கடத்திச் சென்ற 17 வயது மாணவியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்குமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் தமிழ்ப்புலிகள் கட்சி கோரிக்கை!
கடத்திச் சென்ற 17 வயது மகளை மீட்டுத் தருமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் மாணவிகள் பெற்றோர்கள் கோரிக்கை!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா அம்மச்சியாபுரம் அருகே உள்ள வாய்க்கால் பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரது மகள் 17 வயது மைனர் மாணவி பள்ளியில் படித்து வருகிறார் என்றும் அந்த மாணவியை பள்ளிக்குச் செல்லும் போது வரும் போதும் அருகில் உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தில் வசிக்கும் நபர் கேலியும் கிண்டல் செய்வதுடன் தன்னை காதலிக்கு மாறும் வற்புறுத்தி வந்துள்ளதாகவும் காதலிக்கவில்லை என்றால் உன் வாழ்க்கையை நாசமாக்கி விடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளதாகவும் இதனால் மாணவியின் தந்தை தன்னுடைய அக்கா வீட்டில் மகளை விட்டு வேலைக்குச் சென்றதாகவும் அதன் பின்னர் மதியம் 3:30 மணிக்கு கதிர் தன் மகளை பார்க்க வந்த போது அக்கா வீட்டில் மகள் இல்லாததைக் கண்டு அக்காவிடம் கேட்டதற்கு பாத்ரூம் போய் வருகிறேன் என்று சொன்னார் .அதன் பின்பு காணவில்லை என்று கூறியுள்ளார் . அதன் பின்பு தங்கள் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கும் காணவில்லை அதன் பின்பு அன்று இரவு பிப்.02 ஆம் தேதியன்று கா.விலக்கு காவல் நிலையத்தில் காணாமல் போன மாணவியின் தந்தை தன்னுடைய மைனர் மகளை பக்கத்து கிராமத்தை சேர்ந்த நபர் கடத்தி சென்று விட்டதாக புகார் செய்துள்ளார்.ஆனால் புகார் மீது காவல் உதவி ஆய்வாளர் காணவில்லை (missing)என்று மட்டும் வழக்கு பதிவு .26/2023.செய்துள்ளார்.
ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் 17 வயது மகளை கா.விளக்கு காவல்துறையினர் கண்டுபிடித்து கொடுக்காத நிலையில் தன் மகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்துடன் 17 வயது மைனர் மகளை விரைவாக மீட்டுத் தரும்படி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காணாமல் போன மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பத்துக்கு மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.
அதன் பின்பு மாணவியை விரைவாக மீட்கக்கோரியும் மாணவியை கடத்திச் சென்ற நபரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், சிறுமியின் பெற்றோர் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் மனு கொடுத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் காணாமல் போன 17 வயது மாணவியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.தற்போது தனிப்படை காவல் துறையினர் தேடி வருவதாகவும் விரைவில் மாணவியை மீட்டு விடுவதாகவும் தகவல் கொடுத்துள்ளனர் .
மைனர் மாணவியை விரைவில் கண்டுபிடித்து விசாரணை நடத்தினால் மட்டுமே மாணவி கடத்தப்பட்டாரா இல்லை காதலிப்பதாக சொன்ன நபர் அழைத்துச் சென்றாரா என்று விசாரணையில் தெரிய வரும் .
தேனி மாவட்டத்தில் காணாமல் போன ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த மைனர் பள்ளி மாணவி சம்பவத்தில் மாநில தாழ்த்தப் பட்டோர் ஆணையம் தானாக முன் வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அனைத்து தாழ்த்தப் பட்டோர் சமுதாய மக்கள் கோரிக்கை ஆகும்.