ஈரோடு மாநகராட்சி பயன்படுத்தும் விலை உயந்த பொருட்களை திருடி பழைய இரும்பு கடையில் விற்று பணம் வாங்கிச் செல்லும் மாநகராட்சி ஊழியர்கள் !அதிர்ச்சி வீடியோ! இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக செயல்படும் ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா!?



ஈரோடு மாநகராட்சியில் தினசரி ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது என்று கூறுகின்றனர் . A to Z அனைத்தும் நடக்கும்.எப்போதும் கஜானாவுக்கு குறைவேயில்லாத மாநகராட்சி என்றால் அது ஈரோடு மாநகராட்சிதான்
ஈரோடு மாநகராட்சியில் 2002 முதல் சுமார் 20 லட்சம் சொத்துவரி நிலுவை வைத்திருந்த கந்தசாமி மில், ஆதவன் டெக்ஸ் மற்றும் நர்மதா டெக்ஸ் ஆகிய 3 மூன்று தனியார் ஜவுளி ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தண்ணீர் வரி, லைசன்ஸ் வரி, சொத்து வரி கட்டவில்லை என்றால் உடனே அடாவடி வசூலில் நம்பர் ஒன் என்றால் ஈரோடு மாநகராட்சி என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஊழல் முறைகேடுக்கு பஞ்சம் இருக்காதாம்.

ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் பணி செய்யும் மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சியில் உள்ள பொருட்களை திருடி குப்பை எடுத்துச் செல்லும் வண்டிகளில் மறைத்து எடுத்துச் சென்று வெட்டுகட்டுவலசு,நசியனூர் ரோட்டில் உள்ள ரமேஷ் பழைய இரும்பு கடையில் கொடுத்து பணம் பெற்றுக் கொண்டு செல்லும் அதிர்ச்சி வீடியோ வெளிவந்துள்ளது. இது சம்பந்தமாக சம்பவம் நடந்த ஏரியாவில் விசாரித்தபோது இது காலங்காலமாக நடந்து கொண்டுள்ளது தான் இது ஒன்றும் புதிதல்ல என்று அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி இது போன்ற முறைகேடான செயல்கள் பல வருடங்களாக நடந்து வருவதாகவும் இதற்கு மண்டல அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் அனைவருமே குழந்தைதான் என்றும் இப்படி பொருளை விற்று வரும் பணத்தை அனைவரும் பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளன. இதையெல்லாம் தெரிந்து கொண்டு ஈரோடு மாநகராட்சி ஆணையர் கண்டும் காணாமல் இருப்பாராம். ஏனென்றால் அவருக்கு சேர வேண்டிய தொகை லட்சக்கணக்கில் செல்வதால் ஆயிரக்கணக்கில் வாங்கும் மாநகராட்சி ஊழியர்களை கண்டு கொள்வதில்லையாம். கடந்த அதிமுக ஆட்சியில் பத்து வருடங்களாக இதுபோன்ற பல முறைகேடுகள் ஈரோடு மாநகராட்சியில் நடந்து இருப்பதாகவும் ஆனால் லஞ்சம் மட்டுமே குறிக்கோளாக ஈரோடு மாநகராட்சி செயல்பட்டு வருகிறது என்றும் ஈரோடு மாநகராட்சி சாலைகள் மிகவும் சேதம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதை கண்டும் காணாமல் செல்வாராம் அந்த மாநகராட்சி ஆணையர்.

இந்த முறைகேடுகளுக்கு பின்னணியில் இருக்கக்கூடிய ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையர் வடிவுக்கரசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.