மாவட்டச் செய்திகள்

சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யும் நபர்களுக்கு திமுக கட்சியில் ஈரோடு மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் சீட்!?

பல வருடமாக சட்டவிரோதமாக செயல்படும் ஆன்லைன் சூதாட்டத்தால் சீரழியும் கூலித்தொழிலாளிகள் குடும்பங்கள்!!!
நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்!??

கடந்த பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் அதிமுக கட்சி பிரமுகர் என்று சொல்லிக்கொண்டு ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு ரோட்டில் வசிக்கும் ராஜா (எ ) குணசேகர் மற்றும் அவர் மனைவியும் சேர்ந்து, சொந்தமாக மூன்று இணையதளங்களை உருவாக்கி அதன் மூலம் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி சூதாட்டம் நடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.


2013இல் இதே ராஜா( எ ) குணசேகரும் மற்றும் அவர் மனைவி ராஜேஸ்வரியும் மாறும் ஈரோடு மரப்பாலம் லோகு என்ற லோகநாதன் சட்டவிரோதமாக கேரளாஅரசின் ஆன்லைன் லாட்டரியின்பெயரில் நடத்தி வந்துள்ளனர். இதற்கு உடந்தையாக பாலக்காடு குட்டையன்.ஓசூர் மோகன் ஈரோட்டில் பர்கத்வைதேகி மணி இந்த ஐந்துபேரும் ஏஜன்டுகள்.இதுசமங்தமாக அப்போதுள்ள நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாள் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் இந்த தகவல் கொடுத்ததின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடந்த இடத்திற்கே சென்று சோதனை நடத்த திருசெங்கோடு DSP சுஜாதாவுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் DSP சுஜாதா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியபோது ராஜா குணசேகர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எடுத்ததாகவும் அந்த பணம் சுமார் ரூ 35 லட்சம் ரூபாய் வரை கைப்பற்றி
ராஜா என்ற குணசேகரன் மற்றும் அவரது மனைவி லோகு மூவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து அதன் பின் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமாக DSP சுஜாதா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவர்களுக்கு உடந்தையாக உள்ளூர் காவல் நிலையத்தில் இருந்த காவல் உயர் அதிகாரிகளும் இருந்துள்ளனர். ஆகையால் விசாரணை செய்து அவரகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஒரு மாதத்திற்க்கு மேல் ராஜா குணசேகர் சிறையிலிருந்து அதன்பின் பிணையில் வெளியே வந்தார்.

தற்போது திமுக ஆட்சி வந்தவுடன் தற்போதுள்ள திமுக அமைச்சர் முத்துசாமி அவர்களை ராஜா என்ற குணசேகர் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு முத்துச்சாமி அமைச்சருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் கலைஞர் சிலைக்கு மாலை போடுவது போல் புகைப்படம் இதையெல்லாம் தன் அலுவலகத்தில் வைத்துக்கொண்டு சட்டவிரோதமான லயன் லாட்டரி விற்பனை செயல்களில் ஈடுபட்டு திமுக கட்சியின் பெயரை கலங்கப்படுத்தி வருவதாகவும் பலமுறை அமைச்சர் முத்துசாமிக்கு இந்த தகவல் சமூக ஆர்வலர் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராஜா குணசேகரன் அவரது மனைவியும் லயன்ஸ் அரிமா சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் அந்த அரிமா சங்கத்தின் மூலம் பல நல திட்ட உதவிகளை செய்து வருவதாக கூறிக் கொண்டு ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாக லாட்டரி வியாபாரம் செய்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

ஏனென்றால் இவர் திமுக கட்சியில் பொறுப்பில் இருப்பதாகவும் இவருக்கு உடந்தையாக தற்போது திமுக அமைச்சராக இருக்கும் சு.முத்துசாமி அவர்கள் உதவியாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் திமுக கட்சி பிரமுகர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு காவல் நிலையங்களில் காவல் அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

நடக்க உள்ள ஈரோடு மாவட்ட மாநகராட்சி தேர்தலில் திமுக கட்சி சார்பில் கவுன்சிலர் சீட் வேண்டும் என்று ராஜா என்ற குணசேகர் கேட்டு வருவதாகவும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் மாவட்டப் பொறுப்பில் உள்ளவர்களுக்குத்தர தயார் என்றும் கூறி வருவதாகவும் தகவல் வந்துள்ளது.


, .
காவல் துறையில் இதற்கு முன்பு ஐஜி இருந்த தற்போதய காவல்துறை உயர் அதிகாரி ADGP H. M. ஜெயராம் அவர்கள் தனக்கு நெருக்கமானவர் என்று ராஜா குணசேகர் காவல்துறையில் உள்ள அதிகாரிகளிடம் ராஜா கூறிக்கொண்டு் சட்டவிரோதமாக லாட்டரி ஆன்லைன் விற்பனை தொழிலுக்கு ஆதரவு தேடி வருவதாகவும் தகவல் வந்துள்ளது .
கடந்த அதிமுக ஆட்சியில் 5 வருடத்திற்குள் சுமார் 50 கோடி ரூபாய் மேல் மதிப்புள்ள அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் ராஜா என்ற குணசேகர் என்ற தகவல் வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் காவல்துறை உயரதிகாரி ஏடிஜிபி H. M. ஜெயராம் அவர்கள் பினாமியாக இருக்கிறார் என்று காவல்துறை அதிகாரிகளிடம் குணசேகர் ஏடிஜிபி பெயரை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் செந்தில் என்பவர் ஒரு நம்பர் லாட்டரி மூன்று நம்பர் லாட்டரியை சட்டவிரோதமாக விற்று வருவதாகவும்
இதனால் கூலி வேலை செய்யும் நடுத்தர தொழிலாளிகள் வரும் வருமானத்தில் லாட்டரிச் சீட்டு வாங்கி பணத்தை இழந்து தன் குடும்பங்களை கவனிக்கமுடியாமல் பாத்திக்கப் பட்டுள்ளனர்.
இந்த லாட்டரி சீட் வாங்கிய பல பேர் தன் சொந்த வீட்டை கூட விற்றுள்ளார்கள் என்றும் தகவல் வந்துள்ளது.
பலமுறை சமூகஆர்வலர்கள் காவல் துறைக்கு புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வந்துள்ளது.

ஏனென்றால் இவர் திமுக கட்சியில் பொறுப்பில் இருப்பதாகவும் இவருக்கு உடந்தையாக தற்போது திமுக அமைச்சராக இருக்கும் சு.முத்துசாமி அவர்கள் உதவியாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் திமுக கட்சி பிரமுகர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு காவல் நிலையங்களில் காவல் அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

தற்போது நடக்க உள்ள ஈரோடு மாநகராட்சித் தேர்தலில் கவுன்சிலர்பதவிக்கு இவர் போட்டியிடப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
ஆகையால் சட்ட விரோதமாக செயல்படும் சமூக விரோதிகளுக்கு திமுக கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்க கூடாது என்று
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பப் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக முதல்வர் மற்றும் காவல் துறை இயக்குனர் அவர்களுக்கு புகார் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
எது எப்படியோ ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் பொன் மொழியை கலைஞர் ஆட்சியில் இருந்த வரை பல நல்ல திட்டங்களை பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு கொண்டு வந்தார் அதேபோல் தற்போது உள்ள திமுக கட்சித் தலைவரும் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள் இனிமேல் இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் மீது சம்பந்தப் பட்ட
காவல் அதிகாரிகளுக்கு உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டால் மட்டுமே பல குடும்பங்கள் காப்பாற்றப்படும்
என்பதுதான் நிதர்சனம்..


திமுக கட்சி பெயர் மற்றும் காவல்துறை அதிகாரியின் பெயரை பயன்படுத்தி
சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்துவரும் ராஜா குணசேகரன் மற்றும் அவருக்கு உடந்தையாக அவரது மனைவி இரண்டு பேரையும் மற்றும் கருங்கல்பாளையம் செந்தில் ஆகியோர் மீது
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு
தீவிரமாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே
ஆன்லைன் விற்பனை லாட்டரி மூலம் பாதிக்கப்பட்டுள்ள
கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் காப்பாற்றப்பட முடியும் .
என்று சமூக ஆர்வலர்கள்

Tamil Nadu chief minister,DGP,vigilance and anti-corruption, chief secretary ஆகியோருக்கு புகார் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் மூன்று இணையதளத்தின் பெயர்கள்,
www.skylott.com
www.sunlott.com
www.punjablott.com

Website.
www.sunlott.org
www.skylott.org
www.punjablott.com
www.jackpotin.com

Copy to,

  1. The Director General of Police, Chennai.
  2. Directorate of Vigilance & Anti Corruption, Chennai
  3. The Chief Secretary of Tamilnadu, Chennai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button