இயக்குனர் சங்கத்திற்காக 100கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு! திரைப்படத்திற்கு நல்ல கதை சொல்லும் புது இயக்குனருக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் ஆர்கே செல்வமணி !
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
100 கோடி செலவில் முன்னணி கதாநாயகி கதாநாயகன் நடிக்க பிரம்மாண்டமாக ஒரு திரைப்படத்தை எடுக்க ஆசைப்படுகிறேன் அந்த திரைப்படம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்காக எடுத்து அதில் வரும் வருமானத்தை அனைத்து சங்கங்களுக்கும் கொடுக்க விரும்புகிறேன் என்று கலைபுலி எஸ் தாணு இயக்குனர் சங்க பதவி ஏற்பு விழாவில் பேசியது திரைப்பட துறை வட்டாரத்தில் தற்போது பேசும் பொருளாக உருவாகியுள்ளது.
நல்ல கதையுடன் வரும் புது இயக்குனருக்கு ஐம்பது லட்சம் சம்பளம் கொடுக்கப்படும் என்று தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்!
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் ஆர்கே செல்வமணி தலைமையில் புது வசந்தம் என்ற பெயரில் ஒரு அணியும் பாரதிராஜாவை சார்பாக இமயம் என்ற பெயரில் கே பாக்யராஜ் தலைமையில் பாக்கியராஜ் தலைவர் பதவிக்கும் பார்த்திபன் செயலாளர் பதவிக்கும் வெங்கட்பிரபு பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டனர் .
தேர்தல் முடிவில் ஆர்கே செல்வமணி தலைமை அணியில் ஆர்கே செல்வமணி தலைவராகவும் RV. உதயகுமார் செயலாளர் பொருளாளர் பேரரசு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.
அதன்பின் வெற்றிப் பெற்ற தலைவர் செயலாளர் பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது .அந்த விழாவில் மூத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .அதில் முக்கியமாக முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் திரைப்படத் துறையில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் வருமானம் வரும் வகையில் இயக்குனர் சங்கம் சார்பாக 100 கோடி வரை செலவு செய்த பிரம்மாண்ட திரைப்படத்தை எடுக்க விருப்பப்படுகிறேன் .அதில் வரும் வருமானத்தை திரைப்படத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என்று பதவி ஏற்பு விழாவில் ஆர்கே செல்வமணியிடம் கேட்டுக்கொண்டார். 100 கோடி தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகர்கள் கதாநாயகிகள் நடிக்க முன்வர வேண்டும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கேட்டுக்கொண்டார்.
அதன் பின் பேசிய ஆர்கே செல்வமணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவும் அந்த திரைப்படத்திற்கு நல்ல கதை சொல்லி இயக்கும் இயக்குனருக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் தர தயாராக இருக்கிறோம் என்றும் பேசினார்.
பதவியேற்பு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பேசியதும் ஆர்கே செல்வமணி அவர்கள் கூறியதையும் கேட்ட விழாவில் கலந்து கொண்ட அனைவரும் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கோடம்பாக்கத்தில் கனவுடன் காத்துக் கொண்டிருக்கும் புது இயக்குனர்கள அனைவருக்கும் இந்த அறிவிப்பு உற்சாகத்தையும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.தங்களிடம் உள்ள நல்ல கதைகளை திரைப்பட இயக்குனர் சங்கத்தில் சொல்வதற்கு ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் நிறைய புது இயக்குனர்கள் கலைப்புலி எஸ் தாணு அவர்களைத் தொலைபேசியில் நன்றியையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வாய்ப்புக்கு தாங்கள் வைத்திருக்கும் கதைகளை கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தொலைபேசியில் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அனைவரிடமும் நேரம் ஒதுக்கி கதை கேட்கிறேன் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எது எப்படியோ தற்போது இரண்டு வருடமாக பொருளாதார ரீதியில் சிக்கித் தவிக்கும் தமிழ் திரைப்படத் துறையில் நலிந்த தொழிலாளர்களுக்காக தொடர்ந்து உதவி செய்துவரும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் அதுவும் 100 கோடி செலவில் மிக பிரமாண்டமாக திரைப்படம் தயாரித்தால் அதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கலாம் என்ற மனிதநேயப் பேச்சால் திரையுலகமே வியந்து பாராட்டி வருகின்றது. நாமும் அவரின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.