கஞ்சா கடத்திய கல்லூரி பேராசிரியர்
உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்திய கல்லூரி பேராசிரியர் உட்பட 5 பேர் கைது இவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் வாகனம் பறிமுதல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் சிந்துபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் தனிப்படை பிரிவு சார்பு ஆய்வாளா் இராமகிருஷ்ணன் மற்றும் போலீஸ்சார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் கட்டத்தேவன்பட்டியைச் சேர்ந்த மலையன் மகன் ரஞ்சித் மற்றும் கல்லூரிப் பேராசிரியர் கே. போத்தம்பட்டியைச்சேர்ந்தச் சின்னத்தேவர் மகன் மணிமாறன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ச்சென்ற போது அவர்களை மறித்து சோதனை போட்டதில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் கட்டத்தேவன்பட்டியை சேர்ந்த தங்கம் மகன் பிரகாஷ் மற்றும் சுப்பிரமணி மகன் முத்துராமன் ஆகிய இவர்களிடம் இருந்து சுமார் 8 கிலோ கஞ்சா மற்றும் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களுக்கு கஞ்சா விற்பனைக்கு சப்பளை செய்தவர் உசிலம்பட்டி கீழப்புதூரை சேர்ந்த வீரமணி மகன் தியாகு, என்பவரை மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளா் ஸ்டீபன்ராஜ், தலமைமயில் போலீஸ்சார் விசாரனை செய்ததில் 17 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
பிறகு சிந்துபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இவர்கள் மீது சிந்துபட்டி காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் குபேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.