உரம் தயாரிக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு!
தேனி அல்லிநகரம் நகராட்சியில் அச்சத்துடன் உயிர் வாழும் பொதுமக்கள்!
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் தினமும் 10முதல் 12 டன் குப்பை பெறப்படுகின்றது. நகராட்சி நுண் உரகூட மையங்களில் கொண்டு சென்று 40 நாட்களில் உரங்களாக மாற்றப்படுகின்றது….
பொதுமக்களிடம் நாம் கேட்டபோது, தேனி – அல்லிநகரம் நகராட்சியில் 13வது வார்டு உரம் குப்பைக் கழிவுகள் தரம் பிரிக்க இயந்திரங்கள் மூலம் அரைக்கும் பகுதியின் அருகில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வசித்து வருகிறார்கள்
இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு அதிகமாக இருப்பதாகவும் கழிவு தூசியால் குடியிருப்பு பகுதி முழுவதும் படிந்தும், சுவாசம் செய்ய முடியாமல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குடிதண்ணீர் குடிக்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. சிறுவர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரைக்கும் தொற்று நோய்கள் பரவும் அபாயமாக உள்ளதால் இப்பகுதியில் அச்சத்துடன் உயிர் வாழ்ந்து வருகிறோம். இதுதொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகம், மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் வரை மனுக்கள் கொடுத்தும், அலைந்து தவித்தும் கூட, இது வரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அரசுத்திட்டம் என்பதால், நிறுத்த முடியாது. அனுசரித்து இருங்கள் என்று சுகாதாரம் பேண வேண்டிய நகராட்சி அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.சுகாதார சீர்கேட்டினை அரசு திட்டம் என்ற பெயரில் ஏற்படுத்தி வருவது வேடிக்கையாக இருக்கிறது. நகராட்சி அலுவலகத்தில் குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு இருக்கும் அதிகாரிகளுக்கு பொதுமக்களாகிய, எங்களது கஷ்டம் எப்படி தெரியும். நாங்கள் படுற கஷ்டத்தை யாரிடம் சொல்வது …இதுக்கு ஒரு நல்ல முடிவை சொல்லாமல் எங்கள் பகுதி மக்களை புறக்கணிப்பதா? என்று கண்ணீர் மல்க, அப்பகுதியில் புலம்பித் தெரிவித்தனர்.
எது எப்படியானாலும், தமிழ்நாடு அரசும் , நகராட்சி நிர்வாகத் துறை உயர் அதிகாரிகளும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தேனி மாவட்ட நிர்வாகமும், தேனி நகரின் 13 வது வார்டு பகுதி மக்கள் சார்பாக குற்றம் சாட்டப்பட்ட இடத்தில் நேரில் பார்வையிட்டு களவு ஆய்வு மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும் என்பதே, அப்பகுதிவாழ் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும்.
– அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துகுமாரிடம் கேட்டப் போது, உரம் குப்பைக் கழிவுகளை, தமிழ்நாடு அரசின் திட்டத்தின்படி பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் நலனை கருத்திற்கொண்டு அப்பகுதியில் செயல்படுத்தி, அப்பகுதியினை தூய்மைப்படுத்தி, அரசுப் பங்காவாக அமைக்க இருக்கிறோம். அக்கழிவுகளை வேறெங்கும் எடுத்துச் செல்ல, அனுமதி இல்லை. காற்று மாசு பராவாமல் தண்ணீர் தெளித்து, செயல்முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வை செய்திடவும், முறையாக கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று நம்மிடம் தெரிவித்தார்.
நிர்வாக இணை இயக்குனர் விஜயகுமார்அல்லிநகரம் நகராட்சியில் நடந்து வரும் பல்வேறு திட்டப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். புதிய பஸ் நிலையம் அருகில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் கூடம்,பார்வையிட்டு ஆய்வு செய்தார்.