கமிஷனுக்காக மோசடி கும்பலிடம் பல லட்சம் பணத்தை இழந்த மதுரை T.வாடிப்பட்டி ஆன் லைன் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்கள் ! மோசடி கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுப்பாரா தென்மண்டல ஐ ஜி!?

குறைந்த பணம் அதிக கமிஷனுக்கு ஆசைப்பட்டு மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த மதுரை வாடிப்பட்டி ஆன் லைன் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்கள் !
சமூக வலைதளங்கள் நவீன உலகின் ஆதிக்க சக்தியாக மாறி வரும் வேளையில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் அவற்றின் பயனர்களை இலக்கு வைத்து பணம் பறிப்பதும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களாக மதுரை மாவட்டத்தில் ஆன்லைன் கம்ப்யூட்டர் சென்டர்களை குறிவைத்து பல லட்சம் ரூபாய் நூதன முறையில் மோசடி! சைபர் கிரைம் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்.
கூகுள் பே’ என்ற ஒரு வசதி வந்த பிறகு பணப் பரிவர்த்தனை சம்பந்தமான புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

ஒவ்வொரு நாளும் புதுவிதமான மோசடிகள், புதுவிதமான புகார்கள் என ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சைபர் க்ரைம் இல் தொடர்ந்து பணம் பறி கொடுத்தவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர். காவல்துறை எவ்வளவு தான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து ஆன்லைன் மோசடியில் ஏமாறு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஆன்லைனில் ஏமாறுபவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . வணிகர்களின் பேராசையால் மோசடி கும்பல் பணத்தை சுரண்டுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
தற்போது மதுரை மாவட்டத்தில் நூதன முறையில் ஒரு மோசடி கும்பல் மோசடியில் இறங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி வாடிப்பட்டி போன்ற நகர் பகுதிகளுக்கு ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு உள்ளது தற்போது அம்பலமாக மோசடியில் ஈடுபட்டு வரும் இந்த கும்பல் பல குழுக்களாக பிரிந்து பல நகரங்களில் உள்ள பல கம்ப்யூட்டர் ஆன்லைன் சென்டர்களுக்கு சென்று நூதன முறையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
எப்படி பணத்தை கொடுத்து ஏமாந்தார்கள் என்று இது சம்பந்தமாக களத்தில் இறங்கி விசாரித்த போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் குறைந்தது 10கம்ப்யூட்டர் ஆன்லைன் சென்டர்கள் இருக்கிறது. ஒரு சில கம்ப்யூட்டர் ஆன்லைன் சென்டரில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
அப்படி ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் கம்ப்யூட்டர் சென்டர்களை குறி வைத்து இந்த மோசடி கும்பல் தங்களுடைய கைவரிசையை காட்டியுள்ளது. எப்படி என்றால் மதுரை வாடிப்பட்டியில் ஐந்து பேர் கொண்ட கும்பல் தனித்தனியாக ஐந்து கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று நாங்கள் வட மாநிலத்திலிருந்து மதுரைக்கு வாகனத்தில் வரும்போது நான்கு வழிச்சாலையில் வாகனம் பழுதடைந்து விட்டதாகவும் வாகனத்தை சரி செய்ய சாமான்கள் வாங்க வேண்டும். அதற்காக வாகனத்தின் உரிமையாளர் 50,000 பணம் அனுப்புவார் என்றும் அந்தப் பணத்தில் நீங்கள் 5,000 கமிஷன் தொகையாக எடுத்துக் கொண்டு மீதி பணத்தை கொடுங்கள் என்றும் கூறியுள்ளார்கள் . இதை நம்பி கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் பணத்தை அனுப்ப சொல்லி G pay என்னை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் G pay க்கு சொன்னது போல் 50,000 பணம் வந்துள்ளது . அதன் பின்பு 45 ஆயிரம் பணத்தை அந்த நபரிடம் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கொடுத்துள்ளார். இதேபோல் வாடிப்பட்டியில் உள்ள ஐந்து இடங்களில் ஒரே நேரத்தில் பல லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கு சென்றார் எப்படி சென்றார் என்று தெரியாது. ஆனால் அரை மணி நேரத்தில் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் இருந்துள்ளார். இரு தினங்களுக்கு பின்பு ஆன்லைன் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளருக்கு போன் வந்துள்ளது. அந்தப் போனை எடுத்து பேசிய போது சைபர் கிரைம் காவல்துறையினர் பேசுவதாக கூறியுள்ளனர். அவர்கள் சொன்னதை கேட்ட ஆன்லைன் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் பதறிப் போய் இருந்துள்ளார். அப்படி என்ன சைபர் க்ரைம் காவல்துறையினர் கூறினார்கள் என்று கேட்டபோது பெங்களூரில் உள்ள ஒரு நபரின் வங்கி கணக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் உங்கள் வங்கிக் கணக்கில் அனுப்பி மோசடி செய்துள்ளதாகவும் அந்த நபர் பெங்களூர் சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே உங்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் உடனே மதுரை சைபர் கிளைம் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். இதில் என்ன வேதனை என்றால் 50 ஆயிரம் பணம் கொடுத்த நபர் மீது மோசடி செய்ததாக சைபர் கிரைம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது தான் வேடிக்கையாக உள்ளது. இந்த மோசடி கும்பல் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி திருமங்கலம் மேலூர் சமயநல்லூர் போன்ற இடங்களில் பல ஆன்லைன் கம்ப்யூட்டர் சென்டர்களில் பல லட்சம் ரூபாய் நூதன முறையில் மோசடி செய்து அரங்கேற்றி உள்ளது என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சைபர் கிரைம் அதிகாரிகள் பெங்களூர் சைபர் கிரைமில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் புகார் கொடுத்துள்ளதால் (அதாவது பெங்களூர் தலைமை இடமாக கொண்டு செயல்படும் மோசடி கும்பல்களின் தலைவன் ) கொடுத்த புகாரின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீங்கள் பணம் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஆகவே நீங்கள்தான் வேறொரு நபர் வங்கி கணக்கில் இருந்து 50,000 ரூபாய் உங்க வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளதாகவும் ஆகவே வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மதுரை சைபர் கிரைம் காவல்துறை சொல்லி இருக்கிறதாக தகவல் வெளிவந்துள்ளது!
எது எப்படியோ அறிமுகம் இல்லாத முகம் தெரியாத எந்த நபரிடமும் பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என பலமுறை சைபர் கிரைம் காவல்துறை எச்சரித்தும்
பேராசையால் ஒரு சில நபர்கள் இப்படி பணத்தை இழந்தது மட்டுமில்லாமல் அவர்கள் குற்றவாளியாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது தான் வேதனையாக உள்ளது. ஆகவே இனிமேலாவது பொதுமக்கள் அனைவரும் கவனமாக பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்பதுதான் சைபர் கிரைம் காவல்துறையின் எச்சரிக்கையாக இருக்கிறது.