ஐஸ் பாக்கெட் என்றபெயரில் கள்ளச்சாராயம் அமோக விற்பனை ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!?நடவடிக்கை எடுக்குமா மாவட்ட ஆட்சித் துறை &காவல் துறை!?

சீர்காழி .வைத்தீஸ்வரன் கோயில். கொள்ளிடம் பகுதியில் சட்ட விரோதமாக பெருகி வரும் போலி பாக்கெட் கள்ளச்சாராயம்….. கண்டுகொள்ளாத சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!!




மயிலாடுதுறை மாவட்டம் .சீர்காழி பகுதியில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் .மானாந்திரவாசல். மன்னிப்பள்ளம். மேலச்சாலை. செம்மங்குடி. கோயில் பத்து. கைலாஞ்சேரி.கொள்ளிட பகுதியில்.வேட்டங்குடி. கொப்பியம். ஒளவந்தாங்குடி. கூத்தியம்பேட்டை. ஆலாலசுந்தரம். ஆச்சாள்புரம்.போன்ற மேலும் பெரும்பாலான ஊராட்சிகளில் சட்டவிரோதமாக பாண்டிச்சேரி யிலிருந்து கடத்தி வரும் சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து பாண்டி ஜஸ் …என்ற் பெயரில் பேக்கிங் செய்து பதினைந்து ருபாய்க்கு விற்கப்படுகிறது.



இதனை அப்பகுதியில் வசிக்கும் சாமானிய தொழிலாளிகள் நான்கு. ஐந்து பாக்கெட் வாங்கி குடித்து விட்டு வயிற்று வலி மயக்கம் என்று அவதிக்குள்ளாகின்றர். பலமுறை சமூக ஆர்வலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சட்டவிரோதமாக போலி கள்ளச்சாராயம் விற்கும் நபர்களிடம் சீர்காழி மதுவிலக்கு காவல்துறையினர் பெரிய தொகையை பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் அரசு டாஸ்மாக் கடைக்கும் வருவாய் இழப்பு ஏற்ப்பட வாய்ப்பிருக்கிறது. என்கின்றனர் சில சமூக ஆர்வலர்கள். காவல்துறையில் மதுவிலக்குப்பிரிவு. சட்டம் ஒழுங்கு. எஸ்.பி.சிறப்பு பிரிவு என இத்தனை இருந்தாலும். யாராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற இறுமாப்புடன் சட்டவிரோதமாக இந்த சமூக விரோதிகள் கள்ளச்சாராய பாக்கெட் வியாபாரத்தை அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர்.இதில் பெரும்பாலும் பெண்கள்தான் ஈடுபட்டு வருவதாகவும் ..அவர்களிடம் பதினைந்திற்க்கும் மேற்ப்பட்டோர் பணிபுரிந்து வருவதாகவும் .ஒருவரை காவல்த்துறையினர் கைது செய்தாலும் வியாபாரம் தடைப்பட கூடாது என்பதற்க்காக. மற்றவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு இந்த பெண்களை சாப்பாடு போட்டு சம்பளம் கொடுத்து வைத்திருப்பதாகவும். தற்போது ஒருநாளைக்கு மூன்று லட்சத்திற்கு மேல் சாராய வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் கொரோனா ஊரடங்கு போட்டால் 10 லட்சத்தை தாண்டும் என்றும் விரைவில் ஊரடங்கு வருமா என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறனர்களாம் சட்டவிரோதமாக சாரய விற்கும் சமூக விரோத வியாபாரிகள் . இந்த பாக்கெட் சாராயம் வாங்கி குடிக்கும் அன்றாட கூலி வேலை செய்து இருநூறு முன்னூறு சம்பாதித்து குடும்பத்தை நடத்தும் பல பேர் குடும்பங்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி உள்ளது!

இவர்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும். மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளரும் இரும்புகரம் கொண்டு அடக்கி இந்த பாக்கெட் சாராயத்தை வாங்கி குடித்து அடிமையாகி விற்பனை செய்யும் இடத்திலேயே இரவு பகலாக கிடக்கும் சாமானிய கூலித் தொழிலாளர்களை மீட்டெடுக்க வேண்டும் .மற்றும் மயிலாடுதுறை மாவட்த்தை கள்ளச்சாராயம் இல்லா மாவட்டமாக மாற்றி இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டெடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் சமூக விரோதிகளை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.