ஈழத் தமிழர்கள்

உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக பதிவுகளை துண்டிப்பது நலத்திட்டங்களை நிறுத்துவது போன்ற கீழ்நிலை அதிகாரிகள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் அகதிகளுக்காக பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்துள்ள புலம்பெயர் தமிழர் பேரவை!!

இலங்கைத் தமிழர் அகதி முகாம் என்ற பெயரை இலங்கை தமிழர் மறுவாழ்வு என பெயர் மாற்றம் செய்த தமிழக அரசு கல்வி வேலைவாய்ப்பு நிரந்தர வாழ்வுக்கான குடியமர்த்த அல்லது குடியுரிமை போன்றவற்றில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு!


இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்துள்ள புலம்பெயர் தமிழர் பேரவை!!புலம்பெயர்ந்து வரும் ஈழத் தமிழர்களுக்கு சட்டப்பூர்வ பதிவு அடிப்படை வசதி வழங்க வேண்டும்.

இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாமல் தத்தளிக்கும் ஈழத்தமிழர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் தங்க வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களை அகதிகளாக பதிவு செய்திட போதிய அவகாசம் வழங்கி பொது அறிவிப்பு செய்ய வேண்டும்.

உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக பதிவுகளை துண்டிப்பது நலத்திட்டங்களை நிறுத்துவது போன்ற கீழ்நிலை அதிகாரிகள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஆதரிப்பது உள்ள பெண்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பும் நபர்கள் மீதான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு சட்ட வழிகள் மூலம் அவர் தம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அகதிகளாகப் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை அயல்நாட்டவர் சட்டத்தின் கீழ் சிறப்பு முகாமில் அடைக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..


இலங்கை தீவின் உள்நாட்டு பிரச்சினைகளை தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் நிகழ்வுகள் தொடர்ந்து பல ஆண்டுகள் நடைபெற்று வருகிறது 1983 ஜூலை இன கலவரத்தால் தொடங்கி இன்றளவும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கடல் மற்றும் வான் வழியில் இந்தியா வந்தடைந்துள்ளனர் தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையின் கீழ் இவர்கள் அனைவரும் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்ட தோடு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சொந்த செலவில் முகாமுக்கு வெளியில் தங்கும் அனுமதிக்கப்பட்டனர் உள்நாட்டுப் போரின் உச்ச கட்டமாக கடந்த 2009இல் இலங்கையில் பேரறிவும் இனப்படுகொலையும் நடந்து முடிந்த பின்னரும் தமிழ் மக்களின் இன்னல்களுக்கு முடிவு ஏதும் ஏற்படவில்லை சட்டவிரோதமாக கைதுகள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் அரசியல் கைதிகளை நீண்டகால சிறைவாசம் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவது அரசியல் சமூக பொருளாதார புறக்கணிப்புகள் தமிழர் பகுதிகளில் சிங்கள பேரினவாத அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட சின்னங்களை நிறுவுவதற்கான தொடர்ந்து தமிழர் விரோத நடவடிக்கைகளை இலங்கை அரசு கடைபிடித்து வருகிறது இந்த சூழ்நிலையில் கடந்த 2021ல் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பேரவையில் 22 நாடுகளின் தீர்மானம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்

மேற்கண்டவாறு இலங்கைத் தீவின் முடிவுறா அரசியல் சிக்கல்களை கிடைக்கும் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்துவதற்காக உலகமெங்கும் வாங்கிய கடன்கள் ஆளும் ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் லஞ்ச லாவண்ய செயற்பாடுகளாலும் இலங்கை அரசு மீளமுடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி அனைத்து மக்களும் வாழ்ந்து வீதிக்கு வந்துள்ளனர் இத்தகைய சூழ்நிலையில் கடந்த 22 2022 தொடங்கி இது நாள் வரையில் முப்பத்தி ஒன்பது ஈழத் தமிழர்கள் கடல் வழியாக தப்பித்து ராமேஸ்வரம் வந்து தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர் இலங்கை அரசு இந்தியாவிடம் கையேந்தி கோடிக்கணக்கில் கடன் வாங்கி தமிழ்நாட்டு மீனவர்களை கொலை செய்வது உடைமைகளை சூறையாடுவது சிறையில் அடைத்து சித்திரவதை செய்வது போன்ற மனிதத்தன்மையற்ற குற்றங்களை செய்வதோடு தமிழீழ மக்களுக்கு எத்தகைய அரசியல் தீர்வையும் வழங்காமல் அவர்களை கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இலங்கைத் தீவின் தமிழீழ மக்கள் 1980 களில் தொடங்கி இன்றளவும் உலகமெங்கும் போகும் புலம் பெயர்ந்து வருவதையும் பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் மேலே தேசங்களுக்கு சென்று நிம்மதியாக வாழ்வை தேடிச்சென்ற ஈழத்தமிழர்கள் நடுவழியில் தங்கள் கடல் பயணம் தடைப்பட்டு டியாகோ கார்சியா தீவு இந்தோனேசியா போன்ற இடங்களில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வாழ்ந்து வருவதையும் நாம் அறிவோம் இந்திய அரசு அகதிகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடாத காரணத்தாலும் அகதிகள் சட்டம் புகலிட சட்டம் குறித்து தெளிவான வரையறைகள் இந்தியாவில் இல்லாத காரணத்தினாலும் தமிழகத்தை தேடி வந்த ஈழ ராத்
ஏதிலிகளுக்கு 35 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்தியாவில் குடியுரிமை கிடைக்க வில்லை என்பது வேதனையான செய்தியாகும்.

தமிழ்நாட்டில் ஈழ ஏதிலியர் 104 முகாம்களில் 68,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் முகாம்களில் அல்லாது அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்து வெளிப் பதிவு எதிரிகளாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து வாழ்ந்து வருகின்றனர் கடவுச்சீட்டில் இந்தியா வந்து பல்வேறு காரணங்களால் இலங்கைக்கு திரும்பிச் செல்லமுடியாத ஈழத் தமிழர்களும் உள்ளனர் மேலும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் கிட்டத்தட்ட 110 ஈழத்தமிழர்கள் சிறைக்கு நிகரான திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களில் 44 பேர் முறையாக தங்களை அகதிகளாக பதிவு செய்து குடும்பத்தினரோடு அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தவர்கள் 23 கனடா செல்லும் எண்ணத்தில் இலங்கையில் இருந்து கிளம்பி சில நபர்களால் தவறாக வழி நடத்தப்பட்டு தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு விரைவான வழக்கு விசாரணை இல்லாமல் சிறப்பு முகாமில் உள்ளனர் மீதம் உள்ள ஈழத்தமிழர்கள் அயல்நாட்டவர் சட்டம் கடவுச்சீட்டு சட்டம் போன்றவற்றின் கீழ் வழக்குத் ஒடுக்கப்பட்டவர்கள் சிறப்பு முகாமில் அடைப்பதற்கான சட்டநடவடிக்கை இந்திய அயல்நாட்டவர் சட்டம் 1947 பிரிவு மூன்றில் இரண்டு படி எடுக்கப்பட்டாலும் ஒரு நபரை சிறப்பு முகாமில் அடைப்பதற்கும் அவரை விடுவிப்பதற்கு முழு அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது ஈழத்தமிழர்களால் குற்ற வழக்கு தொடுக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வழக்கில் நீதி மன்றத்தால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட நீதிமன்றம் வழங்கிய தண்டனையை கழித்து முடித்தவர்கள் வழங்கிய இல்லாதவர்கள் என பலரும் பன்னெடுங்காலம் சிறப்பு முகாமில் வாடி வருவது வேதனையாக நிகழ்வாகும் தமிழக அரசு இலங்கைத் தமிழர் அகதி முகாம் என்ற பெயரை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்துள்ளேன் ஈழ ஏதிலியர் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதையும் பல தரப்பினர் பாராட்டி நாளும் ஈழத்தமிழர்களின் கல்வி வேலைவாய்ப்பு நிரந்தர வாழ்வதற்கான குடியமர்த்த அல்லது குடியுரிமை போன்றவற்றில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும் தற்போதைய இலங்கை அரசின் பொருளாதார நிலையில் இருந்து தமிழகம் வரும் எதிரிகள் மீது வழக்கு கமல் அவர்களை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பிவைத்து உதவிகள் செய்திட தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை மனிதநேயமிக்க பாராட்டுக்குரிய செயல் ஆகும் அதோடு இந்திய ஒன்றிய அரசு உடன் உடன்படாமல் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்திடவும் கடல் கடந்து வரும் தமிழ் மக்களை பாதுகாக்கவும் தமிழக முதல்வர் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளது அறியமுடிகிறது.

என்று தோ.மா . ஜான்சன் . நிறுவனர் தலைவர்
புலம்பெயர் தமிழர் பேரவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button