நகராட்சி தேர்தல்

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ மீது நடவடிக்கை எடுக்குமாறு கழகத் தலைவர் ஸ்டாலினிடம் புகார்!?

தற்போது சீர்காழி நகராட்சி மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் பதவிகளுக்கு பெரும் போட்டி நிலவி

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலில் ஆளும் திமுக கட்சி 90% மாபெரும் வெற்றியை பெற்றது.
அதே சமயம் தமிழகத்தில் பெரும்பாலான நகராட்சி பேரூராட்சிகளில் கூட்டணிக் கட்சி மற்றும் திமுக கட்சியில் திமுக தலைமை நியமித்த தலைவர் துணைத் தலைவர்கள் பதவி ஏற்பதில் பல குழப்பங்கள் , உட்கட்சி பூசலால் திமுக தலைமைக்கு தலைவலியும் கூடவே இருந்ததையும் யாரும் மறுக்க முடியாது.

ஏனென்றால் திமுக கட்சி தலைமை திமுக கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் துணைத் தலைவர் பதவிகள் தவிர மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் துணைத் தலைவர் பதவிகளை ஏற்காத சில திமுக கட்சி நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்தார்கள் .அது மட்டுமில்லாமல் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப் பட்ட தலைவர் துணைத் தலைவர் பதவிகளை ஏற்காத திமுக கட்சி மாவட்ட பொறுப்பில் உள்ளவர்கள் அவர்களே தங்களது உறவினர்களுக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட வைத்து பதவியேற்க வைத்தனர். ஒருசில மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் அதை மதிக்காமல் சுயமாக செயல்பட்டார்கள் என்று தகவல் வந்தது.
அதில் மிகவும் குறிப்பிடத்தக்க நகராட்சி பேரூராட்சி
(தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி ,
கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் நகராட்சி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி ,
தரங்கம்பாடி பேரூராட்சி,)

இதுபோன்ற பல பேரூராட்சி பல நகராட்சிகளில் திமுக தலைமையை மதிக்காமல் போட்டியிட்டு பதவியேற்றனர்
இதற்கு திமுக கட்சித் தலைவர் பொறுப்பாளர்களுக்கு பதவி ஏற்றவர்கள் தங்களை ராஜினாமா செய்து விட்டு என்னை சந்திக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு திமுக தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று பகிங்கிரமாக அறிக்கையும் வெளியிட்டார் . ஆனால் ஒருசில மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் அதை மதிக்காமல் பதவியை ராஜினாமா செய்யாமல் தற்போது வரை பதவியில் இருந்து வருவதாகவும் தகவல் வந்தது.

தற்போது திமுக கட்சியில் ஒருங்கிணைந்த நகபட்டினம் மாவட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியில் 28 டிசம்பர் 2020 பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக குத்தாலம்
மயிலாடுதுறை
சீர்காழி , தரங்கம்பாடி நான்கு தாலுகாவை உள்ளடக்கி அரசு ஆணை அறிவித்தது.

அதன் பின்பு மயிலாடுதுறை திமுக மாவட்ட பொறுப்பாளராக நிவேதா முருகன் அவர்களை கட்சி தலைமை அறிவித்த பின்பு தற்போது வரை திமுக கட்சியில் உட்கட்சி பூசல் நீண்டுகொண்டே இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

சரஸ்வதி வெற்றி வேல் தரங்கம்பாடி முன்னாள் பேரூராட்சி தலைவர்.
சாமிநாதன்.15 வாடு கவுன்சிலர்
சுப்புராயன் துணைத் தலைவர்
சீர்காழி நகராட்சி
நிவேதா முருகன் எம் எல் ஏ திமுக மாவட்டப் பொறுப்பாளர் மயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் பதவிக்கு பெரும் போட்டி நிலவியது . அங்கு தரங்கம்பாடி திமுக பேரூர் செயலாளர் வெற்றிவேல் அவர்கள் தனது மனைவி சரஸ்வதிக்கு (முன்னாள் பேரூராட்சித் தலைவர் 2001/2006) தலைவர் )மீண்டும் கழகத் தலைமை பதவி அறிவித்த நிலையில் அமைச்சர் மெய்ய நாதன் வெற்றிவேலை அழைத்து உங்கள் மனைவிக்கு துணைத் தலைவர் பதவியை வழங்குகிறோம் நீங்கள் மாவட்ட பொறுப்பாளர் நிவேத முருகனை பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார் ஆனால் துணைத் தலைவர் பதவி தேர்ந்தெடுத்த அன்று நிவேதா முருகனை சந்திக்க வெற்றிவேல் சென்ற போது நீங்கள் தாமதமாக வந்து விட்டீர்கள் அதனால் துணைத் தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்கி விட்டோம் என்று கூறியுள்ளார். இதை அறிந்த வெற்றிவேல் மனமுடைந்து நான் இனிமேல் தரங்கம்பாடி பேரூர் செயலாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசிய போது எங்கள் குடும்பமே திமுக கட்சி தான் ஆனால் மாற்றுக் கட்சியில் இருந்து திமுக கட்சியில் பதவிக்காக ஆசைப்பட்டு வந்தவர்தான் நிவேதா முருகன் என்றும் அவர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தவர் என்றும். அவர் உண்மையான திமுக கட்சி தொண்டர்களுக்கு எந்த ஒரு உதவியும் இதுவரை செய்யவில்லை என்றும் இனிமேலும் எதுவும் செய்ய முன் வரப்போவதில்லை ஆகையால் இனிமேல் இந்த கட்சியில் இருப்பதால் எந்த பயனும் இல்லை என்று பேட்டியளித்தார் .
கட்சி தலைமைக்கு கட்டுப்படாமல் கட்சியினருக்கு துரோகம் செய்யும் வகையில் கட்சியிலேயே குழப்பம் ஏற்படுத்தும் மாவட்டப்பொறுப்பாளர்கள் மீது கட்சி தலைமையின் நடவடிக்கை இல்லையா என்று திமுக கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தற்போது தரங்கம்பாடி வெற்றிவேல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை அறிவாலயத்தில் சந்தித்து மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் மீது புகார் அளித்துள்ளதாகவும் அது சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளதாக தகவல் தந்துள்ளார் .

வெற்றிவேல் பேசிய போது 2001 /2006 வரை தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக எனது மனைவி சரஸ்வதி இருந்தபோது அப்போது அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அதிமுக கட்சியினரிடம் எந்தவித சமரசமும் செய்யாமல் திமுக கட்சிக்கு எந்த கெட்ட பெயரும் வராமல் மக்களுக்கான திட்டங்களை எந்தவித முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைத்து திட்டங்கள் மூலம் வந்த வேலைகளை நல்ல முறையில் முடித்துக் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் மீண்டும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக வரவேண்டும் என்று மக்கள் என் மனைவி சரஸ்வதிக்கு வாக்களித்து உள்ளனர்.என்றும்
திமுக கட்சி தலைவர் மறைந்த கலைஞர் அவர்களை மிதி வண்டியில் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் பொதுக்கூட்டம் நடத்தியதாகவும் திமுக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த அன்பழகன் மற்றும் நாவலர் அவர்களை வைத்து பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளதாகவும். அந்த வழியில் வந்தவன் தான் நான். அதனால்தான் கட்சிக்காக பல போராட்டங்கள் சாலை மறியல் நானே முன்நின்று நடத்தி உள்ளேன் என்று ஆதங்கமாக கூறினார்.


இது சம்பந்தமாக மயிலாடுதுறை திமுக மாவட்ட பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனிடம் கேட்டபோது தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக தற்போது இருப்பவரது திருமணத்தை அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் அவர்கள் நடத்தி வைத்தார் என்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடக்கும்போது தரங்கம்பாடி திமுக பேரூர் செயலாளர் வெற்றிவேல் மனைவி சரஸ்வதி அவர்கள் வரவில்லை என்றும் அதுபோல் துணைத் தலைவர் பதவி மறைமுக வாக்கெடுப்பு நடந்தபோது வாக்கெடுப்பு முடிந்த பிறகுதான் வந்தார் என்றும் குற்றச்சாட்டு எழுப்பினார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தரங்கம்பாடி வெற்றிவேல் மறுப்பு தெரிவித்துள்ளார் . பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் பெயரை திமுக கட்சி தலைமை நியமித்த பின் அதை விட்டு விட்டு திமுக கட்சி மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனின் மைத்துனர் மனைவிக்கு தலைவர் பதவியை கொடுத்து விட்டு துணைத் தலைவர் பதவிக்கு தாமதமாக வந்தார் என்று நொண்டிச் சாக்கு சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார் .


அதேபோல் சீர்காழி நகர செயலாளர் சுபராயனுக்கு துணைத் தலைவர் பதவியை முறைகேடாக வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு சப்ராயன் தரப்பில் அது தவறான செய்துசெய்தி என்றும் திமுக கட்சியில் மேம்போக்கான அரசியல் மட்டுமே சாமிநாதன் செய்வார் என்றும் எந்தவித போராட்டங்கள் கூட்டங்கள் சாலை மறியலுக்கு அவர் கலந்துகொள்ள மாட்டார் என்றும் தலைமை கழகம் சாமிநாதன் பெயரை துணைத் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யவில்லை என்றும் அதுபோல எந்த ஒரு அறிக்கையும் திமுக கட்சி தலைமையில் இருந்தும் முரசொலி பத்திரிக்கையிலும் வரவில்லை என்றும்
சீர்காழி நகராட்சி 15வது வார்டில் வெற்றிபெற்ற சாமிநாதன் பெயரை துணைத் தலைவர் பதவிக்கு வழங்கச் சொன்னதாக சொல்வது உண்மைக்கு மாரானா செய்தியை செய்தியை சாமிநாதன் வதந்தியை பரப்புவதாக சுப்ராயன் தரப்பு கருத்து தெரிவித்தனர்.

இது சம்மந்தமாக 15 வார்டு கவுன்சிலர் சாமினதனிடம் கேட்ட போது நகரச் செயளாலர் சுபாராயன் கடைசி நேரத்தில் வேட்பாளருக்கு மனு தாக்கல் செய்து அதிமுக பாமக சுயேட்சை கவுன்சிலர் மற்றும் ஒரு சில திமுக கவுன்சிலர்களிடம் குதிரை பேரம் பேசி வெற்றி பெற்றது தலைமைக்கு செய்த துரோகம் என்றும் இது சம்மந்தமாக மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் அவகளிடம் புகார் கொடுத்தும் சுபாரயனை அழைத்து எந்த ஒரு பேச்சு வார்த்தை நடத்தாதற்கு இரண்டு பேருக்கும் என்ன உடன் பாடு என்று தெரிய வில்லை. தற்போது சீர்காழி நகர செயலாளர் சுப்ராயன் தானே துணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டார் என்றும் தற்போது திமுக நகரச் செயலாளர், கவுன்சிலர், துணைத் தலைவர் என்று மூன்று பதவிகள் ஒரே நபர் வைத்துள்ளார் . திமுக கட்சியிலிருந்து மாதிமுக சென்றபோது திமுக கட்சியை இழிவு படுத்தி சுவரட்டி ஒட்டிட்டினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த குற்றச்சாட்டை திமுக தலைமைக் கழகத்தில் புகாராக அளித்து உள்ளேன் என்றும் அது சம்மந்தமாக கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று சாமிநாதன் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவாதா முருகன் தன்னைவிட மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு எந்த ஒரு முக்கியத் துவம் அளிப்பதில்லை என்றும் தன்னிடம் அடிமையாக இருப்பவர்களுக்கு மட்டும் முக்கியத் துவம் கொடுத்து வருகிறார் என்றும் இதனாலேயே
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும்
திமுக கட்சி மூத்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்து ஒதுங்கி கொண்டனர் என்பதுதான் உண்மையாக நடந்த சம்பவம்.


(இந்த தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர்மன்ற தேர்தலில் 14வது வார்டில் அதிமுக வேட்பாளர் அருணா, திமுக வேட்பாளர் சிவபிரியா, நாம் தமிழர் கட்சி நித்யா, பாமக மைவிழி, மக்கள் நீதி மய்யம் ரேகா, சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.

(இதில் சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி 250 வாக்குகள் பெற்று 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சிவபிரியா 249 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
திமுக வேட்பாளரை விட 1 வாக்கு வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் வென்றிருப்பது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் பெரும் பரபரப்பாகவும் பேசப்பட்டது.)

இதற்கு ஒரே ஒரு உதாரணம் பூம்புகார் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கட்சி சட்டமன்ற உறுப்பினர் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆனால் வெறும் 4000 வாக்குகள் மட்டுமே அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இதைதான் கட்சித்தலைமை சற்று உற்று நோக்கி பார்க்க வேண்டும் என்கின்றனர் கட்சி மூத்த உறுப்பினர்கள்.

எது எப்படியோ இதிலிருந்து பார்க்கும் போது மயலாடுதுறை மாவட்ட திமுக கட்சியில் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் மட்டுமே ஆதிக்கம் செய்து வருகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மையாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button