தமிழ்நாடுமாவட்டச் செய்திகள்
ஏரி அருகே சுகாதாரமற்ற நிலையிலிருந்த மருத்துவ கழிவு குப்பைகள்!

கொட்டும் மழையில் ஆய்வு!
ஊரகத் தொழிற்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் .
காஞ்சிபுரம் மாவட்டம், போரூர் ஏரிக்கு பின்புறம் மருத்துவ கழிவுகளை கொட்டி சுகாதார மற்றமுறையில் இருந்ததால் அங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும், அந்த குப்பைகளை அகற்றுவதற்காகவும் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் கொட்டும் மழையில் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட ஆட்சியார் டாக்டர்.மா.ஆர்த்தி, மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .பி.ஜெயசுதா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் .முத்து மாதவன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.