அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் விற்பனை செய்வதாக பல கோடிரூபாய் மோசடி செய்து மதுரையில் பதுங்கியிருந்த கொடைக்கானல் நகர பாஜக தலைவர் கைது!
மதுரை அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் விற்பனைக்கு இருப்பதாக ஆசை காட்டி 70 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகரைச் சேர்ந்த ஒருவர் புகாரின் அடிப்படையில் குற்றப் பிறப்பு போலீசார் நிலமோசடி முக்கிய குற்றவாளி கொடைக்கானல் பாஜக நகரத் தலைவர் சதீஷ்குமரன் மற்றும் அவரது தந்தை பத்மநாபன உட்பட ஐந்து பேரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்தது.
இது சம்பந்தமாக விசாரித்த போது மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ரூ.34 கோடிக்கு விற்பதாக நூதன மோசடியில் கொடைக்கானல் நகர பாஜக தலைவர் பணம் பெற்றுள்ளார். மோசடி செய்து பணத்தைப் பெற்றுக் கொண்ட கொடைக்கானல் நகர பாஜக தலைவர் சதீஷ்குமரன்
பணத்தை திருப்பி தர அதன் பின்பு பாஜக நிர்வாகியின் தந்தையான பத்மநாபன் பணம் கேட்டவரிடம் தான் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி தர மறுத்ததால் பத்மநாபன், சதீஷ்குமாரன் சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தைச்செல்வம் மீது ரங்கநாயகி போலீசில் புகார் அளித்துள்ளார்.
மதுரையில் பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியான சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.