குன்னூர் பகுதிகளில் சட்டவிரோதமாக ராட்சத பாறைகளை வெடிவைத்து உடைத்து கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் அதிர்ச்சி வீடியோ!நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தை தடுக்க
நடவடிக்கை எடுப்பாரா நீலகிரி மாவட்ட ஆட்சியர்!?

உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பகுதியான நீலகிரி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கியமான சந்திப்புப் புள்ளியாகும். ”மலைகளின் அரசி” எனப்படும்.
நீலகிரி மாவட்டம் 2452.50 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள், 6 வருவாய் வட்டங்கள், 4 ஊராட்சி ஒன்றியங்கள், 88 வருவாய் கிராமங்கள், 15 வருவாய் ஃபிர்காக்கள், 35 ஊராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகள் உள்ளன.
உதகமண்டலம், குன்னூர் (உதகையி்ல் இருந்து 19 கி.தொலைவு) மற்றும் கோத்தகிரி (உதகையி்ல் இருந்து 31 கி.மீ) ஆகியவை நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களாகும்.
பசும்புல்வெளிகள், அடர்த்தியான சோலைகள், எழில்கொஞ்சும் அருவிகள், சிற்றோடைகள், ஏரிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், அவற்றிற்கிடையே அமைந்துள்ள காய்கறித் தோட்டங்கள், கண்கவர் காட்சிமுனைகள், அரிதான தாவரங்கள், விலங்கினங்கள், அற்புதமான மலையேற்றப் பாதைகள், எண்ணிலடங்கா பாரம்பரிய இடங்கள், வியக்க வைக்கும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக் காட்சிகள், பல்வேறு வண்ணங்களுடன் கூடிய வான்வெளிகள், மாசு இல்லாத சுற்றுச்சூழல், மூடுபனி, மேகக் கூட்டங்கள் ஆகியவற்றுடன் கூடிய நீலகிரி மாவட்டம் பார்பவர்களுக்கு விருந்தளிக்கக்கூடிய, மனதிற்கு இதமளிக்கக்கூடிய இடமாக உள்ளது.நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி ஆனது MSL க்கு 900 முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதன் அட்சரேகை மற்றும் நீள அளவுகள் 185 கி.மீ. (அட்சரேகை: 76.0 E முதல் 77.15 E வரை) 130 கி.மீ (அட்சரேகை: 10 – 38 WP 11-49N). நீலகிரி மாவட்டம் ஆனது வடக்கே கர்நாடகா மாநிலமும், கிழக்கே கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டமும், தெற்கே கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் கேரளா மாநிலமும், மேற்கே கேரளா மாநிலமும் எல்லைகளாக கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலப்பகுதி ஆனது உருளும் மற்றும் செங்குத்தானது. 60% பயிரிடக்கூடிய நிலப்பகுதியில் 16% முதல் 35% வரை சரிவுகளில் உள்ளது.
மலை மாவட்டமான நீலகிரி யில் சுமார் 67% வன பகுதி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய உயிர் சூழல் மண்டலமாக விளங்குவதால் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் பயன்படுத்த தடை, கற்கள் உடைக்க, ஆழ்துளை கிணறு அமைக்க, தொழிற்சாலைகளை திறக்க என பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலச்சரிவு அதிகமாக ஏற்படுவதால் பாறைகளை உடைக்கவும் மண்ணை வெட்டி எடுத்து அகற்றவும்
வீடு கட்ட மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும். இதனால் நீலகிரி மாவட்டத்தை சார்ந்த சாதாரன மக்கள் வீடு கட்ட அனுமதி கேட்டு பல ஆண்டுகளுக்கு மேலாக காத்து கிடக்கின்றனர்.
ஆனால் உதகை நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நீதிமன்ற உத்தரவை மீறி வசதி படைத்தவர்கள் மலைகளை குடைந்து சாலை அமைத்து கட்டுமான பணிகளை செய்து வருவது, அதிர்ச்சியை தருகிறது.




ராட்சத பாறைகளை வெடி வைத்து உடைத்து கட்டுமான பணிக்கு பயன்படுத்துவது என பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டு வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
.உயர் நீதிமன்ற தடையை மீறி உதகையில் பாறைகள் உடைப்பு… பகிரங்கமாக .நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாக்கு உட்பட்ட எடப்பள்ளி பஞ்சாயத்து ஆர்டர்லி இருந்து அளக்கரை செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது . அதன் அருகே ஒரு ஏக்கர் நீளம் புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர் அதை ஆக்கிரமித்து தான் பாறைகளை உடைத்து விதிமீறல்செய்து வருவதாகவும்
அரசு புறம்போக்கு இடத்தில் ஒரு ஏக்கர் அளவிற்கு சுற்றியுள்ள


.jpg)





பாறைகளை வெடி மற்றும் கெமிக்கல் ஊற்றியும் பாறைகளை உழிகளால் வெட்டி இயற்கை வளங்களை அழித்து வருவதாக அப்பகுதி மக்கள் கொடுத்த
தகவலின் பெயரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நான்கு சமூக ஆர்வலர்கள் சென்று அங்கு இருந்த பத்துக்கும் மேற்பட்ட கல் உடைப்பவர்கள் மற்றும் அந்த இடத்திற்கு சொந்தமான உரிமையாளரிடம் மலைப்பகுதியில் பாறைகளை உடைப்பதற்கு அரசு அனுமதி உள்ளதா கேட்டதற்கு என்னுடைய இடத்திற்கு எப்படி அனுமதி இல்லாமல் உள்ளே வரலாம் என்று கூறி சமூக ஆர்வலர்களின் கைப்பேசியை பறித்துக் கொண்டு புகைப்படம் எதுவும் எடுக்கக் கூடாது எடுத்தால் நாங்கள் பாறைக்கு வெடி வைப்பது போல் உங்களையும் வெடிவைத்து தகர்த்து விடுவோம் எலும்பு கூட மிஞ்சாது என்று தகாத வார்த்தையில் கூறி நீங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிமன்ற நீதிபதி அனைவரும் எனக்கு தெரியும் எனவும் கூறி கொலை மிரட்டல் எ
விடுத்துள்ளார்
அந்த இடத்தின் உரிமையாளர் .
அதன் பின்பு சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை பற்றி நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோட்டாட்சியர் தாசில்தார் அனைவரிடமும் புகார் செய்வோம் என்று கூறியவுடன் அங்கு வேலை செய்த அனைவரும் தெறித்து ஓடினர் மேலும் அந்த இடத்தின் உரிமையாளரும் அங்கிருந்து சென்றுவிட்டார். அவருடன் இருந்த டுபாக்கூர் கமிஷன் ஆர்வலர் நழுவி சென்று விட்டார் மேலும் தேர்தல் நேரம் என்பதால் அரசு அதிகாரிகள் தேர்தல் பணியில் இருப்பதை அறிந்து கொண்டு ஒரு கமிஷன் அலுவலரை பயன்படுத்திக் கொண்டு யாராவது அரசு அதிகாரிகள் வேலை செய்யும் இடத்திற்கு வருகின்றார்களா இல்லையா என்று தகவல் பெற்றுக் கொண்டு ஒரு மாத காலமாக மலைகளில் உள்ள பாறைகளை உடைத்து வருவதாகவும் மேலும் அங்கு யாராவது சென்றால் மாவட்ட ஆட்சியர் முதல் தாசில்தார் வரை கூறிவிட்டு தான் வேலை செய்கிறோம் என்று தவறாக

மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் பெயரை பயன்படுத்தி சட்டவிரோதமாக பாறைகளை வெட்டி எடுத்து வேலை செய்து வருவதாகவும் இதுகுறித்து குன்னூர் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில்ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதாகவும் . இது சம்பந்தமாக உதகை மண்டலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரிடம் புகார் கொடுப்பதற்கு முயற்சி செய்தும் அவரை நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் இந்த அலுவலகம் எப்போதுமே பூட்டி இருப்பதாகவும் அலுவலகத்திற்கு நீலகிரி உதகை மண்டலம் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வருவது இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்ற துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே சட்டவிரோதமாக பாறைகளை வெட்டி எடுத்ததற்கும் அது மட்டுமில்லாமல் தவறாக அரசு அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி வருவதற்கும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இல்லை என்றால் வரும் காலங்களில் இது போன்ற தனி நபர்கள் இயற்கை வளம் சூழ்ந்த அரசின் பெயர் கொண்ட நீலகிரி சுற்றியுள்ள மலையில் உள்ள பாறைகளை வெட்டி எடுத்து இயற்கை வளங்களை அழித்து வரும் சமூகவிரோதிகள் த மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
என சமூக ஆர்வலர்களும் அப்பாவி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இவர்கள் போல் சமூகவிரோதிகள் திருட்டுத்தனமாக பாறைகளை உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இயற்கை வளங்களை பாதுகாக்கவும் நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தை தடுக்கவும் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டு வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.ஆகவே
நீலகிரி மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்..