ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டு அரசு நிலங்களை கூறு போட்டு விற்று கல்லா கட்டும் சின்னமனூர் நகராட்சி ஆணையர் !?
தமிழ்நாட்டில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற சிறப்பான நகராட்சியாக
தேனி மாவட்டம் சின்னமனூர் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வரிடம் பாராட்டுச் சான்றிதழை பெற்ற மாநகராட்சி ஆணையர்.N.S. சியாமளா.
தற்போது மாநில அளவில் கடைசி நகராட்சியாக சின்னமனூர் நகராட்சி தள்ளப்படும் அவல நிலைக்கு காரணமாக நகராட்சி ஆணையர் N.S. சியாமளா செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டவிரோதமாக அரசு இடங்களில் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி விட்டபின் அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிய வந்தால் நிர்வாகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் தான் காரணம் . அந்த அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
1.சின்னமனூர் கம்பம் செல்லும் பிரதான சாலையில் அமைந்திருக்கும் நேருஜி பேருந்து நிலையம் 3 கோடி செலவில் கட்டப்பட்டு செயல்பாடு இல்லாமல் இருக்கும் அவலநிலை !
2.சின்னமனூர் கம்பம் செல்லும் பிரதான சாலையில் பொன்னுச்சாமி திரையரங்கம் வரை இரண்டு கிலோமீட்டர் வரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகறாமல் அலட்சியமாக இருக்கும் நகராட்சி நிர்வாகம்.
3.சின்னமனூர் வழி செல்லும் எந்த பேருந்துகளும் நேருஜி புது பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு
4.சின்னமனூர் வழி செல்லும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்தின் வெளியே சாலைகளில் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நகராட்சி நிர்வாகம் என்ற குற்றச்சாட்டு.
5.சின்னமனூரில் இருந்து மேகமலைக்கு செல்ல ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் பேருந்து விடப்படுகிறது. அப்படி விடப்படும் இரண்டு பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் உள்ளே பேருந்து நிற்கும் இடத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லாமல் பேருந்து நிலையங்களுக்கு வெளியே சாலைகளில் நின்று ஏற்றிச் செல்லும் அவல நிலை!
மேக மலையில் வசிக்கும் படிக்காத பாமர மலைவாழ் மக்கள் சின்னமனூர் பேருந்து நிலையத்தில் வெளியே நிற்கும் பேருந்தை கண்டுபிடிக்க முடியாமல் படிக்காத பாமர மக்கள் வேறு வழியின்றி ஜீப் போன்ற வாகனங்களில் அதிக பணம் கொடுத்து செல்லும் அவல நிலை!
6.சின்னமனூர் நகராட்சிக்கு அடிக்கடி நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடும் அவலநிலை!
7. நீதிமன்ற உத்தரவை மதிப்பது போல் (கண்துடைப்பு நாடகத்தை )ஒரு நாள் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போல் புகைப் படங்களை எடுத்து நீதிமன்றத்திற்கு கொடுத்து விட்டு ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் ஊழல் மோசடி நடந்திருப்பதாக நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
8.நகராட்சிக்கு சொந்தமான இடங்களை சட்டவிரோதமாக சில சமூக விரோதிகள் கூறு போட்டு விற்பதாக பொது மக்கள் கொடுக்கும் புகாரை அலட்சியப் படுத்தி விட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக இருந்து கல்லா கட்டும் சின்னமனூர் நகராட்சி ஆணையர் நகராட்சியின் அவல நிலை,!
9.பணம் மற்றும் அரசியல் பலம் இல்லாத சாமானியர் மற்றும் சாலையோர வியாபாரிகளிடத்தில் கண்டிப்பு காட்டும் நகராட்சி நிர்வாகம் பணம் மற்றும் அரசியல் பலம் உள்ளவர்களிடத்தில் கண்ணசைவுடன் அவர்கள் வேலைகளை கச்சிதமாக முடித்துக் கொடுக்கும் நகராட்சி ஆணையர் என்ற தகவல் வந்துள்ளது.
10.சின்னமனூர் நகராட்சி சார்பாக சொந்தமாக ஒரு நாடக கம்பெனி வைத்து அடிக்கடி அரங்கே(ற்)றிவரும் நகர நிர்வாகத் துறையினரால் ஏனோ,தானோ என பொத்தாம் பொதுவாக நடந்தேறிய சம்பவமானது .சின்னமனூர் பகுதி மக்களிடத்தில் குறிப்பாக சாலையோர வியாபாரிகளிடத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மிகுந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்து முடிந்த ஆக்கிரமிப்பு என்ற ஆதங்கத்தோடும் ,மேற்கொண்டு இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தில் முறையாக சட்டத்தை பின்பற்றாமலும் நகரில் உள்ள முக்கிய அரசியல் செல்வாக்குள்ள பெரும் புள்ளிகளிடம் பெரிய தொகை பெற்றுக்கொண்டு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1. நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்கு ரூ.40000 என வெளிப்படையா கேக்கும் நகராட்சி…
2. நகராட்சியில் செழிப்பான துறை சர்வேயர் துறையில் கையூட்டு தொடர்பாக அடிக்கடி வெளிவரும் ஆடியோவுடன் லாரி டிரைவர்கள் மற்றும் இடத்தரகர்கள் புரோக்கர்களாக வலம் வரும் தொடர் அவலம்..
3. நகராட்சியில் தனி ஒருவர் வீடு கட்டி முடிப்பதற்குள் சம்பந்தபட்ட அனைத்து துறையினருக்கும் கரெப்ஷன் கொடுத்து மீள்வதற்குள் நரகம் சென்று நகரினில் வீடு கட்டும் அவலம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
4.நகராட்சியின் மெத்தனத்தினால் நகராட்சி வசமுள்ள பகடி எனும் நடைமுறை பணம் படைத்தவர்களிடத்தில் பல வருடங்களாக சிக்கி கோமா நிலையில் இருந்து வருவதால், பகடி மூலம் நகராட்சி இடத்தினை பெற்றுக் கொண்ட வசதி படைத்தவர்கள் தாங்கள் பெற்ற இடத்தினை இரண்டு மற்றும் நான்கு கூர்களாக பிரித்து அன்றாட வயிற்றுப் பிழைப்பு நடத்தும் சாமானிய வியாபாரிகளுக்கு நகராட்சியின் கண்டு(ம்) கொள்ளாத மெத்தனப் போக்கினால் பண முதலைகள் அதிகப்படியான வாடகைக்கு விட்டு பல ஆண்டுகளாக பல இலட்சங்களில் புரண்டு வருகின்றனர். அதே நேரத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் புதுப்பிக்கப்பட வேண்டிய பகடி முறையினை நகராட்சியின் அலட்சியத்தினை சாதகமாக்கிய சில பனங்காட்டு நரிகளின் பிடியில் இருந்து வரும் இப்பகடியினை மீட்டெடுத்து மறுசீராய்விற்கு உட்படுத்தி சாமானியர்கள் பயன்படுத்திட தரமான முறையில், ஒளிவு,மறைவின்றி மறு ஏல பகடி முறையினை நகராட்சி வெளிப்படையாக நடத்த வேண்டுமென நகர மக்கள் ஆதங்கம்…
இது குறித்து இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், ஆக்கிரமிப்பு என கூறிய எங்கள் இடத்தில் சுமார் 47 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம், இதன்படி எங்களிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த இடத்தில் வீடு கட்டி குடியிருப்பதற்கு நகராட்சி நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட ஆட்சேபம் இன்மை சான்றிதழும், பொதுப்பணி துறையினரால் கொடுக்கப்பட்ட ஆட்சேபம் இன்மை சான்றிதழும் மேற்கொண்டு இந்த இடத்தில் உள்ள 20தென்னை மரங்களுக்கும்,மரங்களுக்கு உண்டான 2c பட்டா உள்ளது.
இவ்வளவு ஆவணங்கள் இருந்தும் எங்களுக்கு எந்தவித எழுத்துப் பூர்வ அறிவிப்பும் கொடுக்கப்படாமல் ஆக்கிரமிப்பு என கூறி அகற்றப்பட்டதன் விளைவாக எங்களுக்கு சுமார் 10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதோடு மிகுந்த மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக நடந்து முடிந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் மீது அதிருப்தியோடு குற்றம் சாட்டினார்.
இது மட்டுமல்லாமல்..
நகராட்சியில் அத்துமீறும் தனிநபர்களின் ஆக்கிரமிப்பை அகற்றாமல் தார்சாலை பணி நடந்து முடிந்த அவலத்தினால்
நகராட்சியை கூறுபோட்டு,
தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் ஆக்கிரமிப்பு செய்து கொள்ளலாம் என ஆக்கிரமிப்புதாரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் சூழலை உருவாக்கி வரும் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற சிறப்பான சின்னமனூர் நகராட்சி என மக்கள் புலம்பல்,
ஆதங்கத்தில் சமூக நல ஆர்வலர்கள்.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி,4வது வார்டு,8வதுதெருவில்,சரோஜினி பெண்கள் தங்குமிடம் அமைந்துள்ள பிரதான காந்திநகர் காலனியில் தற்போது தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இத்தெருவில் தனிநபர்களின் ஆக்கிரமிப்பானது நகராட்சி நிர்வாகத்தின் லஞ்ச ஊழல் தயவோடும், கரப்ஷன் துணையோடும் தலை விரித்து ஆடுகிறது.
கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி வாட்ஸ் அப்பில் வலம் வந்ததின் அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,முதலில் தனி நபர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதன்பின் தார் சாலை அமைக்க வேண்டுமெனவும் மீறினால் போரட தூண்டாதீர்கள் என நகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கையோடு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னமனூர் நகராட்சியில், கமிஷன் கரப்ஷனோடு ஒரு சில அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளால் சின்னமனூர் நகராட்சியில் வீடு கட்ட 1 செண்ட் இடம் வாங்கினால் போதும்,மேற்கொண்டு வீடு கட்ட தேவைப்படும் இடத்தினை அரசிற்கு சொந்தமான இடத்திலிருந்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில்,நகராட்சியின் தயவோடும், துணையோடும் தாங்களாகவே எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைப்போடு சுற்றுவட்டார பகுதி மக்கள் சின்னமனூரில் வீட்டடி இடம் வாங்கி பதிவு செய்திட இதே சின்னமனூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு படையெடுத்து வரும் காலமானது மிக விரைவில் வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை!
இது குறித்து,களம் கண்ட போது சின்னமனூர் நகராட்சியில் கடந்த காலங்களில் நகரத் தெருக்களில் முடிவடைந்த தார்சாலைகள் பணியானது நகரினில் தலை விரித்தாடும் தனிநபர்களின் ஆககிரமிப்புகளை கமிஷன் கரப்ஷனோடு ஒரு பிடி மண்,ஒரு கல்லை கூட ஆக்கிரமிப்பாக அகற்றப்படாமல் தார்சாலை அமைக்கப்பட்டது என்பது மட்டும் நிதர்ஷனமான உண்மை எனத் தெரிய வருகிறது.
அதே சமயம்,தேனி மாவட்ட நிர்வாகம் சின்னமனூர் நகராட்சியில் 4வது வார்டு 8வது பிரதான தெருவினை தொடர்ந்து, தார்சாலை அமைக்கும் பணி முடிவுற்ற அனைத்து தெருக்களையும் கள ஆய்வு செய்து முறையற்ற முறையில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அதிகப்படியான அபராதமும்,நகர நிர்வாகத்துறையில் இந்த ஆக்கிரமிப்பு செய்வதற்கு துணை போன சில கரன்சி,கரப்சன் விஷமிகளுக்கு நெடுந்தொலைவில் உள்ள விழுப்புரம் போன்ற மாவட்டத்திற்கு உடனடி பணி மாறுதல் வழங்க வேண்டுமெனவும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சின்னமனூர் நகரத் தெருக்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமற்ற முறையில் அகற்றிய பின்புதான் தார்சாலை அமைக்கப்பட வேண்டுமென கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டுமெனவும் நகராட்சித் தேர்தல் வர இருக்கும் நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு சட்ட விரோதமான செயல்களை செய்து வந்தவர்கள் தற்போது திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அதை முறியடிக்க தேனி மாவட்ட சாட்டை சமூக நல அமைப்பினர் மற்றும் சின்னமனூர் நகர பொதுமக்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.