ஆடிப்பெருக்கை முன்னிட்டு விவசாயப் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயி சான்று மற்றும் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.விருதுநகர் வட்டம், வச்சகாரப்பட்டியில் இன்று (03.08.2021) சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாமில், சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் நுண்ணுயிர் பாசனம் அமைத்திட விவசாயி சான்று மற்றும் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நுண்ணுயிர் பாசனம் அமைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்திட சிறு,குறு விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள் மானியத்தில் நுண்ணுயிர் பாசனம் அமைத்திட வருவாய் துறையிடம் இருந்து சிறு, குறு விவசாய சான்றிதழ்கள் மாவட்டம் முழுவதும் 39 குறு வட்டங்களில் இன்று ஒரே நேரத்தில் பெற்றிடும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
அதனடிப்படையில், வச்சகாரப்பட்டியில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு, 10 விவசாயிகளுக்கு சிறு,குறு விவசாயி சான்றிதழ்கள், நுண்ணுயிர் பாசன கருவிகளின் பணி ஆணை 7 விவசாயிகளுக்கு மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவி ஒரு விவசாயிக்கும், ஆடிப்பெருக்கை முன்னிட்டு விவசாயப் பணிகளை துவக்குவதின் பழக்கமாக தோட்டக்கலைத் துறையின் மூலம் காய்கறி விதைகளை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.சங்குமணி, இணை இயக்குநர்(வேளாண்மை).உத்தண்டராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்.எஸ்.நாராயணன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் செந்தில்வேல், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.