கடற்கரைச் சாலை சொகுசு பங்களாவில் சிக்கிய துனைநடிகை!
சென்னை கானாத்தூர் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சொகுசு பங்களாவில் பெண் நடன கலைஞர்களை வைத்து நடிகை கவிதா ஶ்ரீ ஆபாசமாக நடன நிகழ்ச்சி நடத்துவதாக காட்டாங்குளத்தூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்ததின் பெயரில் காட்டாங்குளத்தூர் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியாளர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஐந்து பெண் நடன கலைஞர்கள் வைத்து திரைப்பட நடிகை ஆபாச நடன நிகழ்ச்சி நடந்திருப்பதை உறுதி செய்தனர் .பின்பு அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர் .
இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு காரணம்?
இளைஞர்களை குறிவைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி பணம் வசூல் செய்து வந்ததாக விசாரணையில் அதிர்ச்சித் தகவல் காவல்துறைக்கு தெரியவந்தது .இதையடுத்து நிகழ்ச்சி நடந்த சொகுசு பங்களாவை மூடி வட்டாட்சியாளர் சீல் வைத்தார். பின்பு ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்திய நடிகை மற்றும் நடன கலைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்பு அவர்களை நீதிபதி சொந்த ஜாமீனில் ஜாமீனில் விடுவித்து உள்ளார்!