ஓபிஎஸ் இன் இளைய சகோதரி வளர்த்த யாகம்!! தாயாரின் உயிர் பிரிந்த சோகம்!! தேனி பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்த ஓபிஎஸ்!

ஓபிஎஸ் இன் இளைய சகோதரி வளர்த்த யாகத்தால் தாயாரின் உயிர் பிரிந்த சோகம்!!

எடப்பாடி தலைமையில் அதிமுகவின் பொதுக்குழு கூடியது செல்லுமா செல்லாதா என்ற தீர்ப்பு 23ஆம் தேதி வர இருந்த நிலையில் 22 ஆம் தேதி இரவு ஓபிஎஸ் இன் இளைய சகோதரி அவருடைய குலதெய்வம் அய்யனார் கோவிலில் ஓபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என யாகம் வளர்த்து இரவு முழுவதும் கண் விழித்து சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.
ஆனால் 23ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் உச்சநீதிமன்றம் எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்த ஓபிஎஸ் மற்றும் அவர் குடும்பத்தினர் அது மட்டும் இல்லாமல் அவருடைய தாயாரும் மிகவும் சோகமாக இருந்துள்ளதாக தகவல் தெரிகிறது. தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வந்திருப்பதை அறிந்த பத்திரிகையாளர்கள் ஓபிஎஸ் அவர்களின் கருத்தைக் கேட்க பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீட்டு முன்பு காத்திருந்தனர். இரண்டு மணி நேரமாகியும் ஓபிஎஸ் வீட்டை விட்டு பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. அதன் பின்பு ஓபிஎஸ் உதவியாளர் பத்திரிகையாளர்களிடம் ஓபிஎஸ் சென்னைக்கு கிளம்புவதால் சென்னையில் இருந்து வந்து சந்திக்கிறார் என்று சொல்லி இருப்பதாக கூறியவுடன் பத்திரிக்கையாளர்கள் அதை கேட்க மறுத்து விட்டு நாங்கள் ஓபிஎஸ்சை சந்தித்து பேட்டி எடுத்து விட்டு தான் செல்வோம் என்று கூறியவுடன் அதன் பின்பு ஓபிஎஸ் வந்து இரண்டு நிமிடம் பேசிவிட்டு
அன்று ஓபிஎஸ் சென்னை சென்று விட்டார். ஓபிஎஸ் சென்னை சென்றதிலிருந்து ஓபிஎஸ் இன் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அன்று இரவு தாயார் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் நேற்று மாலை ஓபிஎஸ் இன் தாயார் உயிர் பிரிந்தது. இதை அறிந்த ஓபிஎஸ் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார். உடனே பெரிய குளத்திற்கு புறப்பட்டு வந்து தாயின் உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகளை கலந்து கொண்டார். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் அனைத்து கட்சி தலைவர்களும் ஓபிஎஸ் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்
எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் இன் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பாரா என்று பலரும் கேள்விகளுக்குள்ளனர்.
ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுகவை சேர்ந்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பாரா !?
எடப்பாடி பழனிசாமியின் தாய் தவுசாயி அம்மாள் (93) மறைவிற்கு துணை முதல்வராக இருந்த ஓபிஎஸ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் எடப்பாடி பழனிசாமியின் தாயாரின் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி ரீதியில் எலியும் பூனையுமாக இருந்தாலும் ஒரு வீட்டில் நல்லது கெட்டது என்றால் உடனே வாழ்த்துவதும் இரங்கல் தெரிவிப்பதையும் அரசியல்வாதிகள் பின்பற்றி வருகிறார்கள். இது அரசியல் நாகரீகம் மட்டுமல்லாமல் மனிதநேயமும் கூட !
!