அரசியல்

இருடியம் என்ற பெயரில் 9 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிக்கு உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் பதவி!
மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தை கோட்டை விடும் திமுக தலைமை!!

10 வருடமாக இருடியம் என்ற பெயரில் 9 கோடி மோ சடி செய்த உசிலம்பட்டி அஜித் பாண்டி (எ) க. அலெக்ஸ் பாண்டி மீது நீதிமன்றம் கைது செய்ய உத்தரவு!

காவல்துறை தேடப்பட்டு வரும் நிலையில் கடந்த மூன்று மாதமாக தலைமறைவாக இருப்பவருக்கு
திமுக ஒன்றிய செயலாளர் பதவி!?

ஒன்றிய செயலாளர் பதவி!?
திமுக கோட்டை விடும் மதுரை புறநகர் திமுக தெற்கு மாவட்டம்!?


1.)10 வருடமாக இருடியம் என்ற பெயரில் 100 கோடி வரை மோசடி செய்ததாக ( உசிலம்பட்டி அஜித் பாண்டி) கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.
வழக்கில் அஜித் பாண்டி பல பேரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்து தற்போது அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன் ஜாமீன் ரத்து செய்த உயர் நீதிமன்றம் மோசடியில் ஈடுபட்ட அஜித் பாண்டி உட்பட பத்து நபர்களை காவல்துறை கைது செய்து கட்டுப்பாட்டில் வைத்து மோசடி செய்த பணத்தை கைப்பற்ற அக்டோபர் மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

உசிலம்பட்டி அஜித் பாண்டி
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்


தற்போது எப்படியாவது உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் பதவியை பெற்றுத் தருவதற்கு அஜித் பாண்டி பெயரை அறிவிக்க அமைச்சர் கே என் நேருவை ராமச்சந்திரா மருத்துவமனை உரிமையாளர் வெங்கடாசலம் அணுகியதாகவும் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை அமைச்சர் கே என் நேரு தொடர்பு கொண்டு அஜித் பாண்டி பெயரை ஒன்றிய செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்ய அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல் வெளியானது.

அமைச்சர் கே என் நேருவின் மறைந்த சகோதரர் ராமஜெயம் தொழில் செய்வதற்கு 150 கோடி ரூபாய் ராமச்சந்திரா மருத்துவமனை வெங்கடாசலம் உடையார் கொடுத்துள்ளதாகவும் இதுவரை அந்த பணத்தைக் கேட்டு அமைச்சர் கே என் நேருவிடம் ராமச்சந்திரா உரிமையாளர் வெங்கடாசலம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இருடியம் மோசடியில் ஈடுபட்டதாக உயர் நீதிமன்றம் கைது செய்ய உத்தரவு இருக்கும் ஒரு நபருக்கு கே என் நேரு ஒன்றிய செயலாளர் பதவி கொடுப்பதற்கு மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் திமுக கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


காவல்துறை தேடப்படும் குற்றவாளியாக கடந்த மூன்று மாதமாக தலைமறைவாக இருக்கும் நபருக்கு உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் பதவி வழங்கி உள்ளது.


அஜித் பாண்டியன் பின்னணி


1). உசிலம்பட்டியை சேர்ந்த அஜித் பாண்டி என்பவர் கடந்த 10 ஆண்டுகள் அதிமுக கட்சியில் இருந்தவர்

2. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக கட்சியில் இணைந்த சில மாதத்தில் நகர்மன்றத் தலைவர் பதவி கேட்டுள்ளார்.
அடுத்த மூன்றாவது மாதத்தில் ஒன்றிய செயலாளர் பதவி கேட்டுள்ளார்.
மாவட்டச் செயலாளராக உள்ள மணிமாறன் ஒன்றிய செயலாளர் பதவி வழங்குவதாக அஜித் பாண்டியிடம் 50 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும் அது மட்டும் இல்லாமல்
(உசிலம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்த செல்வி அவரது மகன்தான் அஜித் பாண்டி என்பவர்.) இவர் கடந்த அதிமுக ஆட்சியில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தி மு க கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் நமக்கு நாமே நாசுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வரும்போது ஸ்டாலின் அவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் கார் முன்பு கறுப்புக் கொடி காட்டியவர்தான் இந்த அஜித்பண்டி.

ஆகையால் அஜித் பாண்டிக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கக் கூடாது என்று உசிலம்பட்டி
முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர்கள் தலைமைக் கழகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

2. இருடியம் மோசடி செய்துவந்த அஜித் பாண்டிக்கு ராமச்சந்திரா மருத்துவமனை உரிமையாளர் வெங்கடாசலம் தான் குருவாக இருந்து வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்வந்துள்ளது.


.2019 ஆம் ஆண்டு கொடைக்கானலில் சொகுசு பங்களாவில் இரிடியம் மோசடி கும்பல் இருப்பதாக கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பொன்னுச்சாமி தலைமையில் இருடியம் மோசடி கும்பலை கைது செய்தனர்.
அந்த இருடிய மோசடி கும்பலில் அஜீத் பாண்டி மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை உரிமையாளர் வெங்கடாசலமும் இருந்ததாக அதிர்ச்சி தகவல் அப்போது வெளியே வந்தது.
உடனே ராமச்சந்திரா மருத்துவமனை உரிமையாளர் வெங்கடாசலம் சிலை தடுப்பு பிரிவு டிஐஜி யாக இருந்த பொன்மாணிக்கவேலுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பின்பு டிஐஜி பொன்மாணிக்கவேல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தொடர்பு கொண்டு வெங்கடாஜலபதியை விட்டுவிடுமாறு சொன்னதாகவும் அப்போது தகவல் வெளியானது.


ராமச்சந்திரா மருத்துவமனை உரிமையாளர் வெங்கடாசலத்திடம்
நூற்றுக்கு மேற்பட்டவர்களிடம் 100 கோடிக்கு மேல் அஜித் பாண்டி வசூல் செய்து கொடுத்ததாகவும் தகவல்கள் வந்துள்ளது.அதற்கு பரிகாரமாக கடந்த நகராட்சித் தேர்தலில் திமுக கட்சியில் அஜித் பாண்டியின் தாயாருக்கு உசிலம்பட்டி நகர சேர்மன் சீட் , அஜித் பாண்டிக்கு உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் பதவி வாங்கி கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

உசிலம்பட்டி நகர சேர்மன் சீட் வாங்கிக் கொடுக்க திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் நேரிடையாக தொலைபேசியில் தொர்புகொண்டு அஜீத் பாண்டியின் தயார் செல்வி அவர்களுக்கு சீட் வழங்குமாறு மாவட்டச் செயலாளர் மணிமாரணிடம் பேசிசியதாக் தகவல் .

பின்பு தேர்தல் முடிந்தவுடன் அஜித் பாண்டியின் தாயார் செல்வி உசிலம்பட்டி நகர சேர்மன் ஆக வருவதற்கு உசிலம்பட்டி திமுக கட்சி நிர்வாகிகளுக்குள் எதிர்ப்பு இருந்த நிலையில் திமுக கட்சிக்குள் இருந்த மற்றொரு பிரிவினர் சகுந்தலா அவர்களை உசிலம்பட்டி நகர சேர்மேனாக கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் திமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கமலைபாண்டி உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமை குழு உறுப்பினர் ரவி நகர இளைஞர் அணி s p m.சந்திரன் உட்பட நான்கு பேரின் மீது ராமச்சந்திரா மருத்துவமனை உரிமையாளர் ஸ்டாலின் அவர்களிடம் புகார் கொடுத்ததன் அடிப்படையில் தான் நான்கு பேர் அதிரடியாக திமுக தலைமை மூலம் இடைநீக்கம் செய்யச் சொன்னதாகவும் அதன் அடிப்படையில் நான்கு பேரையும் திமுக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமச்சந்திரா மருத்துவமனை உரிமையாளர் வெங்கடாசலம்.

கார் இறக்குமதி முறைகேடு: ராமச்சந்திரா பல்கலை. வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் கைது- சிபிஐ அதிரடி

2014 ஆம் ஆண்டு வெளிநாட்டு கார் இறக்குமதியில் முறைகேடு செய்ததாகக் கூறி சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலத்தை சிபிஐ கைது செய்தது குறிப்பிடத் தக்கது.இவர் மறைந்த ராமசாமி உடையார்அவர்கள் மகன் ஆவார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button