்த்தி மலை கோவில் நிர்வாக எல்லைக்குள் வாகன நுழைவுக் கட்டணம் முறையாக வசூல் செய்யப் பட்டால் மட்டுமே திருமூர்த்தி மலை அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்கின்றனர் சுற்றுலா ஆர்வலர்கள்.
நுழைவு கட்டணம் வசூல் என்ற பெயரில் சுற்றுலா தளத்தை அழிக்கும் நோக்கத்தில் சட்ட விரோதமாக வசூல் செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இரண்டு பேரும் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்ரவிட்டால் மட்டுமே சுற்றுலா தளத்தை காப்பாற்ற முடியும் என்று சமூக ஆர்வாளர்களின் கோரிக்கையாகும். இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என்பதை நம்பி பொறுத்திருந்து பார்ப்போம்..