மாவட்டச் செய்திகள்

உயிரிழந்த வனச்சரகர்கள் குடும்பத்தினருக்கு பரிசும் நற்சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலைப்பள்ளியில் (27.09.2021) மேகமலை புலிகள் காப்பகம் மூலம் தேசிய புலிகள்

பாதுகாப்பு அமைப்பு சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, “புலிகளுக்கான இந்தியா” என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, அவர்கள் துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியாவின் புலிகள் மற்றும் காடுகள் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இந்தியாவின் 51 வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இது 5 வது புலிகள் காப்பகமாகும். இது நமது மாவட்டத்திற்கு ஒரு பெருமையான விஷயமாகும். திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமானது, புலிகள் மட்டுமல்லாமல், தண்ணீரை ஆதாரமாக கொண்டு அறிவிக்கப்பட்ட முதலாவது புலிகள் காப்பகம் என்ற சிறப்புக்கு உரியதாகும்.

புலிகள் காடுகளில் பாதுகாப்பாக இருந்தால், அந்த காடுகள் பாதுகாப்பாக இருக்கிறது என்று அர்த்தம், காடுகள் பாதுகாப்பாக இருந்தால், நாடு பாதுகாப்பாக இருக்கும்;. காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை குறையாமல் நாம் பாதுகாப்பதன் மூலம் சுற்றுசூழல் அமைப்பில் எண்ணற்ற ஒரு நிலையான சூழல் சேவைகளை அது வழங்கும். இது வாழ்க்கை ஆதாரத்திற்கு மிக முக்கியமானது. வனத்துறையின் முயற்சியால் தற்போது புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு வனத்தின் வளத்திற்கான குறியீடு புலிகளாகும். காடுகளால் நாடு வளமாகும். இயற்கையை பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும். அனைவரும் தங்களால் முடிந்த அளவு இயற்கையை பலப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தலுக்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள வனங்களையும், வன உயரினங்களையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழப்புணர்வு ஏற்படு;த்தும் வகையில் இந்த மாபெரும் விழிப்புணர்வு பேரணி திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தொடங்கப்பட்டு, இந்த பேரணி ஶ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் வழியாக ஆணைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் முடிவடைகிறது.

முன்னதாக, வனத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மற்றும் வனத்துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் குடும்பந்தினர்கள் 7 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, வழங்கினார்.

வனம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி,., அவர்கள் தலைமையில் அனைத்து மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் விழிப்புணர்வு உறுதுமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து, புலிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.அதனை தொடர்ந்து, இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, “புலிகளுக்கான இந்தியா” என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியில் சுமார் 300 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டு, காடுகள் மற்றும் வன விலங்குகள் அவசியம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் பிரதிவிராஜ், வனபாதுகாவலர் மற்றும் கள இயக்குநர்(மதுரை மண்டலம்) தீபக் எஸ்.பில்கி, ஶ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக துணை இயக்குநர் மரு.திலீப்குமார்,இ.வ.ப., உதவி வன பாதுகாவலர்(களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்) ஆர்.ராதை, உதவி வன பாதுகாவலர் எஸ்.மணிவண்ணன், நகராட்சி ஆணையாளர் மல்லிகா, திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button