ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு கொடுப்பதாக
பெண்களிடம் நூதன முறையில் 10 கோடி வரை வசூல் செய்து உல்லாச வாழ்க்கை நடத்தும் மோசடி மன்னன்!நடவடிக்கை எடுப்பாரா கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
5000 ரூபாய் கொடுத்தால் 10000 ரூபாய் பொருள் வழங்கப்படும் என போலி விளம்பரம் செய்து பெண்களிடம்
நூதன முறையில் 10 கோடி வரை மோசடி செய்த பணத்தில் உல்லாச வாழ்க்கை ! நடவடிக்கை எடுப்பாரா கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் அன்ன சுந்தரி செல்வி
(49 வயது. இந்த பெண்மணி
புகார் கொடுத்துள்ளார்.
.
அந்த புகாரில் என் கணவர் இறந்து விட்டதாகவும். அவர் இறந்து 11 வருடங்களாக இரண்டு பெண் குழந்தைகளை வைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும். எனக்குத் தெரிந்த பெண் நாகர்கோவில் பிரியம் திருமண மண்டபம் அருகே இ எம் ஐ இந்தியா என்ற நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அங்கு சேர்த்து விடுவதாக கூறினார்.
அந்த வேலையில் சேர்ந்தால் தினமும் ஆயிரம் ரூபாய் விதம் மாதம் 30,000 சம்பளம் கிடைக்கும். ஆனால் நூறு புது வாடிக்கையாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் மளிகை பொருள்கள் ஐயாயிரம் ரூபாய்க்கு வழங்குகிறோம் என்று கூறி பொருட்களை வாங்குமாறு அவர்களிடம் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி இந்த வேலைக்குச் சேர்ந்ததாகவும் இதுவரை நான்கு மாதம் ஆகியும் எனக்கு ஒரு மாதம் கூட சம்பளம் தரவில்லை என்றும் அதேபோல் அந்த நிறுவனத்தில் பாதி விலைக்கு கொடுப்பதாக நம்பி வாங்கிச் சென்ற பொருள்கள் அனைத்தும் தரம் இல்லாத பொருள்கள் என்றும் தரம் இல்லாத பொருள்களை விளம்பரம் செய்து இந்த நிறுவனத்தில் விற்று வந்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார் .
அது மட்டும் இல்லாமல் ஏழையாக இருப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பு வீடு கட்டி தருவதாக ஒரு லட்ச ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும் என 100-க்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களிடம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும் . அது மட்டும் இல்லாமல் ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் ஆறு பேர் 10 பேர் என ஒரு லட்ச ரூபாய் வீதம் 6 லட்சம் 5 லட்சம் மூன்று லட்சம் 10 லட்சம் என பணம் கட்டி ஏமாந்து உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் காவல்துறையினர் அலுவலகத்திற்கு வந்து கராத்தே கண்ணதாசனிடம் விசாரணை நடத்தியதாகவும் அப்போது நான் உடன் இருந்ததாகவும் தகவல் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தையும் செய்தியாளர்களிடம் கொடுத்துள்ளார்.
போலியான விளம்பரம் மூலம் சாதாரண ஏழை எளிய குடும்பத்தில் உள்ளவர்களிடம் 10 கோடிக்கு மேல் நூதன முறையில் பணம் பெற்று மோசடி செய்த நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு வரும்படி கூறியதாகவும் ஆனால் விசாரணைக்கு வர முடியாது என்றும் அந்தப் புகார் உண்மை இல்லை என்றும் அதுமட்டுமில்லாமல் எனக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் 10 கோடி வர வேண்டும் என்றால் நீங்கள் வாங்கி கொடுத்து விடுவீர்களா என்று பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் என்னிடமே மோசடி மன்னன் கூறிவிட்டு இருக்கும் இடத்தை கூறாமல் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
எது எப்படியோ கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் தொடர்ந்து
இதுபோன்ற கவர்ச்சி போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாந்து வருவதாகவும் அதுவும் குறிப்பாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து இது போன்ற போலி கவர்ச்சி விளம்பரங்களை வைத்து நூதன முறையில் ஏழை எளிய பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றி ஏமாற்றி வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் மகளிர் சுய உதவி குழுக்களில் குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி வரும் சட்டவிரோத கும்பல் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு புகார்கள் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் நிலையங்கள் கொடுத்த புகார் மீது எந்தவித சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சட்ட விரோத கும்பல்களுடன் ஒரு சில காவல்துறை கருப்பு ஆடுகள் துணையாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்வந்துள்ளது.
ஆகவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குமரி மாவட்ட மக்களுக்கு போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்படி
போலி விளம்பரங்கள் மூலம் பெண்களிடம் மூதன முறையில் பணமோசடி செய்து வரும் சமூக விரோதிகளை கண்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல்
இந்நிலை தொடராமல் இருக்க தற்போது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கொடுத்த புகார் மீது சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற கவர்ச்சிகர விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதும் மகளிர் சுய உதவி குழுக்களில் குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக கூறி பெண்களை ஏமாற்றும் கும்பல் குமரி மாவட்டத்தில் பல்வேறு புகார்கள் அளித்தும் காவல்துறையினர் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குமரி மாவட்ட மக்களுக்கு போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.