அரசியல்

கட்சியில் நிர்வாகத் திறன் இல்லாத மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர்!!!
கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கட்சி நிர்வாக திறன் இல்லாத ஒன்றிய செயலாளர்களை நியமிக்க முயற்சி!!
மயிலாடுதுறை மாவட்ட திமுக கட்சியை காப்பாற்ற திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா!?

கட்சியில் நிர்வாகத் திறன் இல்லாத மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன்!!!
கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நிர்வாக திறன் இல்லாத ஒன்றிய செயலாளர்களை நியமிக்க முயற்சி!!
மயிலாடுதுறை மாவட்ட திமுக கட்சியை காப்பாற்ற திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா!?

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் திமுக கட்சி ஒன்றிய செயலாளர்கள் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு ஆதரவான ஒன்றிய செயலாளர்களை மீண்டும் ஒன்றியச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்து வருகின்றனர்கள் என பல குற்றச்சாட்டுகள் திமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகளை அழைத்து கட்சி தலைமை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள் நியமனத்தில்
கட்சி நிர்வாகத் திறன் இல்லாத மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் நிர்வாக செயலற்ற ஒன்றிய செயலாளர்களை தன்வசம் வைத்துக் கொள்ள தற்போது முயற்சிப்பதாக தலைமைக் கழகத்திற்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திமுக நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.(1).சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் பிரபாகரன்.
இவரை எதிர்த்து அக்கினி அன்பு மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினராக உள்ள ராம இளங்கோவன் இரண்டு பேரும் ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதில் ராம இளங்கோவன் .இவர் முதலமைச்சர் உறவினர் ஒருவருக்கு நெருக்கமாக உள்ளவர். அப்படிப்பட்ட இவரையே ஒன்றிய செயலாளர் பதவிக்கு வரவிடாமல் பிரபாகரனையே மீண்டும் ஒன்றிய செயலாளர் பதவியில் தொடர முயற்சி செய்து வருகிறார் நிவேதா முருகன் என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

(2)சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் சசிகுமார் இருப்பவர் சசிகுமார். இவருக்கு எதிராக மங்கைமடம் நெடுஞ்செழியன் ஒன்றிய செயலாளர் பதவி கேட்டு போட்டியிடுகிறார். ஆனால் சசிகுமாருக்கு மீண்டும் ஒன்றைச் செயலாளர் பதவியில் தொடர பொறுப்பாளர் நிவேத முருகன் ஒரு பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு முயற்சி செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளராக இருப்பார் பி எம் அன்பழகன். இவரது தம்பி ஸ்ரீதர் மனைவி நந்தினி செம்பனார்கோவில் யூனியன் சேர்மன் ஆக உள்ளார் இந்த ஸ்ரீதர் தான் நிவேதா முருகனின் ஆல் இன் ஆல் என்கிறார்கள் அதனால் அன்பழகனையே மீண்டும் ஒன்றிய செயலாளராக பரிந்துரைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் அன்பழகனை எதிர்த்து மாவட்ட செயலாளராக இருக்கும் ஞானவேலன் நத்தம் வின்சென்ட் ஆகிய இரண்டு பேரும் ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டி போடுகின்றனர். இந்த தொகுதியில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர் ஆகையால் முறைப்படி தேர்தல் நடத்தினால் ஒன்றிய செயலாளராக வின்சென்ட் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதேபோல் செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனின் சொந்த ஒன்றியமாகும். அங்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு அப்துல் மாலிக் என்பவரை முன்னிறுத்துகிறார் அதேபோல் செம்பனார்கோயில் மத்திய ஒன்றியத்தில் திருக்கடையூர் அமிர்த விஜயகுமார் என்பவரை நிவேதா முருகன் பரிந்துரைத்துள்ளதாக தகவல்..விஜயகுமாரை ஒன்றிய செயலாளராக பரிந்துரை செய்வதற்கு காரணம் என்ன என்று களத்தில் விசாரித்தால் நமக்கு கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர். மாவட்ட பொறுப்பாளராக உள்ள நிவேதா முருகனின் குவாரிகளின் மொத்த நிர்வாகத்தையும் இந்த விஜயகுமார் தான் கண்காணித்து வருகிறார் என்றும் நிவேதா முருகனுக்கு நம்பிக்கையான வலது கை இடது கை எல்லாமே இவர்தான் என்கின்றனர். இந்த விஜயகுமார் யார் என்று விசாரித்தால் திமுக கட்சியில் இருந்து பாஜக கட்சிக்கு மாறி பாஜகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இப்படி இருக்கும் போது மாவட்டத்தில் ஒன்றிய செயலாளருக்கு முறையான தேர்தல் நடத்தினால் நிவேதா முருகன் பரிந்துரை செய்த யாரும் ஒன்றியச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்று தெரிந்துகொண்டு சென்னையில் முகாமிட்டு கட்சித் தலைமையில் இருப்பவர்களை சரிகட்டி பரிந்துரை செய்துள்ள அனைவரையும் ஒன்றிய செயலாளராக தலைமைக் கழகம் நேரடியாக அறிவிக்க வைத்து விட வேண்டும் என்று முயற்சியில் சென்னையில் முகாம் பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு 1/ 7 /2022 அன்று திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினரான சீர்காழி மேற்கு மேற்கு ஒன்றியத்தில் போட்டியிடும் ராம இளங்கோவன் மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகனின் கட்சி விரோத செயல்பாடுகள் பற்றி புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
கட்சியில் நிர்வாகத் திறன் இல்லாத திமுக மாவட்ட பொறுப்பாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்று நினைத்து இவரைப் போலவே நிர்வாகத் திறன் இல்லாத நபர்களுக்கு ஒன்றிய செயலாளர் பதவியை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எது எப்படியோ மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக கட்சி செல்லாக் காசாக ஆக்கவும் திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் கலங்கப்படுத்தும் வகையில் கட்சி விதிகளை மீறி செயல்பட்டு வருகிறார் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் என்று திமுக கட்சி மூத்த உறுப்பினர்கள் தொண்டர்களின் குமுறல்களை வெளிப்படுத்து வருகின்றனர்.
ஆகையால் திமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக கட்சியை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனிடமிருந்து காப்பாற்ற முடியும் என்பது தான் நிதர்சனம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button