Uncategorizedகாவல் செய்திகள்

இரவில் மது போதையில் காரை ஓட்டி சென்று மூன்று பெண்கள் மீது மோதிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யாத உடுமலை அமராவதி காவல் நிலையம்! திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!

சாலையில் நடந்து சென்ற மூன்று இளம் பெண்கள்
மீது   மது போதையில் காரைவிட்டு ஏற்றிய  திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர்ச்சி வீடியோ! நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்
12/05 2024 அன்று இரவு
உடுமலை அமராவதி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மானுப்பட்டி என்ற இடத்தில்
மது போதையில் வேகமாக காரை ஓட்டி வந்த

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பாலு என்ற கோல்டன் பாலு சாலையில் நடந்து சென்ற மூன்று பெண்கள்  மீது மோதியதில் காயமடைந்த பெண்களை அருகில் இருந்தவர்கள்  108 ஆம்புலன்ஸ் க்கு போன் செய்து உடுமலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் அது போதையில் காரை ஓட்டி வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலு கோல்டன் பாலு நிதானம் இல்லாமல்  மோதிய இடத்தில்  காரை விட்டு இறங்கி காரின் மேல் சாய்ந்து கொண்டு நிதானம் இல்லாமல் நின்று கொண்டு  விபத்தில் காயமடைந்த பெண்களின் உறவினர்களிடம் என்ன பேசுகிறோம் என தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார். அப்போது விபத்தில் காயம் அடைந்த பெண்களின் உறவினர்கள் இது போல் மது போதையில் வாகனத்தை ஒட்டி வந்து பெண்கள் மீது இடித்து விட்டு அப்படித்தான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவேன் என்று சொல்வது நியாயமா நீங்கள் கட்சியில் இருப்பதால் குடித்துவிட்டு காரை ஓட்டி வந்து இடித்துவிட்டு பெண்கள் ஏன் சாலையில் நடக்கிறார்கள் என கேட்கலாமா என கேள்வி மேல் கேள்வி அவரிடம் கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் மது போதையில் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார்  அது மட்டும் இல்லாமல் காவல் துறையினரையும் டுபாக்கூர் என்றும் காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் யாருக்கோ போன் செய்து சாலையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சகஜம் தானே
பெண்கள் ஏன் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்கிறார்கள் என பேசுகிறார். இதையெல்லாம் அருகில் இருந்த ஒரு நபர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதன் பின்பு அமராவதி காவல் நிலைய  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து ஏற்படுத்திய காரை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். அதன் பின்பு காரை ஒட்டி வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலு என்ற கோல்டன் பாலு  மீது 13/05 அன்று   279 /337 ஆகிய இருப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 14/05 அன்று காரை திருப்பி ஒப்படைத்து விட்டனர். அது போதையில் இருந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி பாலுவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் மருத்துவ சான்றிதழ் வாங்காததற்கு காரணம் என்ன!? மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்யாததற்கு காரணம் என்ன!? இந்த இரண்டையும் சகாவல்துறை செய்வதை தடுத்து நிறுத்தியது யார்!?

ஆனால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் கிடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக
மது போதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக 185 பிரிவில் வழக்கு பதிவு செய்யாமல்
(279/337) கவனக்குறைவாக வாகனத்தை ஒட்டி விபத்து உண்டாக்குவது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுவது. என சாதாரண விபத்து என்று வழக்கு பதிவு செய்து மது போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதை மறைத்து
வழக்குப்பதிவு செய்துள்ளதாக விபத்தில் காயம் பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இந்தியாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். தண்டனை மற்றும் சேதங்கள் ஒரு நபரை நீங்கள் எவ்வளவு மோசமாக காயப்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் ஒருவர் இறந்தால், அந்த ஓட்டுநர் இறந்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு செலுத்த வேண்டும், மேலும் அவர் சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களுக்கு வாகனக் காப்பீட்டுக் கோரிக்கை ஏற்கப்படாது, ஏனெனில் இது ஓட்டுநரின் தவறு மட்டுமே
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது கிரிமினல் குற்றம் என்றும், இதற்கு 6 மாதம் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என்றும் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 185 கூறுகிறது. 2,000. மேலும் 3 ஆண்டுகளுக்குள் யாரேனும் ஒருவர் அதே குற்றத்தை மீண்டும் செய்தால், அந்த நபருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 3,000 அல்லது இரண்டும்.) விதிக்கப்படும் என மோட்டார் வாகனச் சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அமராவதி காவல் நிலையத்தில் மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாலு  என்கின்ற கோல்டன் பாலு மீது 185 பிரிவில் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை இதற்கு காரணம் காவல் நிலையத்தில் விபத்தை ஏற்படுத்திய திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரிடம் பெரிய தொகையை கையொட்டாக  பெற்றுக்கொண்ட தாக என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எது எப்படியோ பொதுமக்கள் நலன் கருதி குடிபோதையில் சாலையில் வாகனத்தை ஓட்டி வந்து நடந்து செல்பவர்கள் மீது மோதி விபத்தை  உண்டாக்குபவர்கள் மீது பாரபட்சம் இன்றி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமராவதி காவல் நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்
12/05 2024 அன்று இரவு
உடுமலை அமராவதி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மானுப்பட்டி என்ற இடத்தில்
மது போதையில் வேகமாக காரை ஓட்டி வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பாலு என்ற கோல்டன் பாலு சாலையில் நடந்து சென்ற மூன்று பெண்கள்  மீது மோதியதில் காயமடைந்த பெண்களை அருகில் இருந்தவர்கள்  108 ஆம்புலன்ஸ் க்கு போன் செய்து உடுமலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் அது போதையில் காரை ஓட்டி வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலு கோல்டன் பாலு நிதானம் இல்லாமல்  மோதிய இடத்தில்  காரை விட்டு இறங்கி காரின் மேல் சாய்ந்து கொண்டு நிதானம் இல்லாமல் நின்று கொண்டு  விபத்தில் காயமடைந்த பெண்களின் உறவினர்களிடம் என்ன பேசுகிறோம் என தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார். அப்போது விபத்தில் காயம் அடைந்த பெண்களின் உறவினர்கள் இது போல் மது போதையில் வாகனத்தை ஒட்டி வந்து பெண்கள் மீது இடித்து விட்டு அப்படித்தான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவேன் என்று சொல்வது நியாயமா நீங்கள் கட்சியில் இருப்பதால் குடித்துவிட்டு காரை ஓட்டி வந்து இடித்துவிட்டு பெண்கள் ஏன் சாலையில் நடக்கிறார்கள் என கேட்கலாமா என கேள்வி மேல் கேள்வி அவரிடம் கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் மது போதையில் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார்  அது மட்டும் இல்லாமல் காவல் துறையினரையும் டுபாக்கூர் என்றும் காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் யாருக்கோ போன் செய்து சாலையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சகஜம் தானே
பெண்கள் ஏன் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்கிறார்கள் என பேசுகிறார். இதையெல்லாம் அருகில் இருந்த ஒரு நபர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதன் பின்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து ஏற்படுத்திய காரை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். அதன் பின்பு காரை ஒட்டி வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலு என்ற கோல்டன் பாலு  மீது 13/05 அன்று   279 /337 ஆகிய இருப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 14/05 அன்று காரை திருப்பி ஒப்படைத்து விட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் கிடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக
மது போதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக 185 பிரிவில் வழக்கு பதிவு செய்யாமல்
(279/337) கவனக்குறைவாக வாகனத்தை ஒட்டி விபத்து உண்டாக்குவது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுவது. என சாதாரண விபத்து என்று வழக்கு பதிவு செய்து மது போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதை மறைத்து
வழக்குப்பதிவு செய்துள்ளதாக விபத்தில் காயம் பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இந்தியாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். தண்டனை மற்றும் சேதங்கள் ஒரு நபரை நீங்கள் எவ்வளவு மோசமாக காயப்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் ஒருவர் இறந்தால், அந்த ஓட்டுநர் இறந்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு செலுத்த வேண்டும், மேலும் அவர் சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களுக்கு வாகனக் காப்பீட்டுக் கோரிக்கை ஏற்கப்படாது, ஏனெனில் இது ஓட்டுநரின் தவறு மட்டுமே
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது கிரிமினல் குற்றம் என்றும், இதற்கு 6 மாதம் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என்றும் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 185 கூறுகிறது. 2,000. மேலும் 3 ஆண்டுகளுக்குள் யாரேனும் ஒருவர் அதே குற்றத்தை மீண்டும் செய்தால், அந்த நபருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 3,000 அல்லது இரண்டும்.) விதிக்கப்படும் என மோட்டார் வாகனச் சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அமராவதி காவல் நிலையத்தில் மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாலு  என்கின்ற கோல்டன் பாலு மீது 185 பிரிவில் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை இதற்கு காரணம் காவல் நிலையத்தில் விபத்தை ஏற்படுத்திய திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரிடம் பெரிய தொகையை கையொட்டாக  பெற்றுக்கொண்ட தாக என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எது எப்படியோ பொதுமக்கள் நலன் கருதி குடிபோதையில் சாலையில் வாகனத்தை ஓட்டி வந்து நடந்து செல்பவர்கள் மீது மோதி விபத்தை  உண்டாக்குபவர்கள் மீது பாரபட்சம் இன்றி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமராவதி காவல் நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button