அரசியல்

ஆபாச வீடியோ அனுப்பிய உண்மையான குற்றவாளிகளை ஏன் கைது செய்ய வில்லை!

https://youtube.com/shorts/3-of62js5tw?feature=share

உன் இதயத்தில் ஈரம் இருக்கா என் தாய் தமிழ் மண்ணே.

நான் வாய்ச்சொல் வீராங்கனை அல்ல செயல்வீரர் .

அந்த செயல் அணுவளவும் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்க வேண்டுமென்று கவனத்துடன் செயல்படுபவர்.

எனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவருக்கு நான் எச்சரிக்கை விடுத்து 14 நாட்கள் ஆகிறது காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை துவங்கியதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டேன்.

ஆனால் உண்மையான குற்றவாளிகளை இன்றுவரை கைது செய்யப்படவில்லை உண்மையான குற்றவாளி நான் சார்ந்திருக்கும் வன்னியர் சமூகமும் இல்லை நான் சார்ந்திருக்கும் மதமும் இல்லை அவர்கள் குறித்த தகவலை காவல்துறைக்கு தெரிவித்து விட்டோம் இருப்பினும் இன்றுவரை உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பதால் குற்றவாளிகளால் வன்னியர் வன்னியர் சாதி அல்லாத பிற சமூகத்திற்குள் சாதி மோதல்கள் வரும் வாய்ப்பு உள்ளது இந்து இந்து அல்லாத பிற மதத்தினருக்கும் மத மோதல்கள் உண்டாகும் சூழ்நிலை உள்ளது.

அதுமட்டுமின்றி அவர்கள் அனுப்பிய வீடியோக்கள் எல்லாம் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்ச்சி தாக்குதல் நடத்துபவர்களாகவும் பெண்கள் மீது கொடூர காம இச்சை கொண்டவர்களாக தெரிகிறது .அவர்கள் இந்த மண்ணில் வாழ தகுதியற்றவர்கள்.

அவர்கள் இருக்க வேண்டியது சிறைச்சாலை அல்லது போலீஸ் கையில் இருக்கும் துப்பாக்கி இரையாக வேண்டும் அல்லது இந்த வீரலட்சுமி கையிலிருக்கும் அறிவாளுக்கு இரையாக வேண்டும் .

நான் சாதிப்பெருமை பேசவில்லை நான் சார்ந்த மதத்தின் புகழை பரப்பவில்லை இதற்காக நான் வன்முறையாளராக மாறவும் இல்லை.

2006இல் 17 வயதில் பொது வாழ்க்கையைத் துவங்கிய போது தொடர் பத்தாண்டுகளுக்கு நான் செய்த நன்மைகள் யாவும் நான் சார்ந்த சமூகம் அல்லாத நான் சார்ந்த மதம் அல்லாத பிற சமூக மக்களுக்கே.

எனவேதான் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களால் எமக்கு புரட்சி மங்கை வீர மங்கை என்ற விருதுகளை வழங்கினார்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் இருந்து பெரியார் கண்ட புதுமை பெண் என்ற விருதும் என்னை தேடி வந்தது. இந்த விருதுகள் எல்லாம் எமக்கு 21 வயதிற்குள் வந்தது.

சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்ததால் தான் என் சங்கத்தின் உறுப்பினர்களை ஊர்க்காவல் படையில் 500 பெண்களை இணைத்தேன் .

நீதியின் மீது நம்பிக்கை வைத்ததால்தான் நீதித் துறையின் கீழ் செயல்படும் சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு மாவட்ட நீதிபதிகளை வைத்து திருப்பெரும்புதூரில் 10,000 பேரை திரட்டையும் நசரத்பேட்டையில் 1000 பேரை திரட்டையும் பூந்தமல்லியில் 5,000 பேரை திரட்டையும் சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தினேன் .

நான் பதவி வகித்த சங்கங்கள் பல சாதனைகளை படைத்தாலும் நேர்மையாக உழைத்ததால் சங்கம் வறுமையை பிடித்தது. முக்கிய நிர்வாகிகள் தன் குடும்ப வறுமையை கருதி குடும்ப வாழ்க்கைக்கு சென்றனர் .

சங்கத்தின் உறுப்பினர்களின் நலனை கருதியும் அவர்களின் கோரிக்கையை ஏற்று 19 வயதில் பதிவு பெற்ற அந்த தொழிற் சங்கத்திற்கு நான் எமது கடின உழைப்பால் சங்கத்தின் மாநில தலைவராக பதவி ஏற்றேன்.

அதுவரையில் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்ய ஆயிரம் இரண்டாயிரம் செலவு செய்து கொண்டிருந்த நிலையில் நான் அடியெடுத்து வைத்து என்னுடைய சட்ட நடவடிக்கையாளும் எமது போராட்டத்தினாலும் வெறும் 100 150 ரூபாய் செலவில் தொழிலாளர்களை பதிவு செய்ய நாம் தாம் அந்த நடைமுறையை கொண்டு வந்தோம்.

அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மருத்துவ மற்றும் இழப்பீடு காப்பீடு இருக்கிறது என்றால் இதை முன்னிறுத்தி நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களும் மாநாடுகளும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் தான் காரணம் .

சங்கத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு கருதி ஒரு வலிமையான தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் 2008 இல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை சந்திக்க எங்கள் தொழிற்சங்க நிர்வாக குழு மேற்கு வங்கம் சென்றது. திரிணாமுல் காங்கிரஸ் எங்களை அன்புடன் வரவேற்று அவர்கள் கட்சி அலுவலகத்தில் தங்கவைத்து கனிவுடன் உபசரித்தார்கள் மம்தா பானர்ஜி அவர்களை சந்திக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் ஏற்பாட்டில் முகுல்ராய் அவர்களை சந்தித்து எங்கள் தொழிற்சங்கத்திற்கு அம்மா மம்தா பானர்ஜி அவர்கள் கௌரவ தலைவியாக இருக்க வேண்டும் என்று அவரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.எங்கள் கோரிக்கை மறுதளிக்கப்பட்டது . பின்பு நாங்களே எங்கள் தொழிற் சங்கத்தின் உறுப்பினர்களின் பலத்தை வைத்து பெரியார் புரட்சி வீரர்கள் படை மற்றும் தொழிலாளர்கள் நீதி கட்சி என்ற அமைப்பை கட்டினோம் .

அமைப்பும் படையும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்து கொண்டிருந்தது.

அப்போதுதான் சில மாதங்களில் இடிந்தது தமிழர்கள் நெஞ்சம். வெகுன்டெழுந்தது தமிழ் இளைஞர்கள் கூட்டம் .

ஆம் 2009ல் தமிழ் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது. இனப்படுகொலையை குறித்து அண்ணன்கள் வழங்கிய சிடி தட்டில் அடங்கிய காட்சிகள் எங்கள் இதயத்தில் தீயை மூட்டியது. புதுக்கோட்டை ஐயா பாவாணன் அவர்களின் பேச்சு எங்கள் போராட்ட களத்திற்கு அழைத்து வந்தது.

பெரியார் புரட்சி வீரர்கள் படை தொழிலாளர்கள் நீதி கட்சி என்ற இரண்டு அமைப்பையும் கலைத்துவிட்டு தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பை நிறுவினேன்.

பலபேர் தமிழர்களுக்காகவும் மண்ணுக்காகவும் மொழிக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் புதிதாக ஏன் தமிழர் முன்னேற்ற படை என்று கேள்வி எழலாம்.

அதற்கு பதில்

தமிழர் தமிழ்மண் தமிழ்மொழி உரிமைக்காக இழந்த இழப்பிற்கு நீதிக்காக இந்தியாவில் உள்ள சக தேசிய இனங்கள் இடம் சமரசம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழர்களுக்காகவே தனியாக ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்பதற்காக தமிழர் முன்னேற்ற படை என்ற நமது அமைப்பை உருவாக்கினோம்.

தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பை உருவாக்கி விட்டு வன்னியர் குல சத்திரிய பெண் என்று சொன்னால் எப்படி என்று கேட்கிறீர்கள்.

தமிழகத்தில் ஒரு பெண் எந்த ஒரு இயக்கம் அரசியல் கட்சி என்று எதிலும் பதவி வகிக்காமல் சுயமாக ஒரு அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டு 15 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இடைவிடாமல் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது உங்கள் அன்பு சகோதரி நான் தான் என் தாய்த்தமிழ் உறவுகளே.

முதலில் எமக்கு யாரிடமும் ஆதரவு கிடைக்கவில்லை அச்சுறுத்தலும் அவமதிப்பும் தான் கிடைத்தது அதுபோன்ற ஒரு அச்சுறுத்தல் அறிந்திருப்பீர்களா என்று தெரியவில்லை தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .

2010 கால வாக்கில் நசரத்பேட்டையில் என்னுடைய கட்சி அலுவலகத்தில் நானும் என்னுடைய அலுவலக உதவி பெண்ணும் அமர்ந்திருக்கும்போது அலுவலகத்திற்கு ஒருவர் தான் தமிழர் என்றும் நான் சிலரை சந்திக்க வேண்டும் அதுவரை நான் எடுத்து வந்த இந்த பையை வைத்துக் கொள்ளுங்கள் பிறகு வந்து எடுத்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார் .சந்தேகத்தின் பெயரில் பையை திறந்து பார்க்கும்போது பை நிறைய துப்பாக்கிகள் இருந்தது பின்பு நாங்கள் பார்த்ததை எண்ணி அந்த நபர் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

பின்பு அந்த நபர் நள்ளிரவு 12 மணி அளவில் உன்னை கொலை செய்ய தான் வந்தேன் என்று கொலை மிரட்டல் விடுக்கும் நள்ளிரவே சென்று டிஜிபி மற்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தேன் எந்த ஒரு அடிப்படை விசாரணையை கூட அன்றைய காலகட்டத்தில் காவல்துறை விசாரணை செய்யவில்லை. இதற்கான காரணம் என்னவென்று சக இயக்க தோழர்களிடம் கேட்கும்பொழுது தீவிர ஈழ ஆதரவு அரசியலில் இருந்து தங்களை அகற்ற வேண்டுமென்ற அரசு முன்னெடுத்த அச்சுறுத்தல் என்று கூறினார்கள் .

ஆயுதம் காட்டி மிரட்டியதால் ஆயுதம் வைத்திருந்தால் கியூ பிரிவு காவல்துறை விசாரிப்பார்களே என்று நீங்கள் எம்மை கேட்கலாம் .

விசாரித்தார்கள் சில ஆண்டுகள் கழித்து எதற்கு தெரியுமா கியூ பிரிவு போலீசார் எமது அலுவலகத்திற்கு வந்து விசாரித்தார்கள்.
எமது கட்சி அலுவலகத்தை கொஞ்சம் பெரிதாக்கி போராட்டத்திற்கு சென்று வந்த எமது தொண்டர்களுக்கு 500 பேருக்கு பிரியாணி வாங்கி தந்ததற்கு உங்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது என்று விசாரிக்க அதற்கு நான் அவர்களுக்குச் சொன்ன பதில்.

என் தந்தையின் பென்ஷன் லோன் பணத்தை என் தாய் எனக்கு தந்தது என்று.

தியாகங்களால் கடந்து வந்த எமது பாதையில் நச்சு முற்களை போன்று அரசியலில் எமது வளர்ச்சியை விரும்பாதவர்கள் தமிழர்களிடம் எமது உண்மையான அடையாளத்தை மறைக்க நச்சு முற்களை போன்ற வதந்திகளை பரப்பினார்கள்.

அதற்கு அவர்கள் எனக்கு வைத்த பெயர் ஸ்டெல்லா மேரி என்றும் அக்ரஹாரத்து மாமி என்றும் ஆனந்தி நாயுடு என்றும் தெலுங்கு சக்கிலி என்றும் வதந்திகளை பரப்பினார்கள் .

இவைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் வன்னிய பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று சொன்ன நபரை தண்டிக்க வேண்டும் இந்து பெண்கள் எல்லாம் சமூகவலைதளத்தில் இருந்தால் ஆபாச வீடியோக்கள் அனுப்பி இந்து மத வெறுப்பை வளர்க்கவேண்டும் என்ற இந்த கயவர்கள் கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்ற பகிரங்க எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டேன் .

என்னுடைய வீடியோ வன்னியர்கள் மத்தியிலும் இந்து மக்களின் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதின் விளைவாக ஒரு நபரை மட்டும் தான் காவல்துறை கைது செய்துள்ளது .

இவனை ஏறியவர்கள் வன்னியர்களும் அல்ல இந்துக்களும் அல்ல அவனை யார் ஏவினார்கள் என்று ஆதாரத்துடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டோம் .

ஒரு சாதியை குறிப்பிட்டு அந்த சாதியில் பிறந்த பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று சொன்னால் என்ன நியாயமான கோபம் வருமோ அந்த நியாயமான கோபம் தான் எனக்கு வந்தது அவன் என்னை இழிவு செய்யவில்லை நான் சார்ந்த சாதியையும் மதத்தையும் பெண்களையும் இழிவு செய்துள்ளான்.

இவர்கள்தான் தமிழ் சமூகத்திற்குள் சாதி மத மோதல்களை உருவாக்குபவர்கள்.தமிழ் சமூகத்தின் ஒற்றுமையை விரும்பும் நான் என் கையால தண்டிப்பது நியாயமாக கருதுகிறேன் .

எனவே காவல்துறை அதற்கு வாய்ப்பு அளிக்காமல் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்று இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் .

கி.வீரலட்சுமி
நிறுவனத்தலைவர்
தமிழர்முன்னேற்றப்படை.
29:7:2021.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button