ஊருக்குள் நுழைந்த
அரிசி கொம்பன் யானை அட்டகாசம் செய்யும் அதிர்ச்சி வீடியோ! ஊரை விட்டு வெளியேற பொதுமக்களுக்கு எச்சரிக்கை!உயிரைப் பலி கொடுக்கும் முன் யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்குமா தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம்!?
ஆக்ரோஷமாக ஊருக்குள் நுழைந்த
அரி கொம்பன் செய்யும் அட்டகாசம்!அச்சத்தில் பொதுமக்கள் !
தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் காட்டு யானை!
கேரள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் 18 பேரை கொன்று உள்ளது. இதில் ஐந்து பேர் தமிழர்கள் அட்டகாசம் செய்துவரும் அரிசிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம்
வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
உயிரைப் பலி கொடுக்கும் முன் யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்குமா தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம்!? அரிக்கும்பன் யானை முகாமிட்டுள்ள கம்பம் நகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டு அறிகும்பனை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மயக்க ஊசி செலுத்தி பிடித்த ஹ
அரிகொம்பனுக்கு 90 நாட்கள் ஆக வேண்டும் அதன் பின்பு தான் மயக்கம் ஊசி போட வேண்டும். தற்போது மயக்க ஊசி செலுத்தி ஒரு மாதம் ஆன நிலையில் மருத்துவர்கள் மயக்க ஊசி போடலாமா என்பதை ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்காக கம்பம் நகரப் பகுதிகளில் கனரக வாகனங்களை சாலைகளில் குறுக்கே நிறுத்தி ஹரி கொம்பனை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தும் பணியில் 200க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் தேனி மாவட்ட காவல்துறையினர் தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சில தினங்களாக தேனி மாவட்ட நிர்வாகத்தையே மிரட்டி ஆட்டம் கண்டு வைத்துள்ளது அரிக்கொம்பன் யானை !தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம்,கூடலூர் அருகே, கழுதை மெட்டுப்பகுதியில்,
தனியார் தென்னை தோப்பில் நுழைந்து
அரி கொம்பன் யானை அட்டகாசம்; ஆகையால் ஊருக்குள் இருக்கும் பொதுமக்கள் வெளியேற வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறை அதிகாரிகளுடன் தேனி மாவட்ட காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, தகவல் !
ஏனென்றால் தேனி மாவட்ட மலைப்பகுதியில் வலம் வரும் அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க தேனி மாவட்ட வனத்துறையினர் திணறி வருவதாக தகவல் வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் கேரளா வனப்பகுதியை விட தேனி மாவட்ட வனப் பகுதியின் பரப்பளவு அதிகமாகக் கொண்டது. மிகப்பெரிய பரப்பளவு கொண்ட தேனி மாவட்ட வனப்பகுதியில் தேனி மாவட்ட வனத்துறை நிர்வாகத்தில் போதுமான வனத்துறை அதிகாரிகள் வனத்துறை காவலர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அது.அட்டுமில்லாமல் தற்போது உள்ள வனத்துறையினர் பெரும்பாலும் வனப்பகுதிக்கு செல்வதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
ஆகவேதான் அரிக் கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. கடந்த 10 தினங்களாக வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்களா !?இல்லை கேரள எல்லைக்கு திருப்பி அனுப்ப முயற்சி செய்து வருகிறார்கள் என்று தேனி மாவட்ட நிர்வாகம் குழப்பத்தில் இருப்பதாக மலைவாழ் மக்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இந்தக் கேள்விக்கு தேனி மாவட்ட ஆட்சியரின் பதில் என்னவாக இருக்கும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கேரளா தொழிலாளிகளை தாக்கி கொன்ற அரிக் கொம்பன் யானை தற்போது வளம் வரும் தேனி மாவட்டத்தில் ஒரு தொழிலாளியை கூட தாக்கி கொன்று விடக்கூடாது என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஆகவே அரிக்கொம்பன் யானை சுற்றித் திரியும் வனப்பகுதிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளாமல் அலுவலகத்தில் இருந்து அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர். ஆகவே மலைவாழ் மக்கள் உயிரை காப்பாற்ற அரிக்கொம்பன் யானையை பிடிக்க தமிழக முதல்வர் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.