அரசியல்

எடப்பாடி நினைத்தது ஒன்று !நடந்தது ஒன்று!மாநாட்டை புறக்கணித்த தென் மாவட்டங்கள் ! கோபத்தின் உச்சத்தில் எடப்பாடி அதிர்ச்சி தகவல்!

மாநாட்டிற்கு 500 கோடி செலவு செய்தும் நினைத்தது நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது!?

எடப்பாடி பொதுச் செயலாளராக பொறுப்பேற்று முதல் முறையாக தென் மாவட்ட அதிமுக தொண்டர்களின் கவனத்தையும் உற்சாகத்தை எடப்பாடி பக்கம் ஈர்க்க மதுரையில் மிகப் பிரம்மாண்டமான எழுச்சி மாநாடு ஒன்றை நடத்த 100 கோடி செலவில் திட்டமிட்டனர் .அதன் பின்பு.தேதியும் இடத்தையும் தேர்வு செய்ய ஆலோசனை இந்த ஆலோசனை கூட்டத்தில் விருதுநகர் தூத்துக்குடி திருநெல்வேலி நாகர்கோவில் தென் மாவட்டங்களை இணைக்கும் இடமான மதுரை வளையங்குளம் என்ற இடத்தை தேர்வு செய்தனர்.அதன் பின் 20/08/2023 அன்று நடத்த முடிவு செய்யப்பட்டது இந்த மாட்டிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” என பெயரிடப்பட்டது.

மாநாட்டு திடல் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பாராட்டிற்கு வரும் பொது மக்களுக்கு உணவு செய்து வழங்க நெல்லை கேட்டரிங் சர்வீஸ் நிர்வாகத்திடம் ஒப்பந்தம் செய்தனர்.

இதற்கான பணிகள் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நடந்து வந்தது. இந்த மாநாட்டிற்கு முதலில் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டனர். இதில் தென் மாவட்டங்களில் உள்ள அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் ,செல்லூர் , ராஜன் செல்லப்பா
,ராஜ், திண்டுக்கல் சீனிவாசன் , திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதன் விருதுநகர் ராஜேந்திர பாலாஜி பாலாஜி, கடம்பூர் ராஜ் இவர்கள் யாரும் மாநாட்டிற்கு செலவு செய்ய முன்வரவில்லை என பரவலாக பேசப்பட்டது.

இதில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர் பி உதயகுமார் இருப்பதால் அவர் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று எடப்பாடி நினைத்தார் ஆனால் அதற்கு ஆர்பி உதயகுமார் ஏற்றுக்கொள்ளவில்லை என அதிமுக கட்சி நிர்வாகிகளுக்குள் பரவலாக அப்போது பேசப்பட்டது. இதற்குக் காரணம் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களாக எஸ்பி வேலுமணி தங்கமணி போன்ற எடப்பாடிக்கு நெருக்கமானவர்களை மட்டும் போட்டிருந்ததாகவும் அதுமட்டுமில்லாமல் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தில் எடப்பாடிக்கு எதிர்ப்பு இருப்பதால் நினைக்கும் அளவிற்கு மாநாட்டிற்கு ஆட்களை அழைத்து வர ஒரு தடையாக இருக்கும் என எடப்பாடி இடம் தெரிவித்ததாகவும் தகவல் அதன் பின்பு அடுத்த நடவடிக்கையில் எடப்பாடி இறங்கியதாகவும் அதற்கான வியூகத்தை முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி ,தங்கமணி ,விஜயபாஸ்கர் ,சி.வி சண்முகம் ஜெயக்குமார் காமராஜ், அதாவதுகொங்கு மண்டலம் வடக்கு மாவட்டம் திருச்சி தஞ்சாவூர் டெல்டா மாவட்டம் சென்னை இங்கிருந்து ஆட்களை மதுரைக்கு அழைத்து வர திட்டத்தை வகுத்தனர். அதேபோல் 20 /8/ 2023 அன்று நடந்த மதுரை எடப்பாடி எழுச்சி மாநாட்டிற்கு வந்த வாகனங்கள் அனைத்தும் தென் மாவட்டங்களை தவிர பிற மாவட்ட வாகனங்களாக தான் அணிவகுத்து நின்றன. இதற்கு உதாரணமாக மாநாடு முடிவதற்கு முன்பே மாலை 2 மணியிருந்து மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் திரும்பிச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் மதுரை திண்டுக்கல் வழி சேலம் ஈரோடு கரூர் நாமக்கல் கோவை செல்லும் திருமங்கலம் ரிங் ரோடு கப்பலூர் தேசிய நெடுஞ்சாலைகளில் பல மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் காத்திருந்தது. இதனால் மாநாடு முடிந்து திரும்பி மதுரையில் இருந்து திண்டுக்கல் வழி மற்றும் திருச்சி வழியாக வாகனங்களில் சென்ற அனைவரும் நீண்ட நேரம் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கி இருந்ததால் இரவு 10 மணிக்கு மேல் தான் மெதுவாக வாகனங்கள் செல்லத் தொடங்கியது அதன் பின்பு இவர்கள் செல்லும் வழியில் சாப்பிடுவதற்கு எந்த உணவகங்களும் இல்லாததால் மாநாட்டிற்கு வந்த ஆயிரக்கணக்கானோர் இரவு உணவு சாப்பிடாமல் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதில் என்னவென்றால் தென் மாவட்டங்களில் இருந்து மதுரை மாநாட்டிற்கு வந்த வாகனங்கள் மிக சொற்பமான வாகனங்கள் மட்டுமே வந்ததால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை எந்த போக்குவரத்து நெரிசலும் ஏற்படவில்லை தெரிவிக்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் மாநாட்டின் முக்கிய குறையாக இருந்தது சாப்பாடு என்கின்றனர். சமையல் மற்றும் பரிமாறுவதற்கு மட்டும் பத்தாயிரம் பேர் நிலையில் சாப்பாடு சரியில்லை என்ற விமர்சனம் இருந்தது. முதலில் ஒரு லட்சம் பேர் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கொங்கு மண்டலம் திருச்சி மண்டலம் டெல்டா மண்டலம் வடக்கு மண்டலம் திருச்சி டெல்டா மண்டலம் சென்னை போன்ற அனைத்து இடங்களிலிருந்தும் ஆட்களை அழைத்து வர திட்டம் இருந்ததால் கூடுதலாக மாநாட்டிற்கு பல லட்சம் பேர் வரலாம் என நினைத்து சாப்பாட்டை அதிகளவிற்கு செய்ய திட்டமிட்டனர். ஆனால் அடித்த வெயிலுக்கு புளியோதரை சாம்பார் லெமன் சாதம் என வெரைட்டி உணவு தயார் செய்யப்பட்ட உணவை மக்கள் புறக்கணித்ததாகவும். மாநாட்டிற்கு வந்த மக்கள் பெயரளவிற்கு அந்த உணவை வாங்கி சாப்பிட்டு அப்படியே கீழே கொட்டி விட்டு சென்றனர் என்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அது மட்டும் இல்லாமல் மாநாடு முடிந்த பின்பு பல ஆயிரம் டன் உணவு கீழே கொட்டப்பட்டிருந்தது தான் வேதனை அளித்தது.இதற்கு காரணம் சாப்பாடு விஷயத்தில் திட்டமிடல் இல்லை எனவும் ஆர் பி உதயகுமார் செல்லூர் ராஜ் கோட்டை விட்டுள்ளனர் என்றே சொல்லலாம். இதற்குக் காரணம் ஆர்பி உதயகுமார் சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
தென் மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு போதுமான ஆட்கள் வரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்த நிலையில் மாநாட்டிற்கு வந்த லட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கிய சாப்பாடு நல்லா இல்லை என்ற விமர்சனமும் எழுந்த நிலையில்
எடப்பாடி தென் மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. மதுரையில் நடந்த எழுச்சி மாநாட்டிற்கு சுமார் 500 கோடி வரை செலவு ஆகி உள்ளதாகவும் இந்த செலவை எஸ் பி வேலுமணி முழு பொறுப்பு ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வந்து உள்ளது.
இந்த நிலையில் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தில் தென் மாவட்டங்களில் பிரச்சாரத்தை நடத்த தென் மாவட்டங்களில் உள்ள முன்னாள் அமைச்சர் மற்றும் நிர்வாகிகளை நம்பி இல்லை என்றும் மாறாக எப்படி பிரச்சாரத்தை மேற்கொள்வது என்ற ஆலோசனையை எஸ் பி வேலுமணி ,முனுசாமி ,
தங்கமணி, சி.வி சண்முகம் ,ஜெயக்குமார் , காமராஜ் போன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல். எது எப்படியோ புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
புரட்சித்தாய் ஜெயலலிதா இவர்களை அடுத்து
மதுரை எழுச்சி மாநாட்டில் எடப்பாடிக்கு புரட்சித் தமிழன் என்ற பெயரை சூட்டி உள்ளனர்.
இருந்தாலும் எடப்பாடிக்கு இந்த மாநாட்டில் முழு திருப்தி இல்லை என்றும் மிக அதிருப்தியில் இருப்பதாகவும் தென் மாவட்ட நிர்வாகிகள் மீது உச்சகட்ட கோபத்தில் இருப்பதாகவும் தான் தற்போது தகவல் வந்துள்ளது. 2024 பாராளுமன்றத் தேர்தலில் இந்த உச்சகட்ட கோபத்தை பிரதிபலிக்கும் வகையில் எடப்பாடியின் அடுத்த வியூகம் இருக்கும் என கொங்கு மண்டலம் அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button