மாவட்டச் செய்திகள்

ஆறு சென்ட் நிலத்திற்கு ஆறு ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தும் பட்டா வழங்க மறுக்கும் தேனி மாவட்ட வருவாய் துறை நிர்வாகத்தின் அவல நிலை!?கூட்டுப் பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 வருடங்களாக ஆறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் மனுதாரரை அலைக்கழித்து அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் மற்றும் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்.செயலிழந்து இருக்கும் தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?


தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், தேனி, உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய 5 வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன.
இந்த 5 வட்டாட்சியர் அலுவலகங்களில் வருடம் வருடம் 26ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி வரை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகிறது. இதில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் சம்பந்தம் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

ஜமாபந்தியின் இன்னொரு பெயர்- வருவாய் தீர்வாயம்
ஜமாபந்தி எங்கு நடைபெறும் , வட்டாட்சியர் அலுவலகம்
ஜமாபந்தி எந்த நாட்களில் – வருடா வருடம் ஏப்ரல்-ஜீன் 30க்குள் நடைபெறும்.
3ல்கண்ட நாட்களுக்குள் முடிக்காவிடில் மேல் நடத்த யாரிடம் உத்தரவு பெறவேண்டும் – நில நிர்வாக ஆணையர்
ஜமாபந்தியின் நோக்கம்:
அரசுக்கு சொந்தமான எல்லா வகையான சொத்துக்களும் வருவாய்நிலை ஆணைகளில் கண்டபடி நிர்வகிக்கப்படுகிறதா என்பதை கண்டறிவதே
வ.நி.ஆணை எண்.12ல் கண்டபடி அரசுக்கு வரவேண்டிய நிலத்தீர்வை மற்றும் அனைத்து வருவாய் கணக்குகளும் சரியாக எழுதப்பட்டுள்ளனவா?

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான புள்ளி விபரங்கள் தக்கமுறையில் தரப்பட்டுள்ளனவா?
கிராமஃதாலுகா பதிவேடுகள் ஒழுங்காக பராமரிக்கப் பட்டுள்ளனவா?
அரசு அலுவலர்கள் அரசு எதிர்பார்க்கும் அளவில் பணி செய்துள்ளனரா?
நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை, நில ஒப்படை மற்றும் கிராம பணிகள் ஒழுங்காக நடைமுறை படுத்தப் பட்டுள்ளனவா?
சமூக பாதுகாப்பு திட்டங்கள் பொதுமக்களுக்கு சரியாக சென்று அடைந்துள்ளனவா?
அரசு பாக்கிகள் சரியான முறையில் தயாரிக்கப் பட்டுள்ளனவா?
ஜமாபந்தி நடத்தும் அலுவலர்
வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர் தகுதியுடைய மற்ற அலுவலர்
மாவட்ட வருவாய் அலுவலர் (5ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 தாலுகா)மாவட்ட ஆட்சியர்

ஜமாபந்தியில் எதற்காக மனு அளிக்கலாம்?
இந்த ஜமாபந்தி மூலம் பட்டா, சிட்டா குறித்த விவரங்கள் கேட்டு மனு கொடுக்கலாம்.
குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.
இலவச மனை பட்டா, குடும்ப அட்டை, ஆதரவற்ற மற்றும் முதியோர் ஓய்வூதியம் கேட்டு மனு கொடுக்கலாம்.
இடம் (வீட்டு மனை) உள்ளவர்கள் அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.
Jamabandi Petition Online in Tamil:

ஆனால் ஜமா பந்தியில் நேரில் மற்றும் ஆன்லைன் கொடுக்கும் மனு
மீது எந்த நடவடிக்கையும் வருவாய் துறை அதிகாரிகள் எடுப்பதில்லை என்றும் ஜமாபந்தி என்பது தற்போது ஒரு சடங்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருப்பதாகவும் ஜமபந்தி என்பது கண்துடைப்பு நாடகம் தான் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பட்டா கேட்டு மனு எழுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்தால் கிராம நிர்வாக அலுவலர்களிடம் போய் தடையில்லா சான்றிதழ் வாங்கிட்டு வாங்க என்று சொல்லி அனுப்புவாங்க.உடனே கிராம நிர்வாக அலுவலரிடம் கை, காலில் விழுந்து தடையில்லா சான்று வாங்கிக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தால் ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள் என்று கூறுவார்கள். அதன் பின்பு ஒரு வாரம் கழித்து வட்டாச்சியர் அலுவலகத்திற்கு சென்றால் உங்கள் மனு வருவாய் ஆய்வாளரிடம் அனுப்பப்பட்டு உள்ளது என்று கூறுவார்கள். ஒரு மாதம் இரண்டு மாதம் நான்கு மாதம் ஐந்து மாதம் இப்படியே பல மாதங்கள் ஆன பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தால் அந்த மனுவை கோட்டாட்சியரிடம் அனுப்பி வைப்பார்கள் கோட்டாட்சியர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைப்பார் வட்டாட்சியர் மறுபடியும் கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைப்பார் இப்படி அனுப்பி வைப்பது என்பது வருவாய்த்துறை நிர்வாகத்தில் ஒரு சம்பிரதாயமாக வைத்துள்ளனர் . ஆக மொத்தம் மனு கொடுக்கும் சாமானிய ஏழை எளிய பொதுமக்களுக்கு எந்த ஒரு தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதே போல் தான் தேனி மாவட்டத்தில் 10 வருடங்களாக 6 சென்ட் நிலத்திற்காக ஆறு மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை பட்டாவும் வழங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

10 வருடம் முன்பு 2013 ஆண்டு
தேனி மாவட்டம் பெரியகுளம் கோட்டசியர்குட்பட்ட ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கார்த்திக் என்பவர் சுப்ரமணியம் என்பவரின் மனைவி மல்லிகா அவர்களின் பூர்விகம் இடமான ஆண்டிபட்டி பிட்டு 1 கிராமத்திற்கு உட்பட்ட
சர்வே நம்பர்.544 /1A2 35சென்ட் நிலத்திற்கு மல்லிகா பெயரில் வாரிசு பட்டா பெயர் மாற்றம் செய்ய 12/09/2013 அன்று மனு கொடுத்துள்ளார்.

அதன் பின்பு 11/12/2013 அன்று பதிவு தபால் மூலம் அனுப்பியுள்ளார். அதன் பின்பு ஆண்டிபட்டி வட்டம் நாச்சியார் புரத்தில் நடந்த மனுநீதி நாள் கூட்டத்தில் மனு வழங்கியுள்ளர். (மனு எண் 37/13) அதன் பின்பு நான்காவது முறையாக 14/02/2014 அன்று ஆண்டிபட்டி வட்டம் முல்லையம்பட்டியில் நடந்த அம்மா முகாமில் பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு கொடுத்துள்ளார்.

நான்கு முறை மனு கொடுத்தும் தேனி மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . 10/01/2015 அன்று ஆண்டிபட்டி பிட் 1 கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் ராஜேந்திரன் மனுதாரர் கார்த்திக்கை அழைத்து பணம் கொடுக்காமல் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியாது என்று கூறிய ராஜேந்திரன் மனுதாரரிடம் 2000 ரூபாய் பெற்றுக் கொண்டு கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO)பட்டா வழங்க பரிசீலனை செய்து விட்டதாகவும் அதன் பின்பு 07/02/2015 அன்று ஆண்டிபட்டி பிட் 1 கிராம நிர்வாக அலுவலர் மனுதாரருக்கு முறையாக பட்டா வழங்க சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பினார்.


அப்போது ஆண்டிபட்டி நில அளவை தாசில்தாராக இருந்த சுந்தர் லால் அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழை வைத்து பட்டா பெயர் மாற்றம் செய்து தரும்படி மனு அளித்த போது வட்டாட்சிய சுந்தர்லால் 2000 ரூபாய்க்கு இந்திய ராணுவ கொடி நாள் நிதியாக டிமாண்ட் டிராப்ட் (DD) எடுத்து வரச் சொன்னதன் அடிப்படையில் 2000 ரூபாய்க்கு உண்டான DD யை வட்டாட்சியரிடம் கொடுத்ததாகவும் அதன் பின்பு ஆயிரம் ரூபாய் தனியாக வட்டாட்சியர் கேட்டு வாங்கிக் கொண்டு விட்டு பெயர் மாற்றம் செய்யவில்லை என்றும் இதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் எனவே தனது மனைவியின் பெயரில் உடனடியாக பட்ட பெயர் மாற்றம் செய்து தர வேண்டியும் வட்டாசியரிடம் கொடுக்கப் பட்டுள்ள பணத்தை திரும்ப பெற்றுத் தரும்படியும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா இ.ஆ.ப அவர்களிடம் 17/05/2023 அன்று மனு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார்.அதன் பின்பு RDO வட்டாட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.. ஆனால் இது வரைக்கும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் பட்டா வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 10 வருடத்திற்குப் பின்பு தற்போதுள்ள தேனி மாவட்டத்தின் ஆறாவது மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாள் அன்று மனு கொடுத்துள்ளதாகவும் அதன் பின்பு தற்போது நடக்கும் ஜமாபந்திகளையும் மனு கொடுத்துள்ளதாகவும் அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் மூலமாக மனு வழங்கியுள்ளதாகவும் மனுதாரர் கூறியுள்ளார். ஆனால் வருவாய்த்துறை அலுவலகத்தில் இருந்து பட்டா வழங்குவதற்கான எந்த ஒரு முகாந்திரமும் அனுப்பாமல் மனு பரிசீலனையில் இருப்பதாக மட்டுமே பதில் அனுப்பி வருவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே பணம் பெற்றுக் கொண்டு பட்டா வழங்காத தற்போதுள்ள வட்டாட்சியர் மீது தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுப்பி உள்ளார்.

10 வருடங்களாக மனு கொடுத்த விவரம்.

2014 இல் மல்லிகாவின் 6 சென்ட் நிலத்தை வினிதா அவர்களுக்கு ஆண்டிபட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தில் 07/03/2014 அன்று கிரையம் செய்து கொடுக்கிறார்.
அதன் பின்பு 22/12/2017 இல் ஆன் லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்க மனு அனுப்புள்ளார். அதன் பின்பு 2019 இல் பதிவு தபால் மூலம் VAO மற்றும் வட்டாசியர் இருவருக்கும் அனுப்பப்பட்டது.
அனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் பின்பு 06/06/2019 அன்று நடந்த ஜமா பந்தியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு வழங்கியுள்ளார். ஆனால் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
15/07/2019 அன்று தேனி மாவாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அன்று மாவட்ட ஆசியராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் அவர்களிடம் பட்டா மாறுதல் செய்து தரும்படி மனு வழங்கப் பட்டது. அதற்கும் வருவாய் துறை நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன் பின்பு தற்போது திமுக ஆட்சி வந்த பின்பு முதல் முறையாக 17/05/2023 அன்று ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமா பந்தியில் கூட்டு பட்டா பெயர் மாற்றம் செய்து தருமாறு மனு வழங்கப் பட்டுள்ளது. (JP39)
அதன்பின்பு 26/05/2023 அன்று கூட்டுப் பட்டா கேட்டு ஆன் லைனில் பதிவு செய்யப் பட்டுள்ளது. மனு என்
(Can Id. 133251323569955)
இதுவரைக்கும் 10 வருடத்தில் ஆறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் செயலிழந்து விட்டது எண்பது தான் நிதர்சனமான உண்மை.

தேனிமாவட்ட-ஆட்சியர்கள்


1
திருமதி. ஆர்.வி.ஷஜுவனா இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர் & மாவட்ட நிர்வாக நடுவர்
05-02-2023
தற்போதுவரை
Theni District Collector
2
திரு க.வீ.முரளிதரன், இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர் & மாவட்ட நிர்வாக நடுவர்
16-06-2021
தற்போதுவரை
Collector Theni
3
திரு. ஹெச்.கிருஷ்ணனுண்ணி, இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியர் & மாவட்ட நிர்வாக நடுவர்
22-02-2021
15/06/2021
திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி
4
திருமதி . ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியர் & மாவட்ட நிர்வாக நடுவர்
25-02-2018
21-02-2021
ம.பல்லவி பல்தேவ்
5
திரு. ந.வெங்கடாசலம், இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியர் & மாவட்ட நிர்வாக நடுவர்
06-04-2016
24-02-2018
ந.வெங்கடாசலம்
6
திரு. எஸ்.நாகராஜன், இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியர் & மாவட்ட நிர்வாக நடுவர்
24-04-2016
31-05-2016
எஸ்.நாகராஜன்
7
திரு. ந.வெங்கடாசலம்.,இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியர் & மாவட்ட நிர்வாக நடுவர்
28-12-2014
23-04-2016
ந.வெங்கடாசலம்
8
முனைவர்.கே.எஸ். பழனிசாமி.,இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர் & மாவட்ட நிர்வாக நடுவர்
06-06-2011
27-12-2014
கே.எஸ். பழனிசாமி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button