இரவு முழுவதும் சாலையில் பட்டினியில் குழந்தைகள்!
வி.ஏ.ஓ வை பணியிட நீக்கம்
செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி!
வி.ஏ.ஓ வை பணியிட நீக்கம்
செய்து வேலூர்மாவட்ட ஆட்சியர் அதிரடி!
வேலூர் கஸ்பாவிலுள்ள சுடுகாடுப் பகுதியில் வசித்துவந்த முருகன், பச்சையம்மாள் தம்பதியர் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மாலை மனு கொடுக்க வந்தனர். மாலைநேரம் என்பதால் ஆட்சியரை சந்திக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். எங்குச்செல்வது எனத் தெரியாமல் ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே சாலையோரம் நான்கு குழந்தைகளுடன் பெற்றோர் இருவரும் பசியில் சாலையில் படுத்து கொண்டனானர்.
குழந்தைகள் தலையனையாக செருப்பு வைத்து தூங்கியதை கண்டு இந்த அரசாங்கம் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது!
இவர்கள் பற்றி விசாரணை செய்ததில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற அடையாளச் சான்றிதழ்கள் எதுவுமே அரசு வழங்காதகாரணத்தால் நான்கு குழந்தைகள் பிறந்தாலும் இந்த தம்பதிகள் சுடுகாட்டில் தார்ப்பாய் ஒன்றை மேற்கூரை அமைத்து தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
சுடுகாடுப் பகுதியிலேயே இத்தனை ஆண்டுகாலமாக தார்ப்பாய் போர்த்திய சிறிய கொட்டகையில் வசித்துவந்த நிலையில் மாற்று இடத்தில் வீடு கட்டித்தரக்கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்க குழந்தைகளுடன் வந்ததாகக் கூறி முருகன், பச்சையம்மாள் தம்பதியர் கண்ணீர் வடித்தனர்.
இந்தத் தகவல் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு தெரியவந்ததையடுத்து அந்த தம்பதிகள் வசித்து வந்த கிராம நிர்வாக அதிகாரியை உடனே பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் எது எப்படியோ எத்தனை திட்டங்கள் மத்திய மாநில அரசுகள் போட்டாலும் இன்னும் இந்த அவலநிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது .
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க தற்போது உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.