மாவட்டச் செய்திகள்

ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள்!? லஞ்சம் கொடுக்காத விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!?



மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தாதம்பட்டி நீரேத்தான் இடங்களில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் , ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை உணர வைக்க வைக்க வசதி ஏற்படுத்தித் தரவும் ,17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லையும் அரசு கொள்முதல் நிலையங்களில் எடுக்க வேண்டும் !மாவட்ட ஆட்சியருக்கு வாடிப்பட்டி விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய பல நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ள அவல நிலை!

இந்த காலதாமதத்தால் விவசாயிகள் பல வகைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். காலதாமதத்தைத் தவிர்க்க, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஜூன் மாதம் திறக்கப்பட்ட வைகை அணை, தண்ணீர் மூலம் பேரணை முதல், கள்ளந்திரி வரை முதலாவது போகம் நெல் சாகுபடி நிறைவுபெற்று அறுவடை முடிந்துள்ளது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நீரே தான் கிராமத்தில் உள்ள 290 எக்டர் விவசாய நிலங்களில் நெல் பயிரிட்டு அறுவடை முடிந்துள்ளது.அறுவடை முடிந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொட்டி வைக்கப்பட்ட நெல்லை, அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை. தற்போது நீரே தான் நெல் கொள்முதல் நிலையம் இன்னும் தொடங்கவில்லை. அதுமட்டுமில்லாமல் தற்போது மழை காலம் என்பதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் நெல் உணர வைக்க வசதி இல்லாமல் தவித்து வருவதாகவும் நெல் காய வைக்க வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும். அது மட்டும் இல்லாமல் 17% ஈரப்பதம் குறைவாக உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் நிலையங்களில் எடை போடுகிறார்கள் என்றும் தற்போது மழைக்காலம் என்பதால் அறுவடை செய்த நெல் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் நிலையங்களில் எடுக்க வேண்டும் என்றும் அது மட்டும் இல்லாமல் நீரேதான் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்கவும்

வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்ட போது


தாதம்பட்டியில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் உடனே ஆரம்பிக்க வேண்டும் என்றும் . அதேபோல் கொள்முதல் நிலையங்களில் மூடை கட்டும் கூலி தொழிலாளிகளுக்கு வாரம் ஒரு முறை நிர்ணயத்தை சம்பளத்தை முழுமையாக கொடுக்க வேண்டும் என்றும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் வாடிப்பட்டி விவசாய சங்கம் மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுவடை செய்த நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கோரிக்கை புகார் மனு கொடுத்து வந்ததாகவும் தெரிவித்து வருகிறார்கள்.

எது எப்படியோ அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் ஒரு மூடைக்கு 40 முதல் 50 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் முதல் போக்கு தொடர்ந்து உண்டாவதாலும் விவசாயிகளுக்கும் நெல் கொள்முதல் அதிகாரிகளுக்கும் உள்ள மோதல் போக்கை மாவட்ட ஆட்சியாளர் விசாரணை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button