ஆதி திராவிடர்கள் காலனியில் பொங்கல் கொண்டாட காவல்துறையினர் அனுமதி மறுப்பு !பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!!
ஆதி திராவிடர்கள் காலனியில் பொங்கல் கொண்டாட காவல்துறையினர் அனுமதி மறுப்பு!
சாலை மறியலில் ஈடுபட்ட பின்னர் அனுமதி வழங்கிய காவல்துறை!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராம ஆதி திராவிடர் காலணியில் வசிக்கும் மக்கள் அங்கு இருக்கும் காளியம்மன் கோயிலில் பல ஆண்டுகளாக பொங்கல் விழா நடத்தி வருகின்றனர். திருவிழா என்றாலே ஒலிபெருக்கி வைப்பது தான் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
இதற்கு முன்பு அதே காலனியில் மைக் செட் வைத்து ஒற்றுமையாக விளையாட்டு போட்டிகளை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் காலனியில் வசிக்கும் இதே சமுதாயத்தை சேர்ந்த சிலர் இந்தாண்டு பொங்கல் விழா நடத்தினால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல் துறைக்கு தகவல் கொடுத்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இக்கிராமத்தை சேர்ந்த முதன்மை நிர்வாகிகள் முத்துமாரி ராஜபாண்டு குமாரசாமி ஆகியோர்
இந்தாண்டு பொங்கல் விழாவில் மைக்செட் வைத்து விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி கோரி சோழவந்தான் காவல்துறைக்கு மனு கொடுத்த நிலையில் விழா நடத்த போலீசார் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50..க்கு மேற்பட்டோர் பாலகிருஷ்ணாபுரம் மெயின்ரோட்டில் பொங்கல் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையெடுத்து சம்பவஇடத்திற்கு சோழவந்தான் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவபாலன் காவல் உதவி ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்பு பொங்கல் விழா நடத்த அனுமதி வழங்குமாறு காவல்துறையினர் உறுதி அளித்தப் பின் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முன்கூட்டியே கிராம பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.