நீதி மன்றம் தீர்ப்பு

உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஆஜராகாமல் சிக்கித் தவிக்கும் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஐஏஎஸ்!?

நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஐ ஏ எஸ் அவர்கள் நில நிர்வாக இணை ஆணையர் செந்தாமரை ஐஏஎஸ் அவர்களை சில மாதங்களுக்கு முன்பு தரக்குறைவாக பேசியது இல்லாமல் ( get out office room) என்று தொலைபேசியில் மிரட்டிய ஆடியோ சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்தியது.
அதன் பின்னர் Commissioner, Land Administration, இணை ஆணையர்
செந்தாமரை ஐஏஎஸ் அலுவலகத்தை காலி செய்யுமாறு நாகராஜன் ஐ ஏ எஸ் உத்தரவிட்டுள்ளார்.
30 வருடங்களாக CLA நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த துறையை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு மாற்றியதால் இணை ஆணையர் செந்தாமரை ஐஏஎஸ் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செந்தாமரை ஐஏஎஸ் அவர்கள் பட்டியல் சமூகத்தை
சேர்ந்தவராக இருப்பதால் தன்னை நாகராஜன் ஐஏஎஸ் தரக்குறைவாக தொலை பேசியிலும் நேரிலும் தகாத வார்த்தைகளால் பேசியதாக( National Commission for Scheduled Castes) தேசிய பட்டியல் இனத்தவருக்கான ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்ததன் பெயரில்

இந்த புகார் மீது தேசிய பட்டியல் இனத்தவருக்கான ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் எழிலகத்தில் உள்ள நாகராஜன் ஐஏஎஸ் அலுவலகத்தில் விசாரணை நடத்தியதில் நாகராஜன் ஐஏஎஸ் செந்தாமரை ஐஏஎஸ் அவர்களை தரக்குறைவாக பேசியது உறுதியானது. நாகராஜன் ஐ ஏ எஸ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்திற்கு தேசிய பட்டியல் இன ஆணையம் கேட்டுக் கொண்டதன் பெயரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 9/01/2023 அன்று நாகராஜன் ஐ ஏ எஸ் ஐ அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்த நிலையில் நாகராஜன் ஐ ஏ எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வந்தது.அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கிலிருந்து நாகராஜன் ஐ ஏ எஸ் தன்னை காப்பாற்றிக் கொள்ள தேசிய பட்டியலின ஆணையத்தில் செந்தாமரை ஐஏஎஸ் அவர்கள் கொடுத்த புகாரை எப்படியாவது வாபஸ் வாங்க சொல்லி தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அவர்களை நாகராஜன் ஐ ஏ எஸ் நேரில் சந்தித்து தனக்கு உதவுமாறு கெஞ்சி கேட்டு வருவதாகவும் ஆனால் நேர்மையான தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எந்தவித பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார் என்ற தகவலும் வந்துள்ளது. ஏனென்றால் கடந்த அதிமுக ஆட்சியில் இதே நாகராஜன் ஐ ஏ எஸ் சென்னை கோயம்பேடு பகுதியில் ஐந்து ஏக்கர் நிலத்தை பாஸியம் கட்டுமான நிறுவனத்திற்கு நில மாற்றம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது உயர் மன்றத்தில் வழக்கு ஒன்று போடப்பட்டது. அந்த வழக்கு தற்போது வரை விசாரணையில் இருந்து வருகிறது . அந்த வழக்கிலும் நாகராஜன் ஐ ஏ எஸ் சரியாக ஆஜராகாமல் எப்படியாவது அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரிடம் அடைக்கலம் ஆகியிருப்பதாகவும் அந்த நபர் மூலம் தற்போது நேர்மையான தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அவர்களை சந்தித்து தன்னை நிரபராதியாக காட்டிக் கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. ஆனால் தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நேர்மையானவராக இருப்பதால் நாகராஜன் ஐ ஏ எஸ் எடுக்கும் நூதன முயற்சிக்கு இதுவரை எந்த பலனும் கைகூடி வரவில்லை .தற்போது சிக்கித் தவிக்கும் நாகராஜன் ஐ ஏ எஸ் குட்டி போட்ட பூனை போல் சுற்றி சுற்றி வருவதாக எழிலகத்தில் உள்ள அலுவலகங்களில் பரவலாக பேசப்படுகிறது.
எது எப்படியோ தற்போது உள்ள தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் மாவட்ட ஆட்சியாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படையாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் மற்ற துறைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ள நாகராஜன் ஐஏஎஸ் போன்ற அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் பற்றி பல குற்றச்சாட்டுகள் பல புகார்கள் வந்து கொண்டுள்ள நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் மௌனம் காப்பது ஏன் . அதுவும் முக்கியமாக நாகராஜன் ஐ ஏ எஸ் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் பின்னணியில் இருந்து தடுப்பது யார் என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள நாகராஜன் ஐ ஏ எஸ் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் இருப்போம்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button