ஆபாச வீடியோ… கோடியில் பேரம்… : ஷில்பா ஷெட்டி விளக்கம்!
பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலியில் வெளியிட்டதாக சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். ராஜ் குந்த்ரா மீதான குற்றச்சாட்டுக்கு நம்பகமான ஆதாரங்களை திரட்டி வந்த போலீசார் தற்போது அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராஜ் குந்த்ராவின் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து, மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து அவரது போலீஸ் காவல் வருகிற 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தனக்கு ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவானது வருகிற 26ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை சேகரித்துள்ளனர்.
குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஷில்பா ஷெட்டி, தனது கணவர் ஒரு அப்பாவி என்றும், அவர் ஆபாச படங்கள் தயாரிப்பதில் ஈடுபடவில்லை. பாலியல் ஆசையை தூண்டும் படங்களே எடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹாட்ஷாட் செயலியில் உள்ள வீடியோக்களின் சரியான தன்மை குறித்து தனக்குத் தெரியாது. ஹாட்ஷாட் செயலிக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ள ஷில்பா ஷெட்டி, முழு விவரம் அறியாமல் யாரும் எந்த கருத்தையும் தேவையில்லாமல் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ராஜ் குந்த்ரா தன்னிடம் உள்ள 119 வீடியோக்களை விற்க வெளிநாட்டில் உள்ள ஒருவரிடம் விற்க சுமார் ரூ.10 கோடி ரூபாய் வரை பேரம் பேசியிருப்பதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
Thank you so much for taking the time to share your thoughts with us. Your feedback is truly appreciated.