காவல் செய்திகள்

ஒரு கோடி பணம் தருவதாக கூறி கல்லூரி மாணவனை கல்லறையில் அடக்கம் செய்து மோசடி செய்த லயோலா கல்லூரி முதல்வர் தாமஸ் அமிர்தம் மீது வழக்கு!

ஒரு கோடி பணம் தருவதாக கூறி கல்லூரி மாணவனை அடக்கம் செய்த லயோலா கல்லூரி முதல்வர் அருட்தந்தை தாமஸ் அமிர்தம் மீது வழக்கு!


மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி கல்லூரி மாணவர்களை சரக்கு வாகனத்தில் ஏற்றுச்சென்று மாணவர்களின் உயிரை பணயம் வைத்து வேடிக்கை பார்க்கும் லயோலா கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?


பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமா கல்லூரி நடத்துகிறார்கள்?
கார்ப்பரேட் கல்லூரிகளுக்கும், துறவியர் நடத்தும் கல்லூரிக்கும் வித்தியாசம் வேண்டாமா? லாப நோக்கத்திற்காகவா தொடங்கப்பட்டது லயோலா கல்லூரி!

லயோலா கல்லூரி நுங்கம்பாக்கம் சென்னை

லயோலா கல்லூரியில் சாமுவேல் என்ற மாணவன் எம் ஏ பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரியில் செயல்படும் நாட்டு நல திட்ட குழு விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம் கல்லூரியின் சார்பாகநடத்த திட்டமிட்டு இருந்தது.
அதற்காக கடந்த (2023 )பிப்ரவரி 28 ஆம் தேதி காலை 7 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் இருந்து கல்லூரி பேருந்து மூலம் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கல்லூரி பேராசிரியர்கள் ஐந்து பேர் விழுப்புரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அன்று மதியம் விழுப்புரத்தில் கல்லூரி மாணவர்களை இறக்கி விட்ட கல்லூரி பேருந்து மீண்டும் சென்னைக்கு செல்லுமாறு கல்லூரி பேராசிரியர்கள் கூறியுள்ளனர். அதன்பின்பு மாலை 6 மணி அளவில் மாணவருடன் வந்த டயலாக் கல்லூரியின் பேராசிரியர்கள் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனத்தை (மகேந்திரா மேஜிக் ) வரவழைத்து ஆடுகளை ஏற்றிச் செல்வது போல 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அந்த வாகனத்தில் ஏற்றி சிறப்பு முகாம் நடக்கும் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்திற்கு சென்று மாணவர்களை இறக்கி விட்டு வந்து மீண்டும் மீதமுள்ள 25 இருக்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றி வர வேண்டும் என வாகனத்தை ஓட்டிச் சென்ற சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகன் மணிவண்ணன் இடம் (வயது 23) கூறிவிட்டு நான்கு பேராசிரியர்கள் மட்டும் வாடகை காரை வரவழைத்து சரக்கு வாகனத்திற்கு பின்பு காரில் சென்றுள்ளனர். கல்லூரியில் இருந்து சென்ற 25க்கும் மேற்பட்ட மாணவிகள் விழுப்புரத்தில் காத்திருந்துள்ளனர்.
30க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் மோசமான நிலையில் இருந்ததாகவும் அந்த வாகனம் சென்ற சிறிது நேரத்தில் சாலை வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனம் உருகுளைந்து போனது .

இதனால் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்ததால் உடனே விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சாமுவேல் என்ற மாணவனுக்கு தலையில் பலத்த அடி விழுந்ததால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார் . உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். ஆனால் மாணவன் சாமுவேலின் தந்தைக்கு கல்லூரியின் நிர்வாகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு

இறந்த மாணவன் சாமுவேல் மற்றும் அவரது தந்தை மற்றும் கல்லூரி முதல்வர் தாமஸ் அமிர்தம்

வாகனத்தின் செல்லும்போது விபத்து ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் உங்கள் மகன் படுகாயம் அடைந்து விட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் உடனே புறப்பட்டு வாருங்கள் என்று தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே சாமுவேலின் பெற்றோர்கள் விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது மாணவன் இறந்து விட்டதாக கல்லூரி நிர்வாகஇத்தினர் .கூறியுள்ளனர். உடனே இறந்த மாணவனின் உறவினர்கள் சென்னை லயோலா கல்லூரி வளாகம் முன்பு கூடியுள்ளனர். கல்லூரி முதல்வர் தாமஸ் அவர்கள்

இறந்த மாணவனின் பெற்றோர்களை அழைத்து எந்தப் பிரச்சினையும் தற்போது செய்ய வேண்டாம் மாணவனின் உடலைப் பெற்று நல்லடக்கம் செய்யுங்கள் உங்கள் குடும்பத்திற்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம் உங்கள் மகன் இறப்பு எங்களுக்கும் பேரிழப்பு எங்களுக்கும் மகன்தான் என்று இறந்த மாணவனின் பெற்றோர்களிடம் தாமஸ் அவர்கள் ஆறுதல் கூறி உடலை நல்லடக்கம் செய்யுமாறு சொல்லியுள்ளார்.இதை நம்பி இறந்த மாணவனை பெற்றோர்கள் விழுப்புரத்தில் அரசு மருத்துவமனையில் விரோத பரிசோதனை முடித்து உடலைப் பெற்றுக் கொண்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்துள்ளனர்.
அதன்பின்பு இறந்த மாணவனின் வீட்டிற்கு சென்ற லயோலா கல்லூரியின் முதல்வர் தாமஸ் அவர்கள் மாணவனின் பெற்றோர்களிடம் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு இறந்த சாமுவேல் மாணவனின் பெற்றோர்கள் மற்றும் அவர் உறவினர்கள் முக்கியமாக ஹியூமன் ரைட்ஸ் ஹென்றி அவர்கள் ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் இறந்த மாணவனின் சகோதரி MBA படிதுள்ளதால் லயோலா கல்லூரியில் வேலை வேண்டும் என்று இந்த இரண்டையும் கேட்டுள்ளனர்.
இதற்கு சம்மதம் தெரிவித்த லயோலா கல்லூரியின் முதல்வர் தாமஸ் முதல் தவணையாக இறந்த மாணவனின் பெற்றோர்களிடம் 15 லட்சம் ரூபாய்க்கான D D யை கொடுத்து உள்ளனர்.( 7.50 லட்சம் வீதம் இரண்டு DD)
அதன்பின்பு இறந்த மாணவனுக்கு செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தவுடன் மாணவனின் பெற்றோர் லயோலா கல்லூரிக்கு சென்று மீதம் உள்ள பணத்தையும் இறந்த மாணவனின் சகோதரிக்கு வேலையும் கேட்டுள்ளனர். ஆனால் லயோலா கல்லூரியின் முதல்வர் தாமஸ் இறந்த மாணவனின் பெற்றோரை சந்திக்காமல் கல்லூரியில் நிர்வாகத்தில் உள்ளவரிடம் நீங்களே பேசி அனுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார். உடனே கல்லூரி நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர் இறந்த மாணவனின் பெற்றோர்களிடம் தாளாளர் தாமஸ் இடம் பேசுவதாக சொல்லி அனுப்பி காலதாமதம் படுத்தி வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மாணவன் இறந்து தற்போது மார்ச் 28 ஒரு மாதம் ஆகியும் இறந்த மாணவனின் பெற்றோர்களிடம் கல்லூரி முதல்வர் தாமஸ் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் சரியான பதிலை கூறாமல் இறந்த மாணவனின் பெற்றோர்களை அலையவிட்டு லயோலா கொஞ்சம் கூட மனித நேயம் இரக்கமில்லாமல் நடந்து கொண்டு இருக்கின்றனர். பணம் தருவதாக எங்கள் மகனை நல்லடக்கம் செய்யச் சொல்லி மோசடி செய்து விட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக இறந்த மாணவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகன சட்டப்படி சரக்கு ஏற்றி செல்லும் வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது என்ற ஒரு சட்டம் இருந்தபோது சென்னையில் பெயர் பெற்ற கல்லூரி லயோலா கல்லூரி இங்கு மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் தெரிந்தும் இப்படி ஆடுகளை ஏற்றிச் செல்வது போல பள்ளி மாணவர்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்று இருப்பது மிகப்பெரிய குற்றமாகும். இந்த வழக்கில் கல்லூரி நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகிகள் சிறைக்கு கூட செல்லலாம் என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்த மாணவனின் பெற்றோரிடம் பிரச்சனை செய்யாமல் இருக்க ஒரு கோடி தருகிறேன் மகளுக்கு வேலை தருகிறேன் என்று சொல்லிவிட்டு 15 லட்சத்தை கொடுத்து ஏமாற்றி கல்லூரியின் முதல்வர் தாமஸ் மோசடி செய்துவிட்டார் என்றும் இதைச் செய்ததற்கு லயோலா கல்லூரி நிர்வாகம் வெட்கப்பட வேண்டும். இது கல்லூரிக்கு நேர்ந்த தலைகுனிவான ஒரு செயல்”’ என்று பெற்றோர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.
எது எப்படியோ மோட்டார் வாகனச் சட்டத்தை மதிக்காமல் உதாசீனப்படுத்தி தங்கள் கல்லூரியின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சரக்கு வாகனத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றி சென்று மாணவ சமுதாயத்தையே கொச்சைப்படுத்திய சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி நிர்வாகம் மீது உயர்கல்வி அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் அவர்கள் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதேபோல் இறந்த மாணவனின் பெற்றோர்களிடம் கல்லூரி நிர்வாகம் கூறிய இழப்பீடு தொகை மற்றும் மாணவனின் சகோதரிக்கு வேலை இந்த இரண்டையும் கல்லூரி நிர்வாகம் செய்யாமல் மோசடியில் ஈடுபட்டால் இனிமேல் லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மீது உள்ள நம்பிக்கையை மாணவர்களே சீர்குலைக்க செய்வார்கள் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலரின் கோரிக்கையாகும்.

மோசடி செய்து முறைகேடாக நடந்து கொண்டிருக்கும் லயோலா கல்லூரியின் அதிர்ச்சி தகவல்களை விரிவான செய்தியாக விரைவில் வெளிவர இருக்கிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button