லஞ்ச ஒழிப்புத் துறை

எடப்பாடி ஆட்சியில் சுடுகாடு உட்பட 44 அரசு நிலங்களை தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்த மாவட்ட பெண் பதிவாளரை நிரந்தரப் பணி நீக்கம் செய்த பத்திரப் பதிவு ஐஜி.

அதிமுக ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

ஏரி குளங்கள் மயானம் படம் 44 இடங்களை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த மாவட்ட பதிவாளர் சிவப்பிரியா

குறிப்பிடத்தக்கது. அதில் ஏரி, குளம் போன்ற நீர்நிலை கள் பொதுமக்களின் சொத்து. அதே நேரத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருப்பதாக கொள்ளக்கூடாது. பொதுமக்க ளுக்கும் அதில் பங்கு உள்ளது. மக்கள் அதிக சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசைப்படுவ தால் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் படுகின்றன.

.ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை வேறு உபயோகத்துக்குப் பயன் படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப் படுவதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏரிகள் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்று காரணம் காட்டி, அங்கு ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது!
நீர் ஆதாரங்கள் சட்டத்தின் நோக்கமே நீர் நிலைகளைப் பாது காப்பதுதான்.
ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் பொதுமக்களின் சொத்து. அதே நேரத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருப்ப தாக கொள்ளக் கூடாது. பொதுமக்க ளுக்கும் அதில் பங்கு உள்ளது. மக்கள் அதிக சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசைப்படுவதால் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் படுகின்றன. நீர் நிலைகள் மனிதன் மற்றும் கால்நடைகளின் ஆதார மாக இருக்கிறது.

2007-ல் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு சட்டம் இயற்றியது. அரசே இந்த சட்டத்தை மறந்து, இயற்கை ஆதாரங்களை அழிக்க முற்படும்போது அதை மக்கள் எதிர்க்கின்றனர். நீர் நிலை களை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. அதுபோல உயர் நீதிமன்றமும் பல உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவுகள் பின்பற்றப் படவில்லை.
2005-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட்டது. இப்போது ஏற்பட்ட வெள்ளத்திலும் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற் பட்டிருக்கிறது. இதற்கு தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின் பற்றும் நடைமுறைகளே காரணம் நீதி மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஆனால் இத்தனை உத்தரவுகள் இருந்தும் அதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் உள்ள 2 ஏரிகள், மயானம், மேய்க்கால் புறம்போக்கு, குடிசை மாற்று வாரிய நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களை சட்ட விரோதமாக முறைகேடாக தனியாருக்கு பதிவு செய்து கொடுத்து வந்த மாவட்ட பதிவாளர் சிவப்பிரியா மீது 2017 இல் பல புகார்களை சமூக ஆர்வலர்கள் கொடுக்கப் பட்ட நிலையில் 2018 இல் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.தற்போது மாவட்ட பதிவாளர் சிவப்பிரியா பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.
சென்னையில் வருவாய் துறைக்கு சொந்தமான மயானம் ஏரி, குளம், குட்டை, புறம்போக்கு நிலங்களில் பல நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்டு, தனியாருக்கு பதிவும் செய்து தரப்பட்டது. இதனிடையே நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்த காரணத்தால் சென்னை வரலாற்றில் இல்லாத பேரழிவை வெள்ளத்தால் சந்தித்தது.அதன்பிறகு விதிகள் கடுமையாகின. புதிதாக ஆக்கிரமிப்புகள் செய்வதை அரசு அனுமதிக்கவில்லை. அதேநேரம் சில பகுதிகளில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்பாளர்களால் அரசு அதிகாரிகள் உதவியுடன் செய்யப்படுவது தெரிந்தது. இதையடுத்த இது தொடர்பாக சென்னை விருகம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் தணிக்கை நடந்தது இதில்,முறைகேடு பதிவுகள் அதிக அளவில் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட பதிவாளர் சிவப்பிரியாவிடம் விசாரணை நடத்த பதிவுத் துறை உத்தரவிட்டது. மாவட்ட தணிக்கை பதிவாளர் ஸ்ரீசித்ரா விசாரணை நடத்தியபோது, சென்னையில் உள்ள 2 ஏரிகள், மயானம், மேய்க்கால் புறம்போக்கு, குடிசை மாற்று வாரிய நிலங்கள், அரசு புறம்போக்கு என 44 இடங்கள் முறைகேடாக மாற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்த அறிக்கையை பெற்ற பதிவுத் துறை, காவல் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. காவல் துறை விசாரணையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதியானது,

பள்ளிக்கரணையில் 1995-ல் ஒருவரது நிலத்தை, ஆள்மாறாட்டம் மூலம் 2017-ம் ஆண்டு பதிவு செய்த புகாரில் சிவப்பிரியா மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தார்கள். தவறு நிரூபிக்கப்பட்டதால், 2018-ல் சிவப்பிரியா கைது செய்யப்பட்டார். தற்காலிக பணிநீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த சூழலில், அரசு நிலங்களை தனியாருக்கு முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில், சிவப்பிரியாவை பணிநீக்கம் செய்யுமாறு பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிந்துரை செய்தார். இதன்பேரில், சிவப்பிரியாவை பணிநீக்கம் செய்து துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிவப்பிரியா நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button