Uncategorized

இயந்திரங்கள் வாங்குவதற்கு (டாம்கோ) மூலம் கடன்!

கைவினைக் கலைஞர்களுக்கு விராசாட்(VIRASAT) திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்; (டாம்கோ) மூலம், தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு, விராசாட்(VIRASAT) திட்டத்தின் மூலம் கைவினைப்பொருட்கள் செய்யப் பயன்படும் இயந்திரங்கள் வாங்குவதற்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கடன் உதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறமாயின் ரூ.98,000/- மற்றும் நகர்ப்;புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்பசெலுத்த வேண்டிய காலம்: 5 ஆண்டுகள்/ 60 தவணை(அதிகபட்சம்) வட்டி விகிதம் ஆண் பயனாளிகளுக்கு 5%ம் (ஆண்டிற்கு) பெண் பயனாளிகளுக்கு 4% ம் (ஆண்டிற்கு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் பெற இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: 1.சாதிச்;சான்றிதழ் 2.வருமான சான்றிதழ் நகல் 3.குடும்ப அட்டை/ இருப்பிடச்சான்று நகல் 4.கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விவரம் 5.திட்ட அறிக்கை (quotation) 6.ஆதார் அட்டை நகல் 8.கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் 9. பாஸ்போர் அளவு புகைப்படம்-3
கடன் விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் அலுவலகங்களிலிருந்து விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். 1.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) 2.கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், விருதுநகர். 3.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் / நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், விருதுநகர். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட அலுவலகங்களையும், வங்கிகளையும் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button