கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்கள்!
துர்நாற்றம் வீசும் காற்றை சுவாசிப்பதால் அவதியில் பொதுமக்கள்! நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகம்!?
கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்கள்!
துர்நாற்றம் வீசும் காற்றை சுவாசிக்கும் பொதுமக்கள்! நடவடி எடுக்காமல் கோமாவில் இருக்கும் கோவை மாநகராட்சி!?
கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள 33 வது வார்டு ஆர் எஸ் நகர் மற்றும் கே எஸ் நகர் பிரதான தெருக்களில் அமைந்துள்ள திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்கள் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பராமரிப்பு செய்யாமல் கிடைப்பில் போடப்பட்டு தற்போது திமுக ஆட்சி வந்த பின்பும் சரி செய்யப்படாமல் கழிவுநீர் திறந்தவெளி கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது . 15 நாட்களுக்கு ஒரு முறை வந்து கால்வாய்களை சுத்தம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
15 நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றனர் அது மட்டும் இல்லாமல் டெங்கு போன்ற காய்ச்சல்கள் தற்போது அந்தப் பகுதியில் குழந்தைகளுக்கு வந்துள்ளதாகவும் தகவலை தெரிவிக்கின்றனர். அந்தப் பகுதியில் வசிக்கும் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்காவது கண்டிப்பாக டெங்கு போன்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் சென்னை மாநகராட்சி அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 33 வது திமுக கவுன்சிலர் கிருஷ்ணன் அவரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்ணிருந்தும் பார்க்க மனம் இல்லாமல் காதுகள் இருந்தும் கேட்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் வைத்துள்ளனர். தங்களுடைய குமுறல்களை கொட்டி தீர்த்துகின்றனர் அப்பகுதி மக்கள்.
தற்போது செயல்படாமல் இருக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்.