4 ஏக்கர் ஊரணியை ஆட்டையை போட்டு (ஆக்கிரமித்து) 40 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வணிக கட்டிடங்கள்! கோமாவில் இருக்கும் மதுரை மாவட நிர்வாகம் !?
நீர் பிடிப்பான ஊரணியை ஆட்டையை போட்டு (ஆக்கிரமித்து) 40 மேற்பட்ட கட்டிடங்கள் கட்டி வணிக வளங்கள் மற்றும் குடியிருப்புகளாக மாறிய அவலம்! ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மதுரை மாவட்டம் நிர்வாகம்!
உசிலிம்பட்டி சட்டமன்றத்திற்குட்டட்ட செல்லம் பட்டி யூனியன் சோழவந்தான் அருகே அமைத்துள்ள விக்கிரமங்கலம் ஊராட்சி உள்ளது . விக்கிரமங்கலம் ஊராட்சி சுற்றி உள்ள 30.க்கும் மேற்பட்ட கிராமத்தில் 30 ஆயிரம் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விக்கிரமங்கலம் சுற்றியுள்ள பொது மக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லவும் மதுரை மற்றும் வெளியூர் செல்ல விக்கிரமங்கலம் ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருவதால் அப்பகுதிகளுக்கு முக்கிய போக்குவரத்து வசதி படைத்த பேருந்து நிலையமாக தற்போது இருந்து வருகிறது.
விக்கிரமங்கலம் ஊராட்சி கட்டுபாட்டில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேரூந்துகள் மூலம் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுரை உசிலம்பட்டி நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வரும் நிலையில் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இருந்தும் கழிப்பறை வசதி இல்லாததால் பேருந்து நிலையத்தை சுற்றி ஆண்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வரும் அவல நிலை. அதேபோல் பெண்களுக்கான கழிப்பறை. பயணியர் நிழற்கொடை. தாய் சேய் குழந்தைகள் பாலுட்டும் அறை .போன்ற எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி உள்ளதால் பேருந்து நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் அவல சூழலில் உள்ளது.
பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம் விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நீர் பிடிப்பு ஊரணி பகுதியாகும் . 4.32.ஏக்கர் பரப்பளவில் இருந்த ஊரணியை காலப்போக்கில். சட்ட விரோதமாக தனி நபர்கள் ஆக்கிரமித்து பேருந்து நிலையம் அமைந்துள்ள ஊரணியின் வடக்கு மேற்கு பகுதியில் உள்ள நீர் பிடிப்பு இல்லாத இடங்களில் தனி நபர்கள் ஊரணியை ஆட்டையை போட்டு சட்டவிரோதமாக ஹோட்டல் கடைகள் மற்றும் குடியிருப்பு வீடுகள் 40க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டி உள்ளனர்.சட்ட விரோதமாக கட்டியுள்ள இந்தக் கட்டிடங்களுக்கு மீன் இணைப்பு எப்படி வழங்கப் பட்டது என்றும் மழைக்காலங்களில் இந்த ஊரணியில் நீர் தேங்கி நிற்கும். அதனால் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வந்த ஊரணி தற்போது ஒரு ஏக்கர் பரப்புக்கு குறைவாகவே சுருங்கி காணப்படுகிறது . கோடை காலங்களில் நீர் பிடிப்பு பகுதி வறண்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் குறைந்துள்ளது .இதனால் விவசாயம் மற்றும் குடி நீர் பற்றாக்குறை ஏற்படும் அப்பாய நிலையில் உள்ளது என்று அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு சம்பந்தமாக விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கலியுகநாதன் அவர்களிடம் கேட்ட போது அவர் கூறிய தகவல்.
ஊராட்சி பராமரிப்பில் உள்ள பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவையான கட்டிடம் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளோம்.பேருந்து நிலைய மேம்பாடு திட்ட வரைவு அனுமதி கிடைத்த பின் பேரூந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றி வணிக வளாகம் . உள்ளிட்ட. திட்ட பணிகள் மூலம் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அவர் கூறிய பதில் உச்ச நீதி மன்றம் தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் ஊரணி ஆக்கிரமிப்பில் உள்ள பொது மக்கள் போக்குவரத்து பயன்பாட்டி முக்கிய பங்களிக்கும் பேருந்து நிலையத்திற்கு தேவையான இடம்போக மீதமுள்ள ஆக்கிரமிப்பு இடங்களில் இருக்கும் கடை மற்றும் வீடுகள் வணிக வளாகம் உள்ளிட்ட திட்ட பணிகள் மூலம் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பொது மக்கள் போக்குவரத்து பயன்பாட்டி முக்கிய பங்களிக்கும் பேருந்து நிலையத்திற்கு தேவையான இடம்போக மீதமுள்ள ஆக்கிரமிப்பு இடங்களில் இருக்கும் கடை மற்றும் வீடுகளை அப்புறப்படுத்தி ஊரணியில் தண்ணீர் தேங்கி நின்று நிலத்தடி நீர் ஆதாரம் பெருக சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க பலமுறை சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் மதுரை மாவட்ட நிர்வாகம் கோமாவில் இருப்பதாகவும் இனிமேலாவது கண் விழித்துக் கொண்டு ஆகிரமிப்பு கட்டிடங்களை அகற்றி நீர் பிடிப்பு ஊரணியை காப்பாற்ற முயற்சி எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழப்பி உள்ளனர்.
.