கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் நூதன முறையில் திருடும் திருடர்கள் ஜாக்கிரதை!! காவல்துறையினர் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் கன்னியாகுமரி சுற்றுலா தளம்!கோமாவில் இருக்கும் சுற்றுலாத்துறை அதிகாரிகள்!? நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
திருமணமான தம்பதிகளுக்கு மாடலிங் போட்டோ எடுக்க வந்த புகைப்பட கலைஞரின் விலை உயர்ந்த கேமரா லென்ஸ்கள் நூதன முறையில் திருடி சென்ற திருடர்கள்!
சி சி டிவி கேமரா இல்லாததால் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் திருடர்களை தேடிக் கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு சிக்கல்!
உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில்
நவீன கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததாலும்,
சுற்றுலா தலத்திற்க்கென்று பிரத்தியேக
காவல் நிலையம் இல்லாததாலும்,
காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாத காரணங்களால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர்.
சுற்றுலாத்துறை அதிகாரி
கோமாவில் இருப்பதாலும்
வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களின் ,
உடமைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
உலக சுற்றுலா ஸ்தலங்களில் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக
கன்னியாகுமரி புகழ்பெற்று விளங்குகிறது.
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இருந்து அதிகாலையில்
சூரியன் கடலில் இருந்து உதித்துவரும் கண்கொள்ளா அற்புத காட்சியையும்,
மாலையில் கடலில் மறையும் அற்புத காட்சியையும் கண்டு ரசித்து மகிள வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம், உள்ளூர்களில் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அதுபோல் கடல்நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், ஐயன் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசிக்க படகு மூலம் தினசரி ஆயிரக்கணக்கான
சுற்றுலா பயணிகள் குமரிக்கு வருகை புரிகின்றனர்.
கோடைக்காலம், கார்த்திகை மாதம், பொங்கல், புத்தாண்டு தினம், மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதால், தங்கும் விடுதிகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன.
வியாபாரங்கள் படும் ஜோராக நடைபெறுகிறது.
இதனால் பேரூராட்சிக்கும், அரசுக்கும் கோடி, கோடியாய் வருமானம் கிடைக்கிறது.
ஆனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு
என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அங்கு வருகைதருபவர்களை
கண்காணிக்க
அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லாத சூழ்நிலைதான்
காவல்துறை சார்பில்
பிரத்யேகமாக போலீஸ் பாதுகாப்பு என்பது இல்லை,
ஆனால் சுற்றுலா பயணிகளிடம் எப்படி எல்லாம் வசூல் செய்ய முடியுமோ? அப்படி எல்லாம் வசூல் வேட்டை நடக்கிறது.
உடமைகளுக்கும்,
பாதுகாப்பிற்கும்
கேள்விக்குறியாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குமரிக்கு வர அச்சப்படுகின்றனர்.
சுற்றுலா பயணிகளை ஊக்கப்படுத்தும் அதிகாரி கோமாவில் இருப்பதாலும்,
காவல்துறையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாலும்,
சுற்றுலா பயணிகளிடம் இருந்து விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பதும்,
அதனை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல்
திணருவதும் வாடிக்கையாக உள்ளது.
தமிழக அரசு குமரியில் சுற்றுலா ஸ்தலங்களை மேன்மைப்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு
உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி
தர வேண்டும் என்பதே
சமூக ஆர்வலர்களின்
கோரிக்கையாக உள்ளது.
கோரிக்கை நிறைவேறுமா?
பொறுத்து இருந்து பார்ப்போம்